‘பசுமை விகடன்’ இதழில் இத்தொடரை எழுத ஆரம்பித்தபிறகு, பல வாசகர்கள் எங்கள் உதவி மையத்தைத் தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்கள். எங்களால் முடிந்த அளவு அவர்களுக்குப் பதில்களைச் சொல்லி வருகிறோம். இத்தொடர் குறித்துப் பல விவசாயிகள் எங்களைப் பாராட்டியும் வருகிறார்கள்.

அதே நேரத்தில், எங்கள் பதில்களில் திருப்தி அடைவதில்லை சில விவசாயிகள். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம். ‘அரசு மானிய உதவிகளை முகவராக இருந்து வாங்கித்தர முடியுமா’ என்று சிலர் கேட்டனர். ‘அதுபோன்ற வேலைகளை நாங்கள் செய்ய முடியாது. உங்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வேலைகளைத்தான் செய்ய முடியும்’ என்று நாங்கள் சொல்லியபோது, அவர்கள் திருப்தி அடையவில்லை. இதுபோன்று வாசகர்கள் கேட்ட முக்கியமான கேள்விகள் பற்றியும் அதற்கு எங்கள் உதவி மையம் அளித்த பதில்கள் பற்றியும் இந்த இதழில் பார்ப்போம்.

‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்தவுடன் ரொக்கமாகப் பணம் கொடுக்கும் பழைய முறையை நடைமுறைப்படுத்த வழிவகை உண்டா’ என்று பல விவசாயிகள் கேட்டு வருகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பழைய முறையிலும் மூட்டைக்கு 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தோம். இப்போதும் அதே கதைதான் தொடர்கிறது. முன்பு ரொக்கமாகக் கொடுக்கும்போது, லஞ்சத்தொகையைப் பிடித்துக்கொண்டு மீதித்தொகையை உடனடியாகக் கொடுத்து விடுவார்கள் அதிகாரிகள். தற்போது லஞ்சம் கொடுத்தால்தான் கொள்முதல் செய்கிறார்கள். நெல்லைக் கொடுத்தபிறகு, ஒரு வாரம் கழித்துத்தான் ஆன்லைன் மூலம் பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துகிறார்கள். இதற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்பதுதான்.

நாங்கள், மீண்டும் ரொக்கம் கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடையாது என்று பதில் சொன்னோம். லஞ்சத்தை ஒழிப்பதற்காகத்தான் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் முறையை அரசு கொண்டு வந்தது. ஆனால், 1 சதவிகிதம்கூட லஞ்சம் குறையவில்லை என்பது வேதனையான உண்மை. நாட்டுக்குச் சோறுபோடும் தங்களிடம் லஞ்சம் கேட்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எல்லா விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்து நிறைய விவசாயிகள் மானியம் குறித்துத்தான் கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக, ‘விவசாயத்துக்கான மானியம் எப்போது ஒதுக்கப்படும்’ என்பதுதான் பலரின் கேள்வி.

ஒவ்வோர் ஆண்டும் நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு மானிய தொகையை ஒதுக்கீடு செய்கிறது. எந்தத் திட்டத்துக்கு எவ்வளவு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அந்தந்த மாவட்ட வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலகங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். அந்த அலுவலகங்களில் திருப்தியான பதில் கிடைக்கவில்லையென்றால், அத்துறையின் மாநிலத் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இந்த அலுவலகங்களின் தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எங்களது உதவி மையத்தைத் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

‘இன்ஷூரன்ஸ், மானியம், கடன் போன்றவை குறித்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், எங்களுக்கு ஏதாவது பிரச்னை வருமா’  என்றும் விவசாயிகள் கேட்கிறார்கள்.

ஒரு பிரச்னையும் ஏற்படாது. இச்சட்டத்தின் மூலம் கேள்விகள் கேட்பதால் உங்களுக்கு விரைவாக வேலைகள் முடித்துக் கொடுக்கப்படும். உங்களது பயம் மற்றும் பலவீனம் போன்றவை அரசு அலுவலர்களுக்குப் பலமாகிவிடும். அதனால், பயப்படவே தேவையில்லை. தவறு செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் ஆகியோர்தான் பயப்பட வேண்டும். உங்களது உரிமையைத் தைரியமாக உரக்கக் கேட்டுப் பெறுங்கள். உங்களுக்கு ஏதும் பிரச்னை என்றால் எங்கள் இயக்கம் துணை நிற்கும்.

‘ஒரு பயிருக்கு ஒரே அளவு இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டினாலும், ஒவ்வொரு விவசாயிக்கும் இழப்பீட்டுத்தொகை மாறுபடுவது ஏன்’ என்பதும் பலரின் கேள்வி.

தற்போது, இழப்பீட்டுத்தொகை அந்தந்த வருவாய் கிராம வாரியாகக் கணக்கெடுக்கப் படுகிறது. ஒரு வருவாய் கிராமத்திலிருந்து ஒரே பயிருக்குக் காப்பீடு செலுத்தியிருக்கும் அனைவருக்கும் இழப்பீடும் ஒரேமாதிரிதான் கிடைக்கும். அதில் மாறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தெரிவிக்க மறுத்தால் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கேட்கலாம்.

கூட்டுறவு வங்கி என்றால் மாவட்ட பதிவாளரிடமும் மற்ற வங்கிகள் என்றால் வங்கி குறைதீர்ப்பாளரிடமும் புகார் செய்யலாம். அங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். அதில், தவறு கண்டுபிடிக்கப்பட்டால் புகார் செய்யலாம்.

‘வங்கிக் கணக்கில் எங்களின் அனுமதி இல்லாமலேயே பணம் எடுத்து விடுகிறார்கள். வரவு வைக்கப்பட்ட தொகை எவ்வளவு, பிடித்தம் செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்று எப்படித் தெரிந்து கொள்வது’ என்றும் பல விவசாயிகள் கேட்டனர்.

வங்கி மேலாளர் அல்லது கூட்டுறவு வங்கிச் செயலாளரை அணுகிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என்றால், கூட்டுறவு வங்கி என்றால் மாவட்ட பதிவாளரிடமும், மற்ற வங்கிகள் என்றால் வங்கி குறைதீர்ப்பாளரிடமும் புகார் செய்யலாம். அங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விளக்கம் கேட்கலாம். மேலும் உதவி தேவைப்பட்டால், எங்கள் உதவி மையத்தை அணுகுங்கள்.

‘தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த தகவல்கள்மூலம் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், சட்டப்பஞ்சாயத்து உதவி மையம்மூலம் புகார் செய்ய முடியுமா’ என்றும் பலர் கேட்டனர்.

கண்டிப்பாக நாங்கள் புகார் செய்யத் தயாராக இருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் சம்பந்தப்பட்ட விவசாயியின் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியிடப்படாது என்றும் உத்தரவாதம் அளிக்கிறோம்.

இன்னும் சில கேள்விகள் குறித்து அடுத்த இதழில்…

-வழிகாட்டல் தொடரும்