Published:Updated:

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…
பிரீமியம் ஸ்டோரி
வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

சாதனை

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

சாதனை

Published:Updated:
வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…
பிரீமியம் ஸ்டோரி
வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

வறட்சி... விவசாயத்தின் மிகப்பெரும் பிரச்னை. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போய்விட்டது. மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகம் சாகுபடி செய்வதே கேள்விக்குறியாகிவிட்டது. தண்ணீர் இல்லாமல் தரிசாகிக்கிடக்கின்றன, விளைநிலங்கள். வறட்சிக்குக் காரணம் கேட்டால், ‘மழை பெய்யவில்லை’ என்பதுதான் பொதுவான பதில். மழைப்பொழிவு சராசரி அளவைவிடச் சற்றுக் குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும், நம்மைவிடக் குறைவான மழை கிடைத்த சில மாநிலங்களில் விவசாயம் பொய்க்கவில்லை. அதற்குக் காரணம், அங்கே முன்னெடுக்கும் நீர் மேலாண்மை முறையும், நீர்நிலைகளைப் பராமரிக்கும் முறைகளும்தான். 

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மையைப் பார்த்து உலகின் பல நாடுகளும் இன்று வரை வியந்து கொண்டிருக்கின்றன. கிராமந்தோறும் குளங்கள். ஒரு குளம் நிறைந்த பிறகு அடுத்தக் குளம் நிறையுமாறு அடுக்கடுக்காகக் குளங்கள். தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் என மிகவும் துல்லியமாகச் செயல்படுத்தப்பட்ட நீர் சேகரிப்பு முறை, நம் முன்னோர் நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்து. அந்த நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காமலும் பயன்படுத்தாமலும் போனதன் விளைவுதான், தஞ்சைத் தரணியிலும் தரிசு நிலங்கள் பெருகுவதற்குக் காரணம். கிராமங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்களைச் சீரமைத்தால் விவசாயம் செழிக்கும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள், சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் கிராம மக்கள். இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், தமிழகத் தகவல் தொழில்நுட்பக் குழு நண்பர்கள்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் இருக்கிறது, வேப்பங்குளம் ஊராட்சி. ஒரு காலத்தில் மூன்று போகம் விளைந்த பகுதி. கடந்த சில ஆண்டுகளாக ஒரு போகமே விளைகிறது. பல விவசாயிகள் விவசாயத்திலிருந்து ஒதுங்கிவிட்டனர். இக்கிராமத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த போகத்தில் 250 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி நடந்திருக்கிறது. நெல் விளைந்த வயல்களில் பெரும்பாலானவை, சீமைக்கருவேல் மண்டிக் கிடந்த நிலங்கள். இது எப்படிச் சாத்தியமானது என்று, தகவல் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த திருச்செல்வம் இங்கே சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

“நமது நாட்டில் 70 சதவிகிதத்துக்கும் மேல் சிறு குறு விவசாயிகள்தான் இருக்கிறார்கள். 50 சதவிகிதத்துக்கும் மேல் மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில், சந்தைகள் நவீனமயமாக்கப்பட்டு இருக்கின்றன. டிஜிட்டல் முறையில் வியாபாரம் நடக்கிறது. ஆனால், இதுபற்றிய விவரங்கள் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. ‘மழை பெய்தால் விதைக்கிறோம், விளைந்தால் அறுவடை செய்கிறோம்’ என்ற மனநிலையில்தான் விவசாயிகள் இருக்கிறார்கள். ஒரு விவசாயி, தக்காளிச் சாகுபடி செய்தால், கிராமத்தில் உள்ள அத்தனை விவசாயிகளும் தக்காளிச் சாகுபடி செய்கிறார்கள். இதனால், சந்தையில் விலை கிடைப்பதில்லை. எனவே நாம் பயிர் செய்யும் காலத்தின் சூழ்நிலை, அவை அறுவடையாகும் நேரத்தில் சந்தையின் விலை நிலவரம், பயிர் செய்யும்போது தேவையான பயிர் மேலாண்மை, ஆலோசனை போன்றவை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால்தான் விவசாயம் நஷ்டமான தொழிலாகவே இருக்கிறது.

நான் முன்பு ஆந்திர மாநிலத்திலிருந்தேன். விவசாயிகளின் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் என்னைப் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள நண்பர்கள் இணைந்து ‘தகவல் தொழில்நுட்பக் குழு’ ஒன்றை அமைத்தோம் அக்குழுவின் மூலம் விவசாய மேலாண்மை நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை உருவாக்கினோம். 

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்து, ‘ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகளுக்கான தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றை அமைக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும், அந்த மையத்தின் மூலம் வழங்கலாம்’ என்ற செயல் திட்டத்தைச் சொன்னோம். அதில் உள்ள நன்மைகளைப் புரிந்துகொண்டவர், கடப்பா மாவட்டத்தில் புலிவேந்துலா ஒன்றியத்தில் 30 கிராமங்களில் இந்த மையங்களை அமைத்துக் கொடுத்தார். அந்தப் பகுதியில் வாழை, சாத்துக்குடி, கொய்யா போன்ற பயிர்கள் அதிகம். அந்தப் பகுதியில் விளையும் பழங்கள் ருசியானவை. விவசாய மேலாண்மை மையங்கள் தொடங்கப்பட்ட பிறகு சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் பேசி, விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். 

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

அதுவரை ஒரு கிலோ சாத்துக்குடி 8 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த ஏற்றுமதி வாய்ப்பு மூலமாக ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 100 சதவிகிதத்துக்கு மேல் விவசாயிகளுக்கு லாபம். தொடர்ந்து பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களிலிருந்த பெரும் பழக்கடைகளிலும் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு 40 சதவிகிதத்துக்கும் மேலான லாபம் கிடைத்தது. இரண்டரை ஆண்டுகள் கடப்பா மாவட்டத்தில் எங்கள் பணிகள் நடைபெற்றன. ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்தவுடன் அதற்குப் பிறகு வந்த அரசு, இந்தப் பணிகளுக்கு உதவி செய்யாத காரணத்தால் அது நிறுத்தப்பட்டது” என்ற திருச்செல்வம் வேப்பங்குளம் கிராமத்தில் செய்த பணிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

“அடுத்து நமது மாநில விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத் தமிழக அரசிடம் எங்கள் திட்டத்தைக் கொண்டு சேர்க்கப் பல முயற்சிகள் செய்தோம். ஆனால், தமிழகத்தில் அது சாத்தியப்படவில்லை. அதனால், எனது சொந்த ஊரான வேப்பங்குளத்தில் மக்கள் பங்கேற்புடன் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். 

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

எங்கள் ஊரில் நான்கு குளங்கள் இருக்கின்றன. இதோடு மணிமுத்தாறு ஆறும் இருக்கிறது. குளங்களும் வாய்க்கால்களும் பராமரிப்பு இல்லாமல் சிதைந்துபோய்க் கிடந்தன. இவற்றைச் சரிசெய்தால் நாம் மீண்டும் விவசாயத்தைச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொன்னோம். ஊர் மக்களை ஒருங்கிணைத்துக் கூட்டம் போட்டோம். மக்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள். அதன் முடிவில் மக்கள் பங்கேற்புடன் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நான்கு குளங்களையும், பதினைந்து கிலோமீட்டர் தூரமுள்ள ஏழு கால்வாய்களையும் சரி செய்தோம். அந்தப் பணி முடிந்த நிலையில் மழை பெய்தது. குளங்கள் முக்கால்வாசி நிறைந்தன. விவசாயிகள் உற்சாகமானார்கள். சீமைக் கருவேல் முள் மண்டிக்கிடந்த நிலங்களைச் சுத்தப்படுத்தி உழவு செய்தார்கள். ஆழ்துளைக் கிணறுகளில் நீராதாரம் அதிகரித்தது. பலகாலமாகத் திறக்கப்படாத மடைகள் திறக்கப்பட்டன. 250 ஏக்கர் நிலத்திலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சில விவசாயிகள் ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்தார்கள். தொடர்ந்து விவசாய ஆலோசகர்கள், வேளாண் அதிகாரிகளைக் கொண்டு பயிர் பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய்களுக்கான தீர்வுகள்குறித்து ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன.

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

ஒருங்கிணைந்த மேலாண்மையின் கீழ் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் அறுவடை செய்தபோது, ஒரு ஏக்கருக்கு ஒன்றரை முதல் இரண்டு டன் வரை மகசூல் கிடைத்தது. விளைச்சல் கிடைத்தும் விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ நெல் 16 ரூபாய்க்குத்தான் விற்பனையானது. எங்கள் கிராம மக்களின் முயற்சியைப் பார்த்து, மாவட்ட நிர்வாகம் உதவிகள் செய்ய முன்வந்தது. நெல்லை அவித்து, அரைத்து, அரிசியாக விற்றால் அதிக விலைக்கு விற்கலாம் என முடிவு செய்தோம். ஆனால், நெல்லை வேக வைக்கும் வசதி அனைத்து வீடுகளிலும் இல்லை. அதனால், மாவட்ட நிர்வாகத்திடம் நெற்களம் அமைத்துத் தரக் கேட்டோம். மாவட்ட கலெக்டர் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தார். தற்போது களம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த அறுவடையின்போது, இங்கு வேக வைத்து, அருகில் உள்ள ரைஸ்மில்லில் அரைத்து அரிசியாக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் வருமானம் அதிகமாகும்” என்ற திருச்செல்வம் நிறைவாக,

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

“ஒவ்வொரு கிராமத்திலும் மக்களே தங்கள் நீராதாரங்களைச் சரிசெய்து விவசாயம் செய்தால் சிறப்பாக விளைவிக்க முடியும். அந்தந்த பகுதிக்கு ஏற்பப் பயிர்களை மாற்றிக்கொள்ளலாம். விவசாய மேலாண்மை மையங்கள், அனைத்து ஊராட்சிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக, விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை அளிக்க முடியும். என்னென்ன பொருள், எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்த முடியும்.

விவசாயிகளுக்குத் தங்கள் விளைபொருளின் மதிப்பைத் தெரிந்துகொள்ள வழிகாட்ட முடியும். அதற்கான செயல் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை அரசுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார் உறுதியான குரலில். கிராமங்களில் விவசாய மேலாண் மையங்களை அமைக்க அரசு ஏற்பாடு செய்தால், விவசாயிகளுக்குப் பல வகைகளில் நன்மைகள் கிடைக்கும்.

தொடர்புக்கு, திருச்செல்வம், செல்போன்: 98403 74266

ஆர்.குமரேசன், படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

வறட்சியை வென்ற கிராமம்... தரிசு நிலங்களில் நெல் சாகுபடி…

“ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்தோம்!”

வே
ப்பங்குளம் பகுதி விவசாயி காளிதாஸிடம் பேசினோம். “இது நல்லா விளைகிற பூமி, ஒரு காலத்துல எலுமிச்சைச் சாகுபடிக்குப் பேர்போன ஊர். தண்ணியில்லாம எல்லாம் போச்சு. இந்த நேரத்துலதான் ஊர் மக்களை ஒண்ணு சேர்த்து, கண்மாயைச் சரிசெய்யலாம்னு சொன்னாங்க. எல்லோரும் முடிஞ்ச அளவுக்குக் காசு போட்டோம். வெளியே இருந்தும் சிலர் காசு கொடுத்தாங்க. அந்தப் பணத்தை வெச்சு, கண்மாயைச் சரி பண்ணினோம். மழை பெய்ஞ்சதும் கண்மாய்க்குத் தண்ணி வந்துச்சு.

போன தடவை மழையில்லாம சீமைக்கருவேல் காடா இருந்த நிலத்தைச் சுத்தமாக்கி நெல் விதைச்சேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நெல் விதைச்சது சந்தோசமா இருந்துச்சு. இப்ப கண்மாயில தண்ணியில்லை. ஆனா, வர்ற மழைக்காலத்துல நிறைஞ்சுடும். இந்தத் தடவை விவசாயத்தை விட்டுட்டுப் போன பல பேரு திரும்பவும் விவசாயத்துக்கு வரப்போறாங்க” என்றார். இவரது கருத்துகளை மற்ற விவசாயிகளும் ஆமோதித்தனர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism