Published:Updated:

உங்கள் விவசாயிகளை அறிந்துகொள்ளுங்கள்...

உங்கள் விவசாயிகளை அறிந்துகொள்ளுங்கள்...
உங்கள் விவசாயிகளை அறிந்துகொள்ளுங்கள்...

இன்று சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி.. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் “இயற்கை அங்காடிகள்” புற்றீசல்கள் போல் பரவியுள்ளன. சற்றேறக்குறைய அனைத்து இயற்கை அங்காடிகளும் விவசாயி அல்லாதோரால் மட்டுமே (ஒரு சில அங்காடிகள் தவிர) நடத்தப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு மாற்றாக, இயற்கை விவசாய விளைபொருட்களை தங்களது  விவசாயப் பண்ணைகளிலிருந்தே நேரடியாக அனைவரின் இல்லங்களுக்கும் தினசரி கொண்டுவந்து சேர்க்கிறது “காஞ்சி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு”.

உங்கள் விவசாயிகளை அறிந்துகொள்ளுங்கள்...

இளமையில் இருந்தே ஜெய்ஷங்கருக்கு விவசாயம் மேல் தீராத காதல்.  வேலைநாட்கள் போக, வார இறுதி நாட்களில் விவசாயிகளைப் பார்ப்பதும், அவர்களிடம் நேரடியாக விவசாயத்தைக் கற்பதும் மட்டுமே அவரது ஒரே பொழுதுபோக்கு. 1990களில், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஜெய்ஷங்கருக்கு அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாயப் பொருட்களை, நேரடியாக நுகர்வோரிடம், வாரம் ஒரு முறை கொண்டு சேர்க்கும் CSA (Community Supported Agriculture) எனப்படும் விற்பனை முறை ஆச்சரியளித்தது. அத்தகைய விற்பனை முறையை நாம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி, விவசாயிகளையும், நுகர்வோரையும் ஏன் ஒருங்கிணைக்கக் கூடாது என்று தோன்ற, வருட விடுமுறையில் 1994ம் ஆண்டு இந்தியா வந்த ஜெய்ஷங்கர், தனது சகோதரர்கள் கொடுத்த ஊக்கத்தினால், தனது அமெரிக்க வேலையை துறந்து, ஓசூரில் தனது பசுமைப் பண்ணையை ஆரம்பித்து இரண்டாண்டு காலம் நடத்தி வந்தார்.  ஒரு சில காரணங்களால், அவரால் அந்த பண்ணைகளை மேற்கொண்டு நடத்த முடியாமல் திரும்பவும் IT பணிக்கே திரும்ப வேண்டிய சூழல். ஆனாலும், அவரது ஆர்வம், அவரை அதிக நாள் வேலை பார்க்க விடவில்லை.. 2011ல், மீண்டும் இந்தியா திரும்பி, தனது மனைவி ஷாமளா ஜெய்ஷங்கருடன் இணைந்து, தொடங்கியதுதான் “காஞ்சி ஆர்கானிக் பார்ம்ஸ் (Kanchi Organic Farms)” மற்றும் “காஞ்சி ஈக்கோ வில்லேஜ் (Kanchi Eco Village)”.

உங்கள் விவசாயிகளை அறிந்துகொள்ளுங்கள்...

2012 முதல் “காஞ்சி ஆர்கானிக் பார்ம்ஸ்” தங்களின் பண்ணையில் விளைந்த காய்கறிகளை நேரடியாக தங்களது பகுதியில் உள்ள நுகர்வோர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தது. ஆனாலும், ஒரே விதமான காய்கறிகளை மக்கள் வாங்க விரும்பாததால், அனைத்து விதமான காய்கறிகளையும் தரும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் “காஞ்சி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு (KANCHI Organic Farmers Consortium)”. இன்றைக்கு இந்தக் கூட்டமைப்பில் தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த, சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் 60க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து வழங்கிவருகின்றனர். அனைத்து விவசாயிகள் மற்றும் அவர்களது இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் “காஞ்சி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு (KANCHI Organic Farmers Consortium)” தனது நேரடி கண்காணிப்பில் வைத்து செயல்படுத்திவருகிறது.

2016-ஆம் ஆண்டுமுதல், 15 வருடம் லண்டனில் பணிபுரிந்து இந்தியாவிற்கு திரும்பிய தனது நண்பர் சத்தீஷ் குமாருடன் இணைந்து இந்தச் சேவையை இன்னும் அதிக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார் ஜெய்ஷங்கர். தோட்டக்கலையில் பட்டயப் படிப்பு B.Tech (Horticulture) மற்றும் ஜெர்மனியில் இயற்கை வழி விவசாயத்தில் மேற்படிப்பும் – MS (Organic Farming) முடித்துள்ள ஐஸ்வர்யா ஜெய்ஷங்கர், தனது தந்தைக்கு உதவியாக விவசாயத் தொழில்நுட்பம் சம்பந்தமான பணிகளை கவனித்துக்கொள்கிறார்.

"உற்பத்திக்கேற்ற சந்தை என்பதை மாற்றி, சந்தைகேற்ற உற்பத்தியே எங்களது காஞ்சி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நோக்கம்", என்கிறார் ஜெய்ஷங்கர். "மாறிவரும் சந்தைக்கேற்பவும் எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதற்கேற்றார்போல் எங்களது உற்பத்தி திட்டமிடப்படுகிறது. தினமும் அதிகாலையில் எங்களது வாகனம், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சேகரித்து, அன்று மாலைக்குள், எங்களது பண்ணைக்கு கொண்டு வந்து சேர்த்து,  தரம் பிரிக்கப்படுகிறது.  பின்னர் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனித்தனி பெட்டிகளில்  போடப்படுகிறது.  அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்குள் எங்களது வாகனம் சென்னை வந்தடையும். பின்னர், வேன்கள் மற்றும் பைக்குகள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அறுவடை செய்த 24  மணி நேரத்திற்குள் டெலிவரி செய்கிறோம். 

உங்கள் விவசாயிகளை அறிந்துகொள்ளுங்கள்...

இத்தகைய விற்பனை முறை மூலமாக எங்கள் விளைபொருட்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளையும் நுகர்வோரையும் ஒரே புள்ளியில் ஒருங்கிணைப்பதால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது.

"நாம் உண்ணும் உணவு யாரிடம் இருந்துவருகிறது என அறிந்துகொள்வதே, தரமான உணவுப்பொருள்களை வாங்க ஒரே வழி. நம் விவசாயிகளை நாம் அறிந்துகொள்வது முக்கியம்!", என்பதே ஜெய்ஷங்கர் கூறும் செய்தி. ஆர்கானிக் உணவு மற்றும் இயற்கை விவசாயம் பற்றி நேரடியாக தெரிந்துகொள்ளவும் பசுமையான சூழலில் தற்சார்பு வாழ்க்கை முறையைப் பின்பற்றி கட்டமைக்கப்படும் “Kanchi Eco Village”, மற்றும் “KANCHI Retirement Homes”, பற்றி அறிந்து கொள்ள ஒருமுறை காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள எங்களது பண்ணைக்கு வருகை தாருங்கள் என அழைக்கிறார் ஜெய்ஷங்கர்...

இயற்கை காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கும், இயற்கை விவசாய முறையைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், விகடன் வாசகர்களுக்கு சிறப்புச் சலுகை, 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது காஞ்சி ஆர்கானிக் பார்மஸ்.

சிறப்பு சலுகையை பெற  கீழே படிவத்தை பூர்த்தி செய்க...

விவரங்களைப் பெற