பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!

விவசாயத்திற்கு உதவும் ட்ரோன்கள்...

வி
வசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில்... ‘ஃபளையிங் ஃபார்மர்’ (Flying Farmer) என்ற பறக்கும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளனர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘எல்.பி.யூ (LPU) பல்கலைக்கழக’த்தைச் சேர்ந்த 45 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர். இந்த ட்ரோன்கள் பயிர் செய்யும் நிலத்தைத் துல்லியமாகக் கண்காணித்து விவசாயிகளின் வேலைச் சுமையைக் குறைக்கின்றன. பூச்சி விரட்டிகளைத் தெளிப்பதற்கும், களை மேலாண்மைக்கும்தான் இந்த ட்ரோன்கள் அதிகம் பயன்படுகின்றன. இந்த ட்ரோன்களுக்குப் பல்கலைக்கழகம் சார்பில் காப்புரிமை கோரவில்லை. இது விவசாயிகள் பயன்பாட்டை முக்கியமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான ஒரு ட்ரோனை உருவாக்க 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவாகும். இவை, தொடர்ந்து 25 நிமிடங்கள்வரை பறக்கும் திறன் கொண்டவை. கணினியில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள்மூலம் பூச்சிவிரட்டிகள் மற்றும் களைக்கொல்லிகளை இவை மிகவும் துல்லியமாகச் சரியான இடத்தில் தெளிக்கின்றன. இதைப் பயன்படுத்தும்போது வேலையாட்களுக்கான சம்பளம் வெகுவாகக் குறையும். மேலும் இதுகுறித்த ஆராய்ச்சிக்காக 1,20,00,000 ரூபாயை ஒதுக்கியுள்ளது, பல்கலைக்கழகம்.

உலகம் சுற்றும் உழவு!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு திட்டம்...

மிழகத்தில் மக்காச்சோள விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய படைப்புழுக்கள் உலகின் பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கிழக்கு ஆப்ரிக்காவின், ருவாண்டா நாடு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் (FAO) இணைந்து... 2,84,000 டாலர் செலவில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்மூலம் படைப்புழுக்களை உருவாக்கும் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் இனக்கவர்ச்சிப் பொறிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இப்பொறிகள், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் ஆகியோரின் உதவியோடு தோட்டங்களில் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு பொறியும் ஒரு வாரத்துக்கு 80 ஆண் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்திருக்கிறது. இதனால், இனச்சேர்க்கை தடுக்கப்பட்டுப் புழுக்கள் உருவாக்கம் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. அதோடு ராணுவ விமானங்கள்மூலம் வயல்களில் பூச்சிக்கொல்லியும் தெளிக்கப்பட்டது. இப்படிப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால்... ருவாண்டா நாட்டில் மிகப்பெரிய அளவில் பட்டினிச்சாவு நிகழ்ந்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

உலகம் சுற்றும் உழவு!

பாகிஸ்தானுக்கு வந்துள்ள ஆலிவ் செடிகள்...

தே
சிய வேளாண்மை மையத்திட்டத்தின் மூலம் ஆலிவ் செடிகளை வணிக நோக்கில் பயிரிடுவதற்காக... ஸ்பெயின் மற்றும் டர்கி ஆகிய நாடுகளிலிருந்து 1,00,000 ஆலிவ் (Olive) செடிகளை இறக்குமதி செய்துள்ளது, பாகிஸ்தான் அரசு. தொடர்ந்து இன்னும் 5,50,000 செடிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. ஆலிவ் செடிகள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை. கடந்த ஆண்டில் பாகிஸ்தான் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வசிரிஸ்தான் மற்றும் பழங்குடி மக்களின் பகுதிகளான ஃபாட்டா, பலோசிஸ்தான் ஆகிய பகுதிகளில் இந்த ஆலிவ் செடிகளை நடவு செய்ய உள்ளனர். இப்பகுதிகளில் 45 சதவிகித நிலங்கள் ஆலிவ் செடிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளன. இதன் மூலம், அந்நாட்டு விவசாயிகளுக்கு நிரந்தர வாழ்வாதாரம் அமையும் எனச் சொல்லப்படுகிறது.

உலகம் சுற்றும் உழவு!

செர்ரி தக்காளியில் புதிய தொழில்நுட்பம்...

உலகம் சுற்றும் உழவு!ய்கா மயுரா என்ற பெண், ஜப்பான் நாட்டு ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல முடியவில்லை. அதனால், வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வகையில் ஒரு தொழிலைத் தொடங்க யோசித்து, விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, காய்கறிகளை விளைவித்துச் சந்தைப்படுத்தும் வகையில், ‘டிராப் இன் கார்ப்பரேஷன்’ (Drop inc.) என்ற சிறுதொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் ‘ஹைட்ரோ ஜெல்’ (Hydrogel) பைகள்மூலம் செர்ரித் தக்காளியை விளைவிக்க முடியும் என அவருக்குத் தெரிய வந்துள்ளது. ஹைட்ரோ ஜெல், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டையப்பர்ஸில் தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளக்கூடிய பொருள். அதோடு, தீமை தரும் நுண்ணுயிரிகளை உள்ளே விடாத அளவு நானோ (Nano) துளைகளையும் இது கொண்டிருக்கும். தொடர்ந்து ஹைட்ரோ ஜெல் மூலம் தக்காளி உற்பத்தியில் இறங்கிவிட்டார், ஆய்கா மயுரா. இப்படி உற்பத்தி செய்யப்படும் செர்ரித் தக்காளியில் அதிகளவு லைகோபீன் (Lycopene) நிறமி இருப்பது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, டிராப் இன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல தாய்மார்கள் வேலை செய்கிறார்கள். இத்தொழில்நுட்பம் மூலம் ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரி மற்றும் மிளகு ஆகியவற்றைக்கூட உற்பத்தி செய்ய முடியும். ஹைட்ரோ ஜெல் முறைக்கு ஹைட்ரோ போனிக்ஸைவிடக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது.

உலகம் சுற்றும் உழவு!

பனை எண்ணெய் உற்பத்திக்கு  4.3 மில்லியன் டாலர்...

தா
ன்சானியா நாட்டின் கிகோமா பகுதி எண்ணெய்ப்பனை வளர்ப்புக்கு ஏற்ற நிலப்பகுதி. இப்பகுதிகளில் 80 சதவிகிதம் எண்ணெய்ப்பனை விவசாயம்தான் நடந்து வருகிறது. அதனால், மலேசியாவிலிருந்து எண்ணெய்ப்பனை விதைகள் வரவழைக்கப்பட்டுப் பயிரிடப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்காக 4.3 மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. அதோடு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாதிரிப்பண்ணை அமைக்கவும் முடிவு செய்துள்ளது, தான்சானியா.

நந்தினி. பா    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு