Published:Updated:

உலகம் சுற்றும் உழவு!

உலகம் சுற்றும் உழவு!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

உலகம் சுற்றும் உழவு!

தரச் சான்றிதழ் தேவையில்லை!

யற்கை விளைபொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகள், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ்கள் இல்லாமல், நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. இயற்கை விளைபொருள்களுக்கு மத்திய அரசு வழங்கும் ‘ஜெய்விக் பாரத்’ என்ற முத்திரை(லோகோ) பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இந்த விதிமுறைகளின்படி பதிவு செய்து சான்றிதழ்களைப் பெற்றுத்தான் விற்பனை செய்ய முடியும். 

உலகம் சுற்றும் உழவு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதே நேரத்தில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானமுள்ள விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம்வரை தரச்சான்று இல்லாமல் இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.

உலகம் சுற்றும் உழவு!

உரமாகும் மனித உடல்!

வீ
ட்டில் வளர்க்கும் நாய்கள் இறந்தால், அவற்றைத் தென்னை மரங்களுக்கு அருகில் புதைக்கும் வழக்கம் நம்மிடையே உண்டு. இறந்த நாயின் உடல் மட்கி நுண்ணுயிரிகள் உருவாகி மண்ணின் வளம் அதிகரிக்கும். தற்போது, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் இறந்த மனிதர்களின் உடல்களை உரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகம் சுற்றும் உழவு!

மனித உடலை உரமாகப் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

வாஷிங்டனைச் சேர்ந்த கட்ரினா ஸ்பேட் என்ற கட்டடக்கலை நிபுணர், இறந்த மனித உடல்களை மரத்துகள்கள், குதிரை மசால் (Alfalfa) மற்றும் வைக்கோல் ஆகியவற்றுடன் சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரித்தால், சில வாரங்களில் மண்ணுக்குப் பயனுள்ள உரமாக மாற்றலாம் எனக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக அனுமதி வாங்கி இறந்துபோன 6 பேரின் உடல்களைப் பயன்படுத்திச் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்குப் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், ஆராய்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்படவில்லை.

உலகம் சுற்றும் உழவு!

விரிவுபடுத்தப்பட்ட  பி.எம் கிஸான் (PM-KISAN) திட்டம்!

டந்த பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட் அறிக்கையில், 12.5 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைத்தபிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பி.எம் கிஸான் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரு விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். இந்தியாவில் மொத்தம் 14.5 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவர்.

உலகம் சுற்றும் உழவு!

வனப்பகுதியில் விவசாயப் பண்ணைகள்!

ஸ்
காட்லாந்து அரசு, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஓர் அவசரக் கொள்கையைக் கொண்டுவந்துள்ளது. அதில் வன நிலங்களை விவசாயப் பண்ணைகளாக மாற்றி உணவு தானியங்களைப் பயிர் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் முடிவு செய்துள்ளது.

ஸ்காட்லாந்தில் இளம் விவசாயிகள் பலருக்கு விவசாய நிலங்கள் போதுமான அளவில் இல்லாததால், அவர்களுக்கு உதவும் வகையில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வன நிலங்களை விவசாயப் பயன்பாட்டுக்காக ஏலம் விட முடிவு செய்திருக்கிறது அந்நாட்டு அரசு.

முதல் கட்டமாக 6,400 ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப்பகுதி தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதோடு, விவசாய நிலங்களில் எரிபொருள் பயன்பாட்டுக்கான மரங்களை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்தை அழிக்காமல் விவசாயத்தில் தற்சார்பு நிலையை அடைய ஸ்காட்லாந்து முயற்சி செய்து வருகிறது.

உலகம் சுற்றும் உழவு!

வாழையை அச்சுறுத்தும் நோய்கள்!

1960-ம்
ஆண்டுவரை இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த வாழை ரகம் ‘க்ராஸ் மிக்கெல்’ (Gros Michel). இந்த ரகத்துக்குச் சந்தையில் அதிக தேவை இருந்ததால், விவசாயிகள் அதிக அளவு விளைவித்தனர். 1960 காலகட்டத்தில் ‘பனாமா வாடல்’ நோய் தாக்கியதில், இந்த ரகம் மொத்தமும் அழிந்து போனது.

அதற்குப் பிறகு, அந்நோயை உண்டாக்கும் பூஞ்சணத்துக்கான எதிர்ப்புத்திறனோடு, ‘கேவண்டிஷ்’ எனும் வாழை ரகம் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில் உற்பத்தியாகும் வாழை ரகங்களில் 50 சதவிகித அளவு, இந்த ரகம்தான் உற்பத்தியாகிறது.

இந்த ரகத்தைத் தற்போது, ‘கருப்பு சிக்காடோகா இலைபுள்ளி நோய்’ மற்றும் ‘பனாமா வாடல் நோய்’ ஆகியவை தாக்கியுள்ளன. இவை இரண்டுமே மிக ஆபத்தான நோய்கள். இவற்றைப் பரப்பும் பூஞ்சணங்கள் மண் மூலம் பரவும் தன்மையுடையவை. இவற்றைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள், விவசாயிகள். அதோடு, இந்நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வாழை ரகத்தை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பா.நந்தினி