மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு தர நிர்ணய சட்டப்படி... ‘மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து ‘அங்கக வேளாண்மைச் சான்றிதழ்’ (ஆர்கானிக் சர்டிபிகேட்) பெற்றுள்ளவர்கள் மட்டுமே இந்தியாவில் இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும்’ என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது, மத்திய அரசு. இச்சான்றிதழ் இல்லாத இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, தற்போது நடைமுறையிலுள்ள ‘இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ வழங்கக்கூடிய அங்ககச் சான்றிதழ் இனி செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு இயற்கை விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னோடி இயற்கை விவசாயி ‘தேனாம்படுகை’ பாஸ்கரன், “இயற்கை விவசாய விளைபொருள்களுக்குத் தற்போது உருவாகியுள்ள சந்தை வாய்ப்புகளை முழுமையாக அபகரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன. இதற்கு மத்திய அரசு நேரடியாகவே துணைபோகத் துணிந்துவிட்டது. ரசாயனத்தால் விளைவிக்கப்பட்ட பொருள்களை ‘ஆர்கானிக்’ எனச் சொல்லி ஏமாற்றி விற்பனை செய்வதைத் தடுக்க முயற்சி எடுப்பது நல்லதுதான் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையான இயற்கை விவசாயிகளைத்தான் பெரிதும் பாதிக்கும். ரசாயன நஞ்சு இல்லாத உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கமுடையவர்கள்தான், பெரும்பாலும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கண்காணிப்புகளின் அடிப்படையில் இதற்கான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். உண்மையான இயற்கை விவசாயப் பொருள்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவில் உள்ள 14 தொண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இந்திய இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலமாக இயற்கை விவசாயக் குழுக்களுக்கு இயற்கை வேளாண் சான்று வழங்கி வருகிறார்கள். இந்தச் சான்றை வழங்க, ‘பங்கேற்பாளர் உத்தரவாத முறை’ (PGS- Particpatory Guarantee Systems) கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை இது. பல நாடுகளில் இந்த முறையில், இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்தச் சான்றுக்கு விவசாயிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எந்த ஒரு ஆவணமும் தர வேண்டியதில்லை. இது மிகவும் எளிமையானதாக இருப்பதால் பெரும்பாலான இயற்கை விவசாயிகள் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பிடம் அங்ககச் சான்று வாங்குவதைத்தான் விரும்புகிறார்கள். இதன் மூலம் குறைந்த அளவு நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள், மலைவாழ் மக்கள் போன்றோர் அதிகப்பயன் அடைந்து வருகின்றனர். இதை ஒழித்துக்கட்டத்தான் மத்திய அரசு தற்போது தீவிரம் காட்டுகிறது.

இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பிடம் அங்ககச் சான்று பெற்றுள்ள என்னைப் போன்ற ஏராளமான விவசாயிகள் புதிய அறிவிப்பினால் பாதிக்கப்படுவார்கள். நாங்கள் அரசு நிறுவனத்திடம் புதிதாக விண்ணப்பித்து மீண்டும் அங்ககச் சான்று வாங்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் அரசு அதிகாரிகளை எதிர்கொண்டு சான்று வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதனால், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

இவ்விவகாரம் குறித்து, தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் இயக்குநர் மதியழகனிடம் பேசினோம். “போலிகளைத் தடுக்கவே விளைபொருள்களுக்கு இந்தச் சான்று அவசியம் என்ற விதிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆனால், மத்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. இந்தியாவில் 10 அரசு நிறுவனங்கள், 18 தனியார் நிறுவனங்கள் தற்போது இந்தச் சான்றிதழ் வழங்கும் பணிகளைச் செய்து வருகிறது” என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “இதுகுறித்து விசாரித்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.

இயற்கை விளைபொருள்களை எளிதாக விற்க விடிவு பிறந்தால் சரி...

கு.ராமகிருஷ்ணன்