Published:Updated:

இந்த ஆண்டின் மா விற்பனை எப்படி? ஓர் அலசல்!

இந்த ஆண்டின் மா விற்பனை எப்படி? ஓர் அலசல்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த ஆண்டின் மா விற்பனை எப்படி? ஓர் அலசல்!

இந்த ஆண்டின் மா விற்பனை எப்படி? ஓர் அலசல்!

ஒரு கிலோ மாம்பழம் 100 ரூபாய்..!

கா
ஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றத்தில் மா சாகுபடி செய்து வரும் தெய்வசிகாமணியிடம் (இறையழகன்) பேசினோம். “போன முறை என்னுடைய பண்ணையில் மா விளைச்சல் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு விளைச்சல் குறைவு. 

இந்த ஆண்டின் மா விற்பனை எப்படி? ஓர் அலசல்!

பொதுவாக மா சாகுபடி ஓர் ஆண்டு நல்ல விளைச்சல் கிடைச்சா, அடுத்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருக்கும் என்பது வழக்கம். இந்த நிலையில ஒவ்வொரு இயற்கை விவசாயியும் ஒரு தவம்போல்தான் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். ஆனா, மக்கள்கிட்ட அத தேடி வாங்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லை. ஒரு நோய் வந்துட்டா, எவ்வளவு தூரம் சென்றும் மருத்துவம் பார்க்கிறோம். சிறந்த மருத்துவரைத் தேடுகிறோம்.

அதேமாதிரி சிறந்த சுற்றுலா இடங்களைத் தேடுகிறோம். கல்வி கற்க சிறந்த பள்ளிக்கூடங்களைத் தேடுகிறோம். அந்தமாதிரி இயற்கையான பொருள்கள் விளையும் இடத்தை மக்கள் தேடி வாங்க முன்வர வேண்டும். ஏனென்றால், உடல் ஆரோக்கியமே மனித வாழ்வின் அடிப்படை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இந்த ஆண்டின் மா விற்பனை எப்படி? ஓர் அலசல்!

என்னோட உறவினர்கள் ஐ.டி கம்பெனில வேலை செய்றவங்கறதால, அவங்க மூலமா ஒரு கிலோ மாம்பழம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஆனா, இது எல்லா விவசாயிகளுக்கும் சாத்தியபடுமா? நெடுஞ்சாலைகள்ல மாம்பழங்களை விற்பதும் நிறைய கேள்விக்குட்படுது. பூச்சிக்கொல்லி தெளிப்பு, கார்பைடு கல் கொண்டு பழுக்க வைப்பது போன்ற பிரச்னைகளால் மா சாகுபடி விவசாயம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயிட்டு வருது. வளர்ப்பதற்கு எளிதான பயிர், அனைவராலும் விரும்பிச் சாப்பிடப்படும் பழம் என்று பல சாதக அம்சங்கள் மாம்பழங்களுக்கு உண்டு. விவசாயிகள் தங்களுக்கான சந்தையை உருவாக்கினால், மாம்பழச் சாகுபடியில் நல்ல வருமானம் பார்க்கலாம்” என்றார்.

இயற்கை அங்காடிகள் வேண்டும்...

சென்னை, கோயம்பேடு வர்த்தகர்கள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜனிடம் பேசினோம். “இந்தாண்டு அதிக விளைச்சலும் இல்லை; குறைவான விளைச்சலும் இல்லை. இரண்டுக்கும் நடுத்தரமான ஒரு நிலை நீடிக்கிறது. வறட்சிக் காரணமாகப் பல இடங்களில் மாமரங்களிலிருந்து பூ உதிர்ந்துபோனது மா விளைச்சல் குறைந்து போனதற்கு ஒரு காரணம். நம் மக்கள்தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். அவர்களை மருத்துவர்கள் பழங்களைச் சாப்பிடாதீர்கள் என்று பரிந்துரைப்பதால், சீசன் காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழங்கள் சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னொன்று கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களால் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் பீதியும் முக்கியமான காரணம். இதற்கு வர்த்தகர்கள் திருந்தினால் ஒழிய விடிவில்லை. சீசனில் ஒரு நாளைக்குக் கோயம்பேட்டுக்கு 20 லாரி லோடு மாம்பழங்கள் வருகின்றன. இந்தமுறையும் வந்திருக்கிறது. ஆனால், விற்பனை பெரிய அளவில் சூடுபிடிக்கவில்லை. மாம்பழங்களுக்குப் பதிலாகத் தர்பூசணி, கிர்ணி பழங்களுக்கு இந்த முறை நல்ல வரவேற்பு இருந்தது. கார்பைடு கல் பழங்களுக்கு மாற்றாக இருப்பது இயற்கையாக விளைந்து, இயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான். மக்கள் அதைத் தேடி வாங்க முன்வர வேண்டும். மாம்பழங்களை இயற்கையாகப் பழுக்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இயற்கை முறையில் விளையும் பழங்கள், காய்கறிகளை விற்க மாநகரங்களில் கடைகளை அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால், இயற்கை விளைபொருள்களுக்கு மவுசு கூடிவிடும்” என்று ஆலோசனை வழங்கினார்.

மாம்பழத்தில் மதிப்புக்கூட்டல்

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், “மாம்பழங்களின் விற்பனை பாதிக்கப்படும்போது, அதை மதிப்புக்கூட்டி விற்பதுதான் புத்திசாலித்தனம். இதற்குப் பயிற்சியும் கொஞ்சம் முயற்சியும் தேவை. தற்போது மாம்பழத்திலிருந்து ஷீட் (ஜெல் போன்ற ஒருவகை மிட்டாய்) என்ற இனிப்பு வகைக்கு நல்ல வரவேற்பு உண்டு. இது கிட்டத்தட்ட மிட்டாய் போன்று இருக்கும். இதைத்தவிரப் பழக்கூழ், ஜூஸ், ஜாம் போன்றவைகளையும் மதிப்புக் கூட்டலாம். மாம்பழத்தில் நிறைய பேர் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். எங்கள் மையத்தில் மதிப்புக்கூட்டுவதற்குப் பயிற்சிகளையும், அதற்கான கருவிகள் வாங்குவதற்கான உதவிகளையும் செய்கிறோம். ஆர்வமிருப்பவர்கள் மையத்தை அணுகலாம்” என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு: இயக்குநர், மத்திய உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி மையம், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர். தொலைபேசி: 04362 228155.

த.ஜெயகுமார், படம்: வ.யஸ்வந்த்