Published:Updated:

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!
பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

இந்த இதழ் பசுமை விகடன்: https://bit.ly/2CgQmlX

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

காங்கேயம், உம்பளச்சேரி, புலிகுளம், பர்கூர்... எனப்பல நாட்டு மாடு இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் 'ஆலம்பாடி' இன நாட்டு மாடுகள். இவை, தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், ஒகேனக்கல் மலைப்பகுதிகள் தொடங்கி... கர்நாடக மாநிலத்தின் எல்லையில் உள்ள ஆலம்பாடி, கோபிநத்தம், செங்கப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளிலும், சேலம் மாவட்டத்தின் கோவிந்தவாடி, கொளத்தூர் ஆகிய வனப் பகுதிகளிலும் இயற்கையாகவே வாழ்ந்து வருகின்றன...

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

வனங்களை ஒட்டிய பல கிராமங்களில் பட்டி அமைத்து ஆலம்பாடி மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அப்படி பட்டி அமைத்து மாடுகள் வளர்க்கப்படும் பகுதிகளில் முக்கியமானது, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி. இப்பகுதியில் அடர்ந்த வனங்கள் இருப்பதால், நாட்டு மாடு வளர்ப்பு இன்னும் உயிர்ப்போடு இருந்து வருகிறது. `பசுமை விகடன்' பொங்கல் சிறப்பிதழுக்காக... ஆலம்பாடி மாடுகளை வளர்த்து வருபவர்களைச் சந்திக்கப் பென்னாகரம் பகுதியில் வலம் வந்தது நிருபர் குழு. 'ஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்!' எனும் சிறப்புக் கட்டுரை பதிந்துள்ள தகவல்கள் மிக முக்கியமானவை.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

ஆலைக்கரும்பு மாதிரி பணத்துக்காக வருஷக்கணக்கா காத்திருக்கத் தேவையில்லை. செங்கரும்பு அறுவடைக்கு ஒரு மாசம் முன்னாடியே வியாபாரிங்க ஊருக்கு வந்திடுவாங்க. சில வியாபாரிங்க உருட்டு கான்ட்ராக்ட்டா விலை பேசிக்குவாங்க. வயல்ல இருக்குற கரும்புகளைக் கண்ணால குத்துமதிப்பா அளந்து... 'இத்தனை வண்டி கரும்பு வரும், இவ்வளவு ரேட்'னு விலை பேசி அட்வான்ஸ் கொடுத்துடுவாங்க...

``ஒரு வண்டி கரும்புக்கு போன வருஷம் நாலாயிரம் ரூபாய்ல இருந்து நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை விலை கிடைச்சது. இந்த வருஷம் ஒரு வண்டி ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விலை பேசியிருக்காங்க. ஒரு ஏக்கர்ல இருந்து சராசரியா 60 வண்டினாலும், ஒரு வண்டிக்குக் குறைஞ்சபட்சமா 4,500 ரூபாய்னும் கணக்குப் பண்ணினா... ஒரு ஏக்கர் கரும்பு மூலமா, 2,70,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்...

- தனியாமங்கலம் கிராமத்தின் 'முன்னோடி கரும்பு விவசாயி' குமார் ஒரு ஏக்கர் வயலில் செங்கரும்புச் சாகுபடி செய்யும் முறை குறித்து விவரித்ததுடன், 1 ஏக்கரில் 9 மாதங்களில் ரூ.1,50,000 லாபம் ஈட்டத்தக்க 'தித்திப்பான வருமானம் தரும் செங்கரும்பு' என அனுபவபூர்வ வழிகாட்டுதலையும் தருகிறார். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

பல குழந்தைகளின் உயிரிழப்பு, நிரந்தர நோயாளிகள், பல ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வரும் சுகாதாரக்கேடு... எனப்பல பாதிப்புகள் ஏற்பட்ட பிறகும், ஒரு பூச்சிகொல்லியைத் தடை செய்யவே இந்தியாவில் பல ஆண்டுகள் போராட வேண்டி இருக்கிறது...

இந்தியாவிலும் தேனீக்களின் அழிவால் ஏற்படும் பிரச்னைகள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன. தேனீக்கள் வருகையின் வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட மந்தமான மகரந்தச் சேர்க்கையால் காஷ்மீர் பகுதியில் ஆப்பிள் விளைச்சல் கணிசமாகக் குறைத்துள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுகு விளைச்சல் குறைந்துள்ளது. பூச்சிகளின் அழிவு, விவசாயப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என்பது வட இந்திய விவசாயிகளுக்குத் தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. நம் நாட்டிலும் லட்சக்கணக்கான பறவைகள், வெளவால்கள், பூச்சிகள் மற்றும் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் ஏராளமான உயிரினங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள், இந்தியாவில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முக்கியக் காய்கறிப் பயிர்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. மொத்தத்தில் 70 சதவிகிதப் பயிர்கள் இவற்றை நம்பியே உள்ளன...

- கடந்த சில ஆண்டுகளாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பூச்சிகளின் அழிவு, தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கும் சூழலில், 'பூச்சிகளைக் காப்போம்; பூச்சிக்கொல்லிகளை ஒழிப்போம்! - விளைச்சலைக் கூட்டும் தேனீக்கள்...' எனும் ஆழமான பார்வை கொண்ட சுற்றுச்சூழல் கட்டுரை நாம் ஒவ்வொருவரும் வாசிக்கத்தக்கது. 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

நான், இயற்கை முறையில் சாகுபடி செஞ்சுமேகூட வாழைக்குச் சரியான விலை கிடைக்கலை. குறிப்பா இந்தப்பக்கம் மாம்பழ சீசன் ஆரம்பிச்சுட்டா வாழைச் சாகுபடி சுத்தமா அடி வாங்கிடும். பழத்துக்கு விலையே கிடைக்காது. அதனாலதான் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்னு முடிவு செஞ்சேன். மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வாழைக்காய் பவுடர் தயாரிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டு அதைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல விற்பனை செய்ய திண்டாடினாலும், போகப்போக விற்பனை வாய்ப்பு அதிகமாச்சு. அதனால, அடுத்தகட்டத்துக்குப் போகலாம்னு முடிவு செஞ்சு... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல வாழைப்பழ சாக்லெட் தயாரிக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டு அதுல இறங்கினேன். கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் வணிக மேம்பாட்டு இயக்கத்தில் உறுப்பினராவும் சேர்ந்துருக்கேன்..." 

-  வாழை மதிப்புக்கூட்டல் குறித்து விரிவாகச் சொல்லும் ஜெகதீசன் உரிய வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். `வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!' எனும் அவரது அனுபவப் பகிர்வு அடங்கிய செய்திக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

`இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு காரணமாக... கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து ஐந்து இலக்கங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பல இளைஞர்கள் வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் கால் பதித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் மணி அரசு.

இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் கார்த்திக் மணி அரசு, சுற்று வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து... 'மாதம் ஒரு மாலைப்பொழுது' என்ற பெயரில் மாதந்தோறும் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி இயற்கை குறித்துப் பரப்புரை செய்து வருகிறார். 'நம்மாழ்வாரின் நம்ம சந்தை'ங்கிற பேர்ல முழுக்க முழுக்கப் பண்டமாற்று அடிப்படையில இயங்குற ஒரு சந்தையை உருவாக்கணும்னு ஆசை எனும் கார்த்திக் மணி குறித்தும், அவரது இயற்கை விவசாய முறை குறித்தும் பகிர்கிறது `மேட்டுப்பாத்தி... சாண எரிவாயு... வயல்வெளிப் பள்ளி.. தன்னம்பிக்கை தரும் `தன்னிறைக் காணி!'' எனும் செய்திக் கட்டுரை.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

``இங்க பூச்சிகளுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இயற்கை முறையில நன்மை செய்யும் பூச்சிகளால செடிகள் பாதுகாப்பா இருக்கு. நான் வேலைக்குப் போய்க்கிட்டுருக்கிறதால தினமும் காலையில ஒருமணிநேரம் மட்டும்தான் பராமரிப்பு வேலைகளைச் செய்வேன். லீவு நாள்கள்ல குடும்பத்தோடு சேர்ந்து வேலைகளைச் செய்வோம்... இயற்கையில விளையுற காய்களோட சுவையையும் நல்லா உணர முடியுது. என் குடும்பமே இப்போ ஆரோக்கியமா இருக்கு. மாடித்தோட்டத்துல வேலை செய்றதால தனியா உடற்பயிற்சியும் தேவையில்லை. மனச்சோர்வும் சரியாயிடும்..."

- மாடித்தோட்டம் அமைத்து மிகச் சிறப்பாக பராமரித்து வரும் சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த பத்மபிரியா தன் அனுபவங்களுடன் முக்கியமான சில வழிகாட்டுதலையும் 'மாடித்தோட்டம்... தண்ணீர் கவனம்!' எனும் கட்டுரையில் முன்வைத்திருக்கிறார். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

மிளகாயை அஃப்லடாக்ஸின் (Aflatoxin) பரிசோதனை, ஏற்றுமதிக்கு ஏற்ற தரப் பரிசோதனை (பிட் ஃபார் எக்ஸ்போர்ட்) ஆகியவற்றைச் செய்து ஒரு பைக்கு 10 கிலோ என்ற அளவில் சணல் சாக்குப் பைகளில் அடைத்துத்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். மிளகாய்ப்பொடிக்கு அஃப்லடாக்சின், நிறம் ஆகிய பரிசோதனைகள் அவசியம்.

ஒரு கிலோ மிளகாய் 110-125 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. மிளகாய் ஏற்றுமதி செய்பவர்கள், இந்திய நறுமணப்பொருள்கள் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் அவசியம். ஒரு 20 அடி கன்டெய்னருக்கு 5 டன்னிலிருந்து 6 டன் வரை மிளகாய் ஏற்றலாம். ஒரு கன்டெய்னரின் மதிப்பு 6.5 லிருந்து 7 லட்சம் ரூபாய் ஆகும். மிளகாய் ஏற்றுமதி செய்தால், எம்.இ.ஐ.எஸ் மூலம் 5% மானியம் கிடைக்கும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் மிளகாய்க்கு அதிகத்தேவை உள்ளது. 

- மிளகாய் + சிறுதானியங்களுக்குக் கூடும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவாக எடுத்துரைப்பதுடன், ஏற்றுமதியை ஒட்டிய முழுமையான வழிகாட்டுதலையும் வழங்குகிறது `அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்!' தொடர் பகுதி.

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

தற்சார்பு விவசாயிகள் பலரும் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மஞ்சள், கரும்பு, அரிசி போன்ற விளைபொருள்களைத் தங்களது தோட்டத்திலேயே உற்பத்தி செய்துகொள்கிறார்கள். அந்த வகையில், பொங்கலுக்குத் தேவையான விளைபொருள்களோடு அரசாணிக்காயையும் தனது தோட்டத்தில் விளைவித்துச் சிறப்பாகப் பொங்கல் கொண்டாடி வருகிறார், ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன்... - பானைக்குப் பாரம்பர்ய அரிசி... படையலுக்கு அரசாணிக்காய்! - அவர் சொல்லும் 'ஜீரோ பட்ஜெட் பொங்கல்!' குறித்த வழிமுறைகளை கவனிக்கத் தவறாதீர்கள். 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

``கடந்த மூணு வருஷமா இயற்கை விவசாயம் பண்ணிட்டு வர்றேன். விளை நிலங்களுக்கு உயிரே, இயற்கையாக நமக்கு கிடைக்கிற நாட்டு மாட்டுச் சாணம்தான். இந்த நாட்டு மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் மட்டுமே மூலப்பொருளா வெச்சு அலங்கார தாம்பூல தட்டு, கோயில், மாவிலை தோரணம், பென் ஸ்டாண்டு உள்ளிட்ட எண்பதுக்கும் மேற்பட்ட கலையழகுப் பொருள்களைச் செஞ்சிருக்கேன். அது மட்டுமில்லாம சாணம், கோமியம், முல்தானி மட்டி, சந்தனப்பொடினு சேர்த்து இயற்கை முறையில் குளியல் சோப்பு, அழகுச்சாதன பொருள்களையும் செஞ்சிட்டு வர்றேன்..."

- நாட்டு மாட்டுச் சாணத்தில், புதுமையான முறையில் கலைப்பொருள்கள் செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார் மதுரை அடுத்த செல்லூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி, கணேசன். பொங்கல் சிறப்பிதழை ஒட்டிய அவருடனான சந்திப்பு கவனிக்கத்தக்கது. 

பொங்கல் சிறப்பிதழ்: 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 கட்டுரைகள்!

ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக  வளர்க்கப்படும் காளைகள், பலரது வீடுகளில் பெற்ற பிள்ளைகளாகவே பாவிக்கப்படுகின்றன. அவற்றில் உயிரிழந்த காளைகளுக்குக் கல்லறைகள், நினைவிடம், கோயில்கள், மணிமண்டபம் என அமைத்து வணங்கி வருகிறார்கள். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில், ஆரப்பாளையம் பகுதியில் 8,00,000 ரூபாய் செலவில்... ஜல்லிக்கட்டு மாட்டினை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டுள்ளது...

இலங்கை கிழக்கு மாகாணப் பகுதியிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், வந்தாறுமூலை எனும் கிராமத்தில் உள்ள அம்பலத்தடி சந்திப்பகுதியில்... 'வந்தாறுமூலை மேற்கு கிராம மக்கள் அபிவிருத்தி சங்கம்' மற்றும் 'வந்தாறுமூலை டைமண்ட் விளையாட்டுக் கழகம்' ஆகியவற்றின் சார்பில் ஆறு அடி உயரத்தில் உழவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது...

- 'பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுச் சிலைகள்!' எனும் செய்திக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள இருவேறு தகவல்களுமே கவனத்தை ஈர்க்கவல்லது.

இந்த வார பசுமை விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2AFiGOK

பின் செல்ல