Published:Updated:

உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

Published:Updated:
உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!
உலகம் சுற்றும் உழவு!

காபிக் கழிவிலிருந்து காளான்!

“ந
கர்ப்புற வேளாண்மையின் முதல் குறிக்கோள் இயற்கைக் கழிவுகளைப் பயனுள்ள இடுபொருளாக மாற்றுவதுதான்” என்கிறார், பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரத்தின் ‘அப்-சைக்கிள்’ (Up-cycle) நிறுவனத்தின் தலைவர், அர்னாட் உல்ரிச். அதன் ஒரு பகுதியாகக் காபிக் கொட்டையை அரைத்துச் சலித்த பிறகு எஞ்சும் கழிவுகள்மூலம் சிப்பிக்காளான் வளர்க்கும் முறையைப் பிரபலப்படுத்தி வருகிறார், இவர். காபிக் கழிவுகளோடு, மரத்தூள், அட்டைத்தூள் ஆகியவற்றைக் கலந்து, அதில் காளான் வித்துக்களைச் சேர்த்துச் சிப்பிக் காளானை உற்பத்தி செய்து வருகிறார்கள், பாரிஸ் நகர மக்கள்.

உலகம் சுற்றும் உழவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!“நகர்ப்புறக் கழிவுகளில் 30 சதவிகிதத்தை இயற்கை உரமாக மாற்ற முடியும். ஆனால், தற்போதுள்ள நிலையில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. முன்னோர் பயன்படுத்திய முறையையே சற்று நவீனப்படுத்திக் காளான் வளர்க்கிறோம்” என்கிறார், உல்ரிச். பாரிஸ் நகரில் மட்டும் ஒரு மாதத்துக்கு 20 டன் அளவு காபிக் கழிவு சேகரிக்கப்பட்டு, அதில் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில் காளான் வளர்ப்பதை பிரான்ஸ் நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளனர்.

உலகம் சுற்றும் உழவு!

தெலங்கானா விவசாயிகளுக்கு உதவும் இளைஞர்..!

டந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகத் தெலங்கானா மாநிலத்தில் நிகழும் தொடர் தற்கொலைச் சம்பவங்களைக் கண்டு கவலையடைந்த அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் வி.நவீன்குமார்... விவசாயிகளுக்கு உதவும் வகையில் நாபன்டா (Napanta) என்ற செயலியை வடிவமைத்துள்ளார். விவசாயிகளின் பல பிரச்னைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம், பயிர் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு, சந்தை நிலவரம் என 90 வகைப் பயிர்களுக்கான அனைத்து விவரங்களையும் தெலுங்கு மொழியில் தெரிந்துகொள்ள முடியும். ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 1,24,000 விவசாயிகள், தங்களது செல்போனில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இச்செயலியை விரிவுப்படுத்த இருக்கிறார், நவீன்குமார்.

உலகம் சுற்றும் உழவு!

ஹைடெக் பால் பண்ணை!

ஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் குப்தா என்பவர் பட்டப்படிப்பு முடித்துச் சிங்கப்பூரில் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் தொடர்ந்து உணவு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றிய அவர், இந்தியா திரும்பி பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அருகே உள்ள நபா என்ற பகுதியில், ‘ஹிமாலயன் கீரிமரி’ என்ற பெயரில் பால் பண்ணை நடத்தி வருகிறார். மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையில், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களோடு 350 பசுக்கள் கொண்ட பால் பண்ணையும் உள்ளது. எந்திரங்கள் மூலமாகப் பால் சேகரிக்கப்பட்டுக் கொதிக்கவைத்து மீண்டும் குளிர்விக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இப்பாலைக் காய்ச்சாமலேயே குடிக்கலாம். பண்ணையில் உள்ள மாடுகள், 24 மணிநேரமும் நவீனத் தொழில்நுட்பம்மூலம் கண்காணிக்கப்படுகின்றன. குளுகுளு சூழல், மின்விசிறிகள், சுழலும் தூரிகைகளால் மாடுகளைச் சுத்தம் செய்தல் என நவீன முறையில் பண்ணையை அமைத்திருக்கிறார், தீபக் குப்தா.

உலகம் சுற்றும் உழவு!

நெல் உற்பத்தியாளர்களுக்கு உதவும் ஜப்பான் தொழில்நுட்பம்!

மா
றிவரும் பருவநிலையைச் சமாளிக்க முடியாமல் திணறிவரும் கொலம்பியா நாட்டு நெல் உற்பத்தியாளர்களுக்கு உதவியிருக்கிறது, ஜப்பான் அரசு. சல்தானா என்ற இடத்தில் கொலம்பியாவும், ஜப்பானும் இணைந்து நெல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நடத்தி வருகின்றன. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பி.எஸ் சொல்யூஷன்ஸ் (P.S solutions) நிறுவனம் ஆகியவை இணைந்து ‘e.kakshi’ என்ற செயலியை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் கணினி அல்லது செல்போன் மூலம், பயிரின் ஈரப்பதம், வெப்பநிலை போன்றவற்றைத் தெரிந்துகொண்டு தேவைப்படும் அளவு இடுபொருள்களை மட்டும் கொடுக்க முடியும். இதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர், கொலம்பியா நாட்டு விவசாயிகள். அதோடு, இத்திட்டம் மூலம் ஜப்பான், கொலம்பியா ஆகிய இரு நாடுகளுமே வர்த்தக ரீதியாகப் பயனடைகின்றன.

ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய திட்டம்!

ந்திய வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் ‘போக்குவரத்து மற்றும் வர்த்தக உதவித் திட்ட’த்தை (Transport and Marketing Assistance Scheme-TMA) அறிமுகம் செய்தது, வர்த்தக அமைச்சகம். இத்திட்டத்தின் மூலம், கடல் வழியாகவோ, வான் வழியாகவோ ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருள்களுக்குச் சரக்குக் கட்டணத்தின் ஒரு பகுதி திரும்பத் தரப்படும். இந்தத் திட்டத்தில் பயனடைய வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (Directorate General of Foreign Trade - DGFT) சில விதிமுறைகளை விதித்துள்ளது. dgft.gov.in இணையதளம் மூலம் TMA படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும். இந்தப் படிவம் 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். சரக்கு வாரியத்தின் பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே இதில் பயன்பெற இயலும்.

நந்தினி.பா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism