‘‘வண்ண மீன்கள் வளர்க்க விரும்புகிறோம். இதைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்?’’

எஸ்.புவனேஸ்வரி, பெருங்குடி.

டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி முனைவர் கி.ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பில் முன்னோடியாக உள்ள பகுதி என்றால், அது சென்னை அருகில் உள்ள கொளத்தூர்தான். வண்ண மீன்கள் வளர்ப்பைத் தொடங்கும் முன்பு இங்கு ஒருமுறை சென்று வந்தால், உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

நம்மில் பலர் வண்ண மீன்களை வீட்டின் வரவேற்பு அறையில் வைத்து இருப்பார்கள். அதைக் காணும்போது நம் உடலின் ரத்த அழுத்தம் சீரான நிலையை அடைந்து பலருக்கு மனச்சோர்விலிருந்து விடுதலையைத் தந்து புத்துணர்வை அளிக்கிறது.

இதனால், நம் உடலும் மனமும் பயன் அடைகிறது. உடல், மன அமைதி மற்றும் புத்துணர்ச்சிக்காக வண்ண மீன்களை வீடுகளில் மக்கள் வளர்த்து வருகின்றனர். வண்ண மீன்களில் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன. 1. நன்னீர் வண்ண மீன்கள் 2. கடல் நீர் வண்ண மீன்கள். நன்னீர் வண்ண மீன்கள், நம்மில் பலரும் வீடுகளில் வைத்திருக்கக் கூடும்.

வண்ண மீன் வளர்ப்பைக் குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் மீன்களை வைத்துப் பராமரிக்க முடியும். வண்ண மீன்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதன் மூலமாகத் தனிநபர் வருவாயினைப் பெருக்கிக் கொள்ளலாம். வண்ண மீன்கள் அவை இனப்பெருக்கம் செய்யும் முறையைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. 1.குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் 2. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் என்பதாகும். புதியதாக வண்ண மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர்களுக்குக் குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் வகைகள் வளர்ப்பதற்கு எளிது. குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்களில் அதிகம் விற்கப்படும் வகைகளில் 1. கப்பி 2. மோலி 3. பிளாட்டி 4. வாள்வால் மீன்... போன்றவை முதலிடத்தில் உள்ளன.

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன் வகையில் எப்போதும் பொன் மீனுக்குத் தனியிடம் உண்டு. பொன்மீன், உலகெங்கிலும் பரவி மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு வண்ண மீனாகும். இவை நான்கு மாத காலத்தில் 20 முதல் 25 கிராம் உடல் எடையினை அடையும். அழகுக்காக வளர்க்கப்பட்ட முதல் வண்ண மீன் என்ற பெருமையும் பொன்மீனுக்கு உண்டு. மேலும் 5 மாத காலத்தில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகும். பெண்மீன்களின் செதில் பகுதிகள் பருத்து வீங்கி முட்டைகள் போன்று இனப்பெருக்கக் காலங்களில் உருவாகும். இவை இனப்பெருக்கம் முடிந்தவுடன் மறைந்துவிடும். இன முதிர்ச்சியடைந்த ஒரு பெண் மற்றும் 2 ஆண் மீன்கள் பால் விகிதத்தில் இருப்புச் செய்ய வேண்டும். பொன்மீனின் முட்டைகள் நீர்த்தாவரங்களில் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையவை. பெண்மீன்கள் ஓர் இனப்பெருக்கத்தில் 1,000-1,500 முட்டைகள் வரை இடும். இவை ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்கம் செய்யும். குளிர் அதிகமாக இருக்கும் காலங்களில் இனப்பெருக்கம் சற்று குறைவாகக் காணப்படும்.

புதியதாக வண்ண மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர்கள் கப்பி, மோலி, பிளாட்டி, வாள்வால் மீன், பொன்மீன், கௌராமி மற்றும் பார்ப் மீன்களை எளிதில் வளர்த்து இனப்பெருக்கம் செய்திட முடியும். இவ்வகை மீன்களைச் சந்தைப்படுத்துவதும் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது. வண்ண மீன்களை முதன் முதலில் சிறிய கண்ணாடி பாட்டிலில் வைத்து அழகு பார்த்து வந்தனர். பிறகு சிறிய கண்ணாடித் தொட்டியில் வளர்க்க ஆரம்பித்தனர். பின்னர் ஒட்டுப்பசைக் கொண்டு கண்ணாடித் துண்டுகளை ஒட்டி, மீன்கள் வளர்த்து அழகு பார்த்தனர். தற்போது ஒட்டுப் பசை கொண்டு தொட்டியை எல்லாப் புறமும் ஒட்டாமல் புதியதாகக் கண்ணாடித் தொட்டியை உருவாக்கியுள்ளனர்.

கண்ணாடித் தொட்டி அழகுக்காக மட்டும் வைத்துப் பராமரிக்கப்படுகிறது. தற்போது சிமென்ட் தொட்டிகள் வண்ண மீன் வளர்க்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இவை இளம் குஞ்சுகளை வளர்க்கவும் தாய் மீன்களை இனப்பெருக்கம் செய்யவும் பயன்படுத்தப் படுகிறது. செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தொட்டிகள் இனப்பெருக்கம் செய்யும் மீன்களை வளர்க்கவும், தாய் மீன்கள் வளர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

வண்ண மீன் வளர்ப்பில் முக்கியமானது மீன்தொட்டியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள். பொதுவாக ஏரேட்டர் எனப்படும் காற்றுப் புகுத்தி கண்ணாடித் தொட்டி மற்றும் சிமென்ட் தொட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நீரில் பிராண வாயுவின் அளவு அதிகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நீர் வடிப்பான் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் தொட்டியில் உள்ள நீரை 4-6 மாதங்கள் வரை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கண்ணாடித் தொட்டியை அழகு செய்யக் கூழாங்கற்கள், செடிகள், பொம்மைகள், காற்றுப் பைப்புகள், போஸ்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வண்ண மீன் தொட்டிகளை அழகுப்படுத்த நீர்த்தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயிருடன் செடிகளை வைப்பதால் தொட்டியில் உள்ள மீன்கள் இயற்கை குளங்களில் நீந்துவது போன்ற அமைப்பைப் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் தொட்டியில் பயன்படுத்தப்படும் செடிகள், மீன்களின் இனப்பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது. முக்கியமாகச் செரட்டோபில்லம் எனும் கொடிப்பாசியானது தொட்டியை அழகுப்படுத்துவதற்கும், மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது. வண்ண மீன் தொட்டியில் வளர்க்கப்படும் செடிகளைத் தனியாக வளர்த்தும்கூட வியாபாரம் செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும்.

என்னுடைய அனுபவத்தில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பைத் தொடங்கலாம். முதல் மூன்று மாதங்களுக்கு வருமானம் இருக்காது. அந்தச் சமயத்தில் மீன்களின் வளர்ச்சிப் பருவம். நான்காவது மாதம் முதல் வருமானம் கிடைக்கத் தொடங்கும். இந்த முதலீட்டில் அதிகபட்சம் மாதம் 5 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீடு பெரியதாக இருந்தால், வருமானமும் அதிகரிக்கும். வண்ண மீன்கள், நன்னீர் மீன் வளர்ப்பு... போன்றவை குறித்து, எங்களது பல்கலைக்கழகத்தின் மையங்களில் தொடர்ந்து பயிற்சிக் கொடுத்து வருகிறோம். மீன் வளர்ப்பில் இறங்கும் முன்பு, பயிற்சி எடுத்துக்கொண்டால், இந்தத் தொழில் வெற்றி பெற உதவியாக இருக்கும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94446 94845.

புறா பாண்டி

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.