Published:Updated:

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!
இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

இந்த இதழ்  பசுமை விகடன் படிக்க க்ளிக் செய்க...: https://bit.ly/2ErsCyI

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

``விவசாயம் செய்றது ரொம்பக் கஷ்டம்னு பலபேரு சொல்றாங்க. ஆனா, எங்களைப் பொறுத்தவரை விவசாயம் ரொம்ப சுலபமானது. அடிப்படையை சரியாகப் புரிஞ்சுகிட்டு, மண்ணோடு பேசி, பயிரோடு பழகி, இயற்கையை இம்சிக்காம இருந்தாலே போதும். விவசாயத்துல ஜெயிச்சிடலாம். இதுல நாம தேர்வு செய்ற பயிர், சாகுபடி முறைகளும் சரியாக இருக்கணும்ங்கிறது முக்கியம். இது எல்லாம் சரியா இருந்தா, எந்தத் தடைகளும் நம்மை நஷ்டப்படுத்த முடியாது. தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே வெச்சு, 40 சென்ட் இடத்துல நல்லா சம்பாதிக்கிறோம்" நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டம், தவசிமடைப் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து. - சம்பங்கிச் சாகுபடி மூலமாக, `பசுமை விகடன்' வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான் மருதமுத்து-வாசுகி தம்பதி. இப்போது அவர்கள் பந்தல் சாகுபடி அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் 'மகசூல்: 40 சென்ட் நிலத்தில் ரூ.90,000 - பலமான வருமானம் தரும் பந்தல் சாகுபடி!' எனும் கவர் ஸ்டோரி மூலம் பகிர்கிறார்கள்.

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

``ஆடி மாசம் மழை பெய்ய ஆரம்பிச்சதும், மண்ணுக்குள்ள இருக்குற கிழங்குகள்ல இருந்து அதலக்கக்காய் கொடிகள் முளைச்சுப் படர ஆரம்பிக்கும். மார்கழி மாசம் காய்ப்பு முடிஞ்சுடும். காய்ப்பு முடிஞ்சதும் செடிகள் அப்படியே சுருங்கிடும். ஆனா, மண்ணுக்குள்ள இருக்குற கிழங்கு அப்படியே இருக்கும். ஆடியில திரும்பவும் ஒரு மழை கிடைச்சதும் முளைப்பு எடுக்க ஆரம்பிச்சுடும். இதுதான் அதலக்காயோட அற்புதம்..." - அதலைக்காய்ச் சாகுபடி செய்யும் முறை குறித்துச் சாத்தாவு கூறிய தகவல்கள் பாடமாகக் கிடைக்கிறது 'அதலைக்காய்... கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம்! - அரை ஏக்கர்... 3 மாதங்கள்... ரூ. 35,000 லாபம்!' எனும் மகசூல் பகுதியில்.

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

``ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்துனா... என்னோட 25 ஏக்கர் தென்னைக்கும், 5 ஏக்கர் வாழைக்கும் இன்றைய விலை நிலவரத்துக்கு, வருஷத்துக்கு 9 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனா, இயற்கை விவசாயத்துல இடுபொருள்கள், பூச்சிவிரட்டிக்கு 2 லட்சம் ரூபாய்தான் செலவாகுது. அதே சமயத்துல ரசாயன விவசாயத்துல கிடைச்ச மகசூலைவிடக் கொஞ்சம் கூடுதலாத்தான் மகசூல் கிடைக்குது..." - முன்னோடி விவசாயி கதிரேசன் 'வேஸ்ட் டீகம்போஸர்' பலன் குறித்த 'அங்கக விவசாயிகளின் அமுதசுரபி!' எனும் இயற்கை விவசாயம் சார்ந்த கட்டுரையையும், அதன் வழிகாட்டுதல்களையும் தவறவிடாதீர்கள். 

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

இந்த இதழ்  பசுமை விகடன் படிக்க க்ளிக் செய்க...: https://bit.ly/2ErsCyI

இயற்கை விவசாயத்துல சில விஷயங்களைக் கடைப்பிடிச்சா அதுல கண்டிப்பா நஷ்டம் வர வாய்ப்பேயில்லை. அதனாலதான் பேராசிரியர் வேலை செஞ்சுக்கிட்டே வெற்றிகரமா விவசாயத்தையும் செய்ய முடியுது. என்னோட வெற்றிக்குக் காரணம், நாட்டுமாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஊடுபயிர் சாகுபடி, மதிப்புக்கூட்டல் எல்லாத்தையும் கடைப்பிடிக்கிறதுதான்" என்ற சம்பத்குமார், தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே ஜீவாமிர்தப் பயன்பாடு குறித்துப் பேச ஆரம்பித்தார். அவரது அனுபவப் பகிர்வு, நமக்கும் ஒரு வேளாண் பாடமாகத் தருகிறது 'ஆண்டுக்கு ரூ.10 லட்சம் லாபம்... ஜீரோ பட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை!' எனும் வழிகாட்டும் கட்டுரை.

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

``சின்ன வயசிலேயே கரடி தாக்கி முகம் சிதைந்த நிலையிலும், தனக்கு ஒன்று இப்படி நிகழ்ந்துவிட்டதே என்று கண்கலங்கி ஓரமா ஒக்காராம, ஓடியாடி பல இடங்களுக்குப் போயி விவசாயத்த கத்துகிட்டு, மத்தவங்களுக்கும் சொல்லி கொடுத்துகிட்டு, இன்னைக்குக் கௌரவமான இயற்கை விவசாயியா நிமிர்ந்து நிக்கறாங்க சித்தம்மா. இவங்கதான் உண்மையான அழகி... அழகு தேவதை... இவங்களதான் நாம கொண்டாடணும்." - நடிகை விஜி சந்திரசேகர் கொண்டாடிய சித்தம்மாவைப் பற்றியும் அவரது இயற்கை வேளாண் முறை பற்றியும் விவரிக்கிறது 'இயற்கை கொடுத்த விருது!' எனும் செய்திக் கட்டுரை.

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

விவசாயம் பொய்த்துப்போகும் சூழ்நிலைகளில் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். ஆடு, மாடு, கோழி... எனப்பல கால்நடைகள் இருந்தாலும், குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் தருபவை நாட்டுக்கோழிகள். அதனால்தான் விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில், நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல லாபம் எடுத்து வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். - `130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்!' எனும் தலைப்பிலான அவரது அனுபவப் பகிர்வு, கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்கு அவசியமானது. 

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

``கஜா புயலால் 2,20,255 ஏக்கர் பாதிப்புனு தமிழக அரசு சொல்லுது. இதுவும் பொய்யான தகவல். பெரும்பாலான ஊர்கள்ல கணக்கெடுப்பே நடத்தலை. எப்படிப்பார்த்தாலும் 5 லட்சம் ஏக்கருக்கு மேல பாதிப்டைஞ்சுருக்கும். அதையும் வேணும்னே மறைக்கிறாங்க..." - `இழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி!' செய்திக் கட்டுரை நமக்கு சொல்லும் சேதி சிந்திக்கத்தக்கது.

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

பழைய மரம் இருந்த இடத்திலிருந்து ஆறு அடி தள்ளித்தான் புதிய கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பழைய மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டியதில்லை. அவை காலப்போக்கில் தானாகவே மட்கிவிடும்... - வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர் கார்த்திகேயன் தென்னை விவசாயிகளுக்குச் சில முக்கிய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார். அதை `கஜா தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?' எனும் வழிகாட்டும் கட்டுரையில் வாசிக்கத் தவறாதீர்கள். 

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

போன வருஷம் நாட்டிலேயே முதல்முறையாக மீத்தேன் எரிவாயுல இயங்கும் பேருந்துகள் கொல்கத்தா நகர்ல ஓட ஆரம்பிச்சிருக்கு. இந்தப் பேருந்துல ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய்தான் பயணக்கட்டணம். எப்படியோ இன்னும் கொஞ்சம் காலத்துல, உலகத்துல உள்ள எண்ணெய் கிணறுகள் வற்றி, வறண்டு போயிடும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க. அப்புறம், மீத்தேன் வாயு கொடுக்கிற மாடுகளுக்குத்தான், மீண்டும் மரியாதை கிடைக்கும்... எப்படி? - `பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!' என்று மண்புழு மன்னாரு தெளிவாகவும் எளிதாகவும் விளக்குகிறார்.

இயற்கை விவசாய மகசூல்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 10 பகுதிகள்!

உருண்டை வெல்லத்தை 20 எண்ணிக்கையில் ஒரு பாக்ஸில் போட்டு 10 கிலோ பாக்ஸ்களாக அனுப்பலாம். வெல்லம், அடர்ந்த மற்றும் லேசான தங்க நிறத்தில் இருக்க வேண்டும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் வெல்லத்தை அதிகளவில் இறக்குமதி செய்கிறது...

ஒரு கிலோ நிலக்கடலை, நம் ஊரில் அதிகபட்சம் 60 -110 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யும்போது, ஒரு கிலோ 90 -130 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்... - வெல்லத்தையும் நிலக்கடலையையும் ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது 'அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்!' தொடர் பகுதி. 

இந்த வார பசுமை  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2PwLJbK