Published:Updated:

நாட்டு நடப்பு

நாட்டு நடப்பு

பொங்கல் சிறப்பிதழ்

 இயற்கை உரத்துக்கு மானியம்!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க. அழகிரியிடம், ''இயற்கை உரங்களுக்கு மானியம் கொடுங்கள்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, ''மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.கே.பி. ராமலிங்கம், மத்திய இணைய அமைச்சர் நெப்போலியன் மற்றும் நான், சமீபத்தில் உரத் துறை அமைச்சரைச் சந்தித்தோம். 'உர விலையேற்றம் விவசாயிகளைக் கடன்காரர்களாக மாற்றும். எனவே, விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால், நல்ல விளைச்சலும் கிடைக்கும், மண்ணுக்கும் நல்லது. ஆகையால், இயற்கை உரத்துக்கு மானியம் கொடுங்கள்' என்றெல்லாம் கோரிக்கை வைத்தோம்.

நாட்டு நடப்பு

'நிச்சயம், இந்த விஷயம் பற்றி நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உரத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்'' என்று நம்பிக்கையோடு சொன்னார் செல்லமுத்து.

-ஆறுச்சாமி

இயற்கைக்குத் திரும்பும் ஜவ்வரிசி ஆலைகள் !

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் டிசம்பர் 25|ம் தேதி, 'தமிழ்நாடு மாநில மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் நலச்சங்க' கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரசாயனங்களைப் பயன்படுத்தி ஜவ்வரிசி தயாரிப்பதற்கு எதிரான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

''மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியின், நிறம் மங்கலாகத்தான் இருக்கும். அதை வெண்மையாக மாற்றுவதற்காக ஆசிட் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதில் உள்ள சத்துக்கள் அழிகின்றன. அதனால்தான், ஜவ்வரிசியை மக்கள் அதிகம் விரும்புவதில்லை.

நாட்டு நடப்பு

தாய்லாந்து நாட்டில், நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இயற்கையாகவே ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அதில்தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன. இந்தக் காரணத்தாலேயே... சீனாவின் பெருவாரியான உணவுத் தேவைக்கு ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது'’ என்று விவசாயிகள் பலரும் வற்புறுத்தினர்.

இந்நிலையில் நாமகிரிப்பேட்டையில் நடந்த 'சேகோ உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு' கூட்டத்தில், ''ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் இனி ஆசிட் உபயோகப்படுத்தக் கூடாது. இதை மீறுவதால், ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். சங்கம் எந்த வகையிலும், அவர்களுக்கு உதவாது’' என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  -ம. சபரி படம்: மகா. தமிழ்ப்பிரபாகரன்

பசுமைப் புத்தாண்டு!

 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக... நாமக்கல் மாவட்டம், மணலி ஜோடர்பாளையம்அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், 2012-ம் வருட புத்தாண்டை, 'பசுமைப் புத்தாண்டு' என்று கொண்டாடி அசத்தினர்.

நாட்டு நடப்பு

''மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தீமைகள், மரங்களால் ஏற்படும் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு முயற்சியாக இந்த ஆண்டை பசுமை ஆண்டாக கொண்டாடுகிறோம்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார் பள்ளி தலைமையாசிரியர் சுந்தர்ராஜன்.

'புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மாணவர்கள் வீணாக செய்யும் செலவுகளுக்கு பதில், வீட்டுக்கொரு மரக் கன்று நடவேண்டும்... ஆசிரியர்கள், மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் பள்ளியைச் சுற்றிலும் மரக் கன்றுகள் நடவேண்டும்' என்று புத்தாண்டுத் தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன!

-ப. பிரகாஷ்