பயிர்க் காப்பீடு செய்யும் முறை, இழப்பீடு கணக்கிடும் முறை போன்றவற்றைக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து பயிர்க் காப்பீட்டில் நடக்கும் முறைகேடுகளை விவசாயிகளே சட்டப்படி தடுக்கும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. சில விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதவர்களும் பயிர்க் காப்பீட்டைத் தவறாகப் பயன்படுத்தி இழப்பீடு பெறுகின்றனர். இந்த மாதிரியான முறைகேடுகளுக்குக் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் முகவர்களாகச் செயல்படும் வங்கிகளின் ஊழியர்களும் உடந்தையாக இருக்கின்றனர். நிறைய விவசாயிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில்தான் பயிர்க் கடன் பெறுகிறார்கள்.

அதனால், இவ்வங்கிகளில்தான் பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைக் கட்டுகிறார்கள். இந்த வங்கிகளில்தான் அதிகளவில் முறைகேடுகளும் நடக்கின்றன.

ஒரே நிலத்துக்கு இரு வேறு இடங்களில் பயிர்க் காப்பீடு செய்து மோசடி நடக்கிறது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிச் செயலாளர்கள், பயிர்க் கடன் பெறாத விவசாயிகளின் பெயர்களில் போலி ஆவணங்களைக் கொண்டு பயிர்க்கடன் பெற்று, அதன் மூலம் பயிர்க் காப்பீடும் செய்து கொள்கிறார்கள். அரசால், பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, இந்தப் போலியான கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டையும் இவர்கள் பெற்று விடுகிறார்கள். ஒவ்வொரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளிலும் அந்தந்த வங்கியின் நிதிநிலைமையைப் பொறுத்து லட்சங்களிலோ கோடிகளிலோ மோசடி நடக்கிறது. இப்படி ஊழல் நடக்காத தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டாலும் இதுபோன்ற ஊழல்வாதிகளுக்குப் பிரச்னையில்லை. உரியக் காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தி வட்டி மானியப் பலனை அடைந்துவிடுகிறார்கள். இந்தப்பணத்தை வெளியில் சுற்ற விடுவதன் மூலம் ஒரு லாபத்தை அடைந்துவிடுவார்கள். சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அல்லாதோருக்கும் வட்டிக்கடை நடத்துபவர்களுக்கும் இதுபோல விவசாயக்கடன் கொடுக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு வட்டி மானியச் சலுகை கிடைக்கிறது. இதுபோன்ற ஊழல்களால் உண்மையான விவசாயிகள் கடன் கிடைக்காமல், பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

‘விவசாயக் கடன் வாங்கியவர்கள், பயிர்க் காப்பீடு செய்தவர்கள், இழப்பீடு பெற்றவர்கள் போன்றவர்களின் பெயர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட வேண்டும். இந்தப்பட்டியலை வங்கிகளில் ஒட்ட வேண்டும்’ எனப்பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், யாரும் செவி மடுப்பதில்லை. அதனால், இந்த ஊழலை ஒழிக்க விவசாயிகள்தாம், சட்டத்தின் துணையோடு களமிறங்க வேண்டும். இந்த முறைகேட்டைத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக வெளிக்கொண்டு வர, கேட்க வேண்டிய கேள்விகள் பெட்டிச் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தகவல் கேட்டுப் பட்டியல் வாங்கி ஊழலைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்துவோம். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை உண்மையான விவசாயிகளுக்கே கிடைக்கச் செய்வோம். மேலும் விவரங்களுக்குச் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 76671 00100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

-வழிகாட்டல் தொடரும்

மாதிரிக் கடிதம்

அனுப்புநர்:
பாரதி,
எண்:19 காந்தி தெரு,
திருவாரூர்-610001.

பெறுநர்:
பொதுத் தகவல் அலுவலர்,
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005,
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி,
மாங்குடி, திருவாரூர் மாவட்டம்-610 205.

பொருள்: தங்கள் வங்கியில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் விவசாயக் கடன் பெற்றவர்கள், பயிர்க் காப்பீடு செய்தவர்கள், இழப்பீடு பெற்றவர்கள் ஆகியோரின் பெயர்ப் பட்டியலைத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005-ன் படி தகவல் வேண்டி...

ஐயா,

1. தங்கள் வங்கியில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் விவசாயக் கடன் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை முழு முகவரியுடன் தகவல் தரவும். (1.அ) அவர்கள் எந்தத் தேதியில் எவ்வளவு கடன் பெற்றார்கள் என்ற தகவல்களையும் தரவும்.

2. தங்கள் வங்கியில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் பயிர்க் காப்பீடு செய்தவர்களின் பெயர்ப் பட்டியலை முழு முகவரியுடன் தகவல் தரவும். (2.அ) அவர்கள் எந்தத் தேதியில் பயிர்க் காப்பீடு செய்தார்கள், எவ்வளவு பிரீமியம் கட்டினார்கள் என்ற தகவல்களையும் தரவும்.

3. தங்கள் வங்கியில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் விவசாயக் கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை முழு முகவரியுடன் தகவல் தரவும். (3.அ) தள்ளுபடி பெற்ற தொகை எவ்வளவு என்ற விவரத்தைத் தேதி வாரியாகத் தகவல் தரவும்.

4. தங்கள் வங்கியில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் பயிர் இழப்பீட்டுத் தொகை பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை, முழு முகவரியுடன் தகவல் தரவும். (3.அ) இழப்பீடு தள்ளுபடி பெற்ற தொகை எவ்வளவு என்ற விவரத்தைத் தேதி வாரியாகத் தகவல் தரவும்.

5. தங்கள் வங்கிக்கு 2017-18, 2018-19-ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட விவசாயக் கடன் தொகை எவ்வளவு என்ற தகவல் தரவும்.

6. மேற்கண்ட கேள்விகளுக்கான தகவல் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் நேரில் பார்வையிட அனுமதி வேண்டுகிறேன்.

மேலே கோரிய தகவல்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005-ன் கீழ் வேண்டுகிறேன். இந்த விண்ணப்பத்துக்கான கட்டணமாகப் பத்து ரூபாய்க்கான நீதி மன்ற வில்லை ஒட்டியுள்ளேன். மேலும், கூட்டுறவுத் துறையின் இணைப்பதிவாளரின் ந.க.95879/2013/நிஅ1 நாள்:18/01/2014 ஆணைப்படி தகவல் கொடுக்கத் தாங்கள் மறுக்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்படிக்கு,

பாரதி.