மாசுபடுத்திய பண்ணைக்கு 1,16,000 டாலர் அபராதம்...

நியூலாந்து நாட்டின் வைகாடோ பகுதியில் ‘நாக்ரா பார்ம்ஸ் லிமிடெட்’ (Nagra Farms Limited) என்ற பெரிய பால் பண்ணை இயங்கி வருகிறது. நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கூட்டுறவு பால் பண்ணையான ‘ஃபான்ட்டெரா’வுக்கு (Fonterra) பால் வழங்கி வருகிறது. நாக்ரா பண்ணை. ஹேமில்டன் அருகே உள்ள ஜார்டனில் நாக்ரா நிறுவனத்துக்குச் சொந்தமாக 5 பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளின் கழிவுகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்துப் பண்ணைகளில் சோதனை நடந்துள்ளது. அதில் நீர்நிலை மாசுபாடு உறுதியானதைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஹேமில்டன் நீதிமன்றம், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்துக்காக நார்கா பண்ணையின் நிறுவனர் நாகிந்தர் சிங் ரெசிக்கு 1,16,000 டாலர் அபராதம் விதித்துள்ளது. வள மேம்பாட்டுச் சட்டத்தை மீறியதற்காகப் பண்ணையின் மேலாளரை, ஓர் ஆண்டுப் பணியிடை நீக்கம் செய்ததோடு அவர், ‘பண்ணைக் கழிவு மேலாண்மை’ குறித்த பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிளாஸ்டிக்கை அழிக்கும் காளான்!

கடந்த 2012-ஆம் ஆண்டில், யேல் பல்கலைக்கழக மாணவர்கள் அமேசான் மழைக்காடுகளில் வளரக்கூடிய, ‘பெஸ்டாலோப்டியோப்சிஸ் மைக்ரோஸ்போரா’ (Pestaloptiopsis Microspora) என்ற ஒருவகைக் காளானால் பிளாஸ்டிக்கை மட்க வைக்க முடியும் எனக் கண்டுபிடித்தனர். இந்தக் காளான், ஆக்சிஜன் இல்லாத இடத்திலும் வளரக்கூடியது. இது இல்லாமல், மனிதர்கள் சாப்பிடக் கூடியதாகவும் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடியதாகவும் உள்ள காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காளான்கள், சோம்பின் சுவை கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக்கை மட்க வைக்கப் பல நூறு ஆண்டுகள் ஆகும் என்ற நிலையை மாற்றியிருக்கின்றன, காளான் பூஞ்சணங்கள்.

பிரிக்ஸ்ட் ஒப்பந்தத்தால் அதிகரிக்கும் ஏற்றுமதி

ஐரோப்பிய ஒன்றிய பிரிக்ஸ்ட் ஒப்பந்தத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான கோப்புகளில் மார்ச் 29-ஆம் தேதி கையெழுத்தாக உள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் பெரிய அளவில் சரிவு இருக்காது என்கின்றனர், வல்லுநர்கள். 2017-18-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 168 கோடி மதிப்புள்ள காய்கறிகளும், 12.7 கோடி மதிப்புள்ள வெங்காயமும் பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகி உள்ளது. தினமும் 30-50 டன் காய்கறிகள் லண்டனுக்கு ஏற்றுமதி ஆகிறது.

இந்த ஏற்றுமதி, கோடைக்காலத்தில் 20 சதவிகிதம் வரை குறையும். ஆனால், பிரிக்ஸ்ட் ஒப்பந்தத்தால் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி இருக்காது. அதனால், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மாம்பழ சீசன் தொடங்க உள்ளது. இந்தியா, பிரிட்டனுக்கு மாம்பழம் மற்றும் திராட்சை ஆகியவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

அதிருப்தியில் அமெரிக்க விவசாயிகள்

மார்ச் முதல் வாரம், அமெரிக்காவின் 2020 பட்ஜெட்டை டிரம்ப் தலைமையிலான அரசு வெளியிட்டது. அதில் அமெரிக்க வேளாண் துறைக்கு 15 சதவிகிதம் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகை 26 பில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. பயிர் மானியத்தை 62 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதமாகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

5,00,000 டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் விவசாயிகளுக்கு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலையான காலநிலை இல்லாத நேரத்தில் இயற்கைப் பேரழிவால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டக்கூடிய பயிர் காப்பீட்டுத் தொகையைக் குறைத்திருப்பதில் அமெரிக்க விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

நந்தினி. பா