கடந்த ஜூன் மாதம், சீன நாட்டில் நடந்த சர்வதேச மண்புழு மாநாட்டில் கலந்துகொண்டார், ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில். தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம், சீனாவிலுள்ள தொழில் நிறுவனங்களின் அழைப்பின்பேரில், அந்நாட்டின் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பயணத்துக்குப் பிறகு, சீன நாட்டில் மண்புழு சார்ந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மையில் மண்புழுக்களின் பயன்பாடு... போன்ற விஷயங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“இந்தியாவைப் போலவே, சீனாவிலும் அரசாங்கத்தின் துணையுடன் ரசாயன விவசாயம்தான் அதிகம் முன்னெடுக்கப்படுகிறது. இருந்தாலும், அங்கு மண்புழு வளர்ப்பு, மிகப்பெரிய அளவில் தனித்த தொழில்துறையாக (Earthworm Industry) உருவெடுத்திருக்கிறது.

மண்புழுத் தொழிற்சாலைகளின் மூலம், இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு அங்கே பரவி வருகிறது. இயற்கை முறையில் வேளாண் உற்பத்தியும், மண் மேலாண்மையும் அங்கே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த மாநாட்டுக்குப் பிறகு, டாக்டர் யூபிங் ஃபா (Dr.Yueping Fa)-வின் வேண்டுகோளுக்கிணங்க, அவரின் ‘டாக்டர் ஃபா மண்புழு தரப்படுத்துதல் ஆய்வு மைய’த்துக்குச் சென்றிருந்தேன்.

அங்கே மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு மூலம் உருவாக்கப்படும் பொருள்கள் குறித்த ஆய்வும், உற்பத்தியும் நடக்கின்றன. அடுத்ததாக, ஃபாவின் ‘மண்புழு உயிர்ச்சூழல் வேளாண்மை காட்சிப் பண்ணை’க்குச் சென்றேன். கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பண்ணையில், பல பசுமை இல்லங்கள் இருந்தன. அந்தப் பசுமை இல்லங்களில், மண்புழு வளர்ப்பும் காய்கறிச் சாகுபடியும் நடக்கின்றன. மேலும், இந்தப் பசுமை இல்லங்களில், ‘மண்புழுப் புரத நொதிகள்’ (EEP-Earthworm Enzymatic Peptides) எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி உருவாக்கப்படுகிறது.

அந்தப் பசுமை இல்லங்கள், மிகப் பெரியளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஏறத்தாழ 100 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்டவை. ஒவ்வொரு பசுமை இல்லத்திலும், ஓர் அரங்கு போன்ற அறையும் (Anteroom) உள்ளது.

சீனாவில் பல ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கின்றன, விளைநிலங்கள். ஒரே நிலத்தில், மேற்சொன்ன அளவிலான பசுமை இல்லங்கள் அறுபது முதல் எழுபது எண்ணிக்கை வரை இருக்கின்றன என்றால், அந்த நிலத்தின் மொத்தப்பரப்பளவைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பசுமை இல்லங்களில் நடைபெறும் மண்புழு வளர்ப்பு, பெரும்பாலும் எந்திரமயமாகியுள்ளது. மண்புழுவுக்கு உணவளித்தல், சலித்தல், மண்புழுக் கட்டிகளைப் பேக்கிங் செய்தல் ஆகிய அனைத்தும் எந்திரங்களின் மூலமே நடைபெறுகின்றன.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்... ஃபா தலைமையிலான குழு, சீன நாட்டு அரசுடன் இணைந்து, ‘மண்புழு நகரம்’ ஒன்றை உருவாக்கப்போகிறது. இது ஒட்டுமொத்தச் சீன தேசத்திலும், இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் மையமாகத் திகழ வாய்ப்புள்ளது” என்றார், சுல்தான் அகமது இஸ்மாயில்.

சீனாவில், மண்புழுக்கள் மூலம் நடைபெறும் கழிவு மேலாண்மை குறித்துப் பேசிய சுல்தான் அகமது இஸ்மாயில், “ஸாங்ஜியா காங் (Zhangjia Gang) என்ற மாநகரத்தில், மண்புழுக்கள் மூலம் வீட்டுக்கழிவுகளை எருவாக்கும் நிலையத்துக்கும் நான் சென்றேன். பெரும்பாலும் பலசரக்குக் கடைகளிலிருந்து திடக்கழிவுகளும், அருகில் உள்ள வயல்களிலிருந்து வைக்கோலும் இம்மையத்துக்கு வருகின்றன. அங்கு ஆரம்பகட்ட திடக்கழிவு மேலாண்மைதான் செயல்படுத்தப்படுகிறது. அங்கே செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து என்னுடைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறேன்.

தொடர்ந்து, வட சீனாவிலுள்ள ‘இன்னர் மங்கோலியா’ (Inner Mangolia) எனப்படும் பகுதிக்குச் சென்றேன். அங்கு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் வரை கடுங்குளிர் நிலவுமாம். வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துவிடுமாம். அதனால், இந்த இடங்களில் மண்புழு வளர்ப்புக்கு ஏற்ற வெப்பம் கிடைக்குமாறு பசுமை இல்லங்களை வடிவமைத்திருக்கிறார்கள். இன்னர் மங்கோலியாவில், நிலங்களில் உப்புத்தன்மையும், காரத்தன்மையும் அதிகமாக உள்ளன. டாக்டர் ஃபாவின் குழு, ‘இன்னர் மங்கோலியா தொழில் மேம்பாட்டுக் குழு’ (Inner Mongolia Trade Promotion Council)வுடன் இணைந்து... மண்புழு உரம் மற்றும் மண்புழுப் புரத நொதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்த நிலங்களில் உப்புத்தன்மை மற்றும் காரத்தன்மையை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மண்புழுத் தொழில்நுட்பம் மூலம், உப்புத்தன்மை கொண்ட மண்ணை, நலமுள்ள மண்ணாக நாங்கள் மாற்றியுள்ளோம். அதைத்தெரிந்து கொண்ட ஃபா, இன்னர் மங்கோலியாவில் மண் மேம்பாட்டு முயற்சிகளில் உதவும் வகையில், மண்புழு தரப்படுத்துதல் ஆய்வு மையத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருக்குமாறு என்னைக் கேட்டிருக்கிறார். வருங்காலங்களில், அந்த முயற்சிகளில் என்னுடைய பங்கேற்பும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல, சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள, டெஷுவ் (Dezhou) என்ற நகரில், நம்மூர் ‘டைடல் பார்க்’ மாதிரி, பெரிய தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை அமைத்து வருகிறார்கள். பயோடெக்னாலஜி தொழிற்சாலைகளும் இங்கு அமைக்கப்படவுள்ளன. அங்கும் அரசோடு இணைந்து ஃபாவின் குழுவினர், மண்புழுக்கள் மூலம் மண் நலனை மீட்டெடுக்கும் முயற்சிகளை, விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளனர்.

அதற்கான ஆலோசனை குழுவிலும் என்னை இணைந்து செயல்படும்படி கேட்டிருக்கிறார், ஃபா. இன்னர் மங்கோலியாவில் மண் மேம்பாட்டு முயற்சிகளில் உதவுவதற்காக, அப்பகுதியிலுள்ள பூச்சி உயிர் சூழல் வேளாண்மை, பயோடெக்னாலஜி, மண்புழு வளர்ப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட சில தொழிற்சாலைகளையும் பார்வையிட்டேன்” என்ற சுல்தான் அகமது இஸ்மாயில் நிறைவாக, “நம் நாட்டில் ‘மண்புழு உழவனின் நண்பன்’ என்று காலங்காலமாகச் சொல்லி வருகிறோம். மனோன்மணீயம் சுந்தரனார் தொடங்கி இன்றுவரை பலர் மண்புழுக்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசி வருகிறார்கள். மண்புழு ஆராய்ச்சிகளில் நாம் பெரிய அளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம். ஆனால், மண்புழு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், மண்புழுக்களை மையப்படுத்தி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்... போன்ற விஷயங்களை நாம் பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. சீனா, இந்த விஷயத்தில், பல மடங்கு வேகமாக வேலைகளைச் செய்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளைப் பார்த்து, ரசாயன விவசாயத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றத் தொடங்கிய நாம், சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற கீழைநாடுகளைப் பார்த்து, மண்புழு வளர்ப்பையும், இயற்கை வேளாண்மையும் பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில், சிறிய அளவில் பசுமை இல்லங்களை அமைத்து, காய்கறிகளையும், மண்புழு உரத்தையும் உற்பத்தி செய்யலாம். அதன் மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கலாம். அரசு இந்த விஷயங்களில் ஆர்வம் செலுத்தி, நிதி ஒதுக்குவதுடன், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வண்ணம் திட்டங்களைத் தீட்டினால் வெற்றி நிச்சயம்” என்றார் அக்கறையுடன்.

-பயணம் தொடரும்

க.சரவணன்

விஞ்ஞானிக்கு விருது!

முதல் சர்வதேச மண்புழு மாநாடு, சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த ஜூன் மாதம், 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில், 28 நாடுகளைச் சேர்ந்த 310 பேர் கலந்துகொண்டனர். அவர்களில், ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயிலும் ஒருவர். அவர் மண்புழுத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்தமைக்காக, ‘சிறந்த பங்களிப்பு விருது’ அந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. மண்புழு நிபுணர்களில் சுல்தான் இஸ்மாயிலுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட ‘பன்னாட்டு மண்புழு தொழில்துறை கூட்டமைப்பு’க்குத் துணைத் தலைவராகவும் சுல்தான் இஸ்மாயில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட அந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில், பேராசிரியர் சன் தலைவராகவும், டாக்டர். யூபிங் ஃபா, இன்னொரு துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுல்தான் அகமது இஸ்மாயில், சீனாவில் கௌரவிக்கப்பட்டுள்ளது, இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

தொடர்புக்கு: சுல்தான் அகமது இஸ்மாயில், செல்போன்: 93848 98358

மண்புழுவும் சீனாவும்!

தமிழில் உள்ள சங்க இலக்கியங்களைப்போலச் சீனர்களால் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ‘பாடல்களின் புத்தகம் (The Book of Songs)’ என்ற தொகுப்பு இலக்கியம் உள்ளது. அதில், ‘மண்புழுக்கள், மேல்மண்ணின் கழிவுகளையும், அடிமண்ணின் திரவங்களையும் உண்டு உயிர் வாழ்கின்றன’ என்ற குறிப்பு உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மண்புழுக்களைச் சீனர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் பதிவுகள் உள்ளன.

பயிர் வளர்ச்சிக்கு உதவும் மண்புழுப் புரத நொதிகள்

மண்புழுவின் ஜீரண மண்டலம் ஏராளமான என்சைம்கள் எனப்படும் நொதிகளைச் சுரக்கிறது. இவைதான், மண்புழு உண்ணும் கழிகளை எளிதில் பயன்படுத்தும் வகையிலான சத்துகளாக மாற்றுகின்றன. ‘டாக்டர் ஃபா பயோடெக் நிறுவனம்’, உயிருள்ள மண்புழுக்களிலிருந்து, புரத நொதிகளைப் (Enzymatic Peptides) பிரித்தெடுக்கிறது. இது தண்ணீரில் கரையும் தன்மை கொண்டது. இந்தத் திரவத்தைப் பயிர் சாகுபடியில் தெளிப்பு இடுபொருளாகப் பயன்படுத்தலாம். இது நுண்ணூட்டம் கொண்ட இயற்கை உரமாகவும், பயிர் வளர்ச்சி சீராக இருக்கவும் உதவுகிறது. பயிர்கள் இதை எளிதில் உறிஞ்சிக் கொள்கின்றன.

இந்த நொதியில்... விலங்குகள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்கும், அவற்றின் நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உதவும் வகையில் செயலூக்கம் கொண்ட நொதிகள், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள், வைட்டமின்கள், வளர்ச்சி ஊக்கிச் சுரப்புகள் ஆகியவை உள்ளன. இதைப் பயன்படுத்துவதன் மூலம் விளைபொருள்களின் தரம் உயர்வதுடன், செலவும் மிச்சமாகும். இது முழுக்க முழுக்க இயற்கைப்பொருள் என்பதால், தெளித்த உடனேயே காய்கறிகளை அறுவடை செய்து பயன்படுத்தலாம்.