Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள் 

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 15-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’, 23-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.


செம்மரம் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூலை 9-ம் தேதி ‘அசோலா, பஞ்சகவ்யம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’, 11-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 18-ம் தேதி ‘நவீன வேளாண்மைச் சாகுபடி’, 23-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘செம்மரம் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 30-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

பாரம்பர்ய விதைக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ராக்லாண்ட் பள்ளியில் ஜூலை 14-ம் தேதி தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பர்ய விதை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்குநடைபெறவுள்ளது. அறச்சலூர் செல்வம் மற்றும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். மானாவாரி தானிய விதைகள், நாட்டுக் காய்கறி விதைகள், பாரம்பர்ய நெல் ரகங்கள், உயிர்வேலி விதைகள், எருச்செடி விதைகள், பயறு வகைகளின் விதைகள், எண்ணெய் வித்துக்களின் விதைகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெறவுள்ளது. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 94435 75431, 96554 37242

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு


அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 5-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547

உயிர்ச்சூழல் மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஒடுகம்பட்டி கிராமத்தில் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரால் துவக்கப்பட்ட கொழிஞ்சிப் பண்ணையில் குடும்பம் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் உயிர்ச்சூழல் மாநாடு ஜுலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் அரசு துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை வேளாண் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாற்றுத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கும் முன்னோடி விவசாயிகள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

குழு விவாதம், கருத்தரங்கம் சிறுதானியங்கள் விதை, நாட்டுக் காய்கறி விதை பகிர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாநாட்டில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.  பங்கேற்புக் கட்டணம் ரூ.100 (மதிய உணவு மற்றும் விதை 2 கிலோ வழங்கப்படும்).

தொடர்புக்கு: 98424 33187, 0431 2331879 

அசோலா வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூன் 29-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’, ஜூலை 6-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை’, ஜூலை 27-ம் தேதி ‘மாடித்தோட்டம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

‘த
ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

பசுமைக் குழு