Published:Updated:

உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

Published:Updated:
உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகம் சுற்றும் உழவு!

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க முயற்சி!

சி
ன்ஜென்டா மற்றும் இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (The Nature Conservancy-TNC) ஆகியவை இணைந்து விவசாயம் சார்ந்த உலக நாடுகளில் மண் ஆரோக்கியம், வளங்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்விடப் பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் காப்பாற்றப் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன. இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம், வளம்குன்றா வேளாண் அணுகுமுறைமூலம் விவசாயிகளுக்கு உதவுவதுதான். 

உலகம் சுற்றும் உழவு!

இந்த ஆய்வில் துல்லிய வேளாண்மை, ஊடுபயிர், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, உயிரியல் தீர்வுகள், மேம்படுத்தப்பட்ட விதை வகைகள் போன்ற தொழில்நுட்பங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளன. இதற்காக, பிரேசிலில் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண்மையில் உழவியல்’ பற்றியும், சீனாவில் ‘வறண்ட நில உருளைச் சாகுபடி’ பற்றியும், கென்யாவில் ‘மழைநீரைச் சேகரித்து நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்துவது’ பற்றியும், அமெரிக்காவில் ‘ஒருங்கிணைந்த மேலாண்மை மூலம் விவசாயம் செய்வது’ பற்றியும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகம் சுற்றும் உழவு!

காய்கறி உற்பத்தியை உயர்த்திய தொழிலாளர்கள்!

வி
வசாயத்தில், பெரும் சிக்கலாக இருப்பது, வேலையாள் பற்றாக்குறை. இதன் காரணமாக உணவு உற்பத்தி கணிசமான அளவில் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநில விவசாயிகள், வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து வேலையாள் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்து வருகிறார்கள். ரயில் நிலையத்தில் காத்திருந்து... பீஹார், உத்தரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வேலை தேடி வரும் தொழிலாளர்களை அழைத்துச் சென்று, நெல் மற்றும் கோதுமை வயல்களில் வேலை கொடுக்கிறார்கள், பஞ்சாப் விவசாயிகள். 

உலகம் சுற்றும் உழவு!

கடந்த பத்து ஆண்டுகளில் இப்படிப் பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த தொழிலாளர்களில் பலர் அம்மாநிலத்திலேயே தங்கி விட்டனர். இப்படிப் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 5,00,000 பேர் பஞ்சாப் மாநிலத்திலேயே குடியேறியிருக்கிறார்களாம்.

விவசாயக் கூலிகளாக வந்த இவர்கள், குத்தகைக்கு நிலம் பிடித்துக் காய்கறிகளைப் பயிர் செய்து வருகிறார்கள்.  இதனால், கோதுமை விளைந்த வயல்களில் தற்போது காய்கறிகள் விளைகின்றனவாம். பஞ்சாப் மாநிலத்தின் காய்கறி உற்பத்தி கணிசமான அளவு உயர்ந்துள்ளதாம்.

உலகம் சுற்றும் உழவு!

வானிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு இழப்பு!

ஸ்
காட்லாந்தில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து பருவநிலை மாற்றத்தைக் கணிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பனிக்காலத்தில் கடும் பனி பொழிந்ததைத் தொடர்ந்து... அடுத்து வந்த கோடைக்காலத்தில் அதிக வெப்ப நிலை நிலவியதால், பயிர்கள், கால்நடைகள் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் சுற்றும் உழவு!மேய்ச்சல் நிலம் காய்ந்து போனதால், ஆடுகள் அதிகப் பாதிப்புக்குள்ளாகின.  மாடுகளுக்கும் தீவனப்பற்றாக்குறையால், பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் டாலருக்கு மேல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
‘இழப்புகளை எண்ணி வருந்தாமல் வருங்காலங்களில் வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராவோம்’ என்று விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார், அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ மெக்-கார்மிக்.

உலகம் சுற்றும் உழவு!

விவசாயிகளுக்கு உதவும் நோக்கியா!

பி
ரேசில் நாட்டின் விவசாயம் சார்ந்த தொலைத்தொடர்பை மேம்படுத்த, 8 உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், ‘கனெக்டர் அக்ரோ’ (Connector AGRO) என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளன. வேளாண் வணிக நிறுவனங்களான CNH, AGCO, Bayer, Jacto, Solinftec and Trimble மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா மற்றும் TIM இணைந்து இதைச் செய்கின்றன. இத்திட்டம் வெற்றிப் பெற்றால், பிரேசிலின் 93 சதவிகித விவசாயிகளைத் துல்லிய வேளாண்மைக்கான அகல்வரிசை தொழில்நுட்பம் போய்ச்சேர உள்ளது.

தானியங்கி ரோபோட்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சென்சார், டிரோன் வான்வழி படம் மற்றும் புவிநிலை காட்டி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி... உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, நீர் ஆகியவற்றின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து மகசூலை அதிகரிக்க முடியும். இந்த முயற்சிமூலம் பிரேசில் வேளாண் வணிகத்துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகபட்சமாகப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம் இதுபோன்ற திட்டத்தை லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கும் கொண்டு செல்ல இருக்கிறது.

நந்தினி. பா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism