Published:Updated:

தலையங்கம்

'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்!

தலையங்கம்
தலையங்கம்

ன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 'தானே' புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு உதவிடும் வகையில், முதல் பங்களிப்பாக விகடன் குழும நிறுவனங்கள் சார்பாக

தலையங்கம்

10 லட்சம் அளிக்க முன்வந்துள்ளதை அறிவீர்கள். அன்பு வாசகர்களே... நீங்களும் அவரவரால் இயன்ற நிதியை அனுப்பத் தொடங்கிவிட்டீர்கள். 'எந்தப் பெயருக்கு நிதி அனுப்ப வேண்டும்? எப்படி அனுப்ப வேண்டும்?’ என்று தொடர்கிறது உங்களின் மனிதநேயம் மிக்க விசாரணை.

நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.

தலையங்கம்

வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918-க்கு (எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/0304 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், எதிர்பக்கம் நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து  பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

உங்களுக்கான ரசீதுகளை அனுப்பிவைப்பதோடு, துயர் துடைப்புத் திட்டத்தில் தொடரும் முன்னேற்றங்களை விகடன் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். www.vikatan.com/thane என்ற இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை இப்போதே நீங்கள் காணலாம். நிதி அளித்துவரும் நல்ல மனங்களின் பட்டியலும், நமது பல்வேறு நிவாரண நடவடிக்கைக்கான செலவுக் கணக்கும் அந்த இணைய முகவரியின் வாயிலாக அடுத்தடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.

வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!

- ஆசிரியர்

தமிழருவி மணியன் திரட்டிய

தலையங்கம்

67 ஆயிரம்!

தலையங்கம்

'காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், திருப்பூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில், ''கடலூர், நாகை, புதுச்சேரியில் நமது சகோதரர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்’' என்று கேட்டு, 67 ஆயிரம் ரூபாயைத் திரட்டியிருக்கிறார். பிறகு, இயக்குநர் தங்கர்பச்சானுடன் நம் அலுவலகத்துக்கு வந்த தமிழருவி மணியன், ''இது உழைக்கும் மக்கள் கொடுத்த பணம். ஏழைகளைக் காப்பாற்ற ஏழைகளால்தான் முடியும் என்பதை உணர்ந்து கொடுத்த பணம். இதைப் பார்த்து வசதி உள்ளவர்களும், துயர்துடைப்பு நிதி வழங்கினால், அதுவே இந்த 67 ஆயிரத்தின் பயன்பாடாக இருக்கும்'' என்றபடி நம்மிடம் ஒப்படைத்தார்!

ஆரம்பமானது துயர்துடைப்புப் பணி!

'தானே துயர் துடைப்புப் பணிக்குக் கைகொடுங்கள்' என்று எங்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில்... 'ஆயிரம் மூங்கில்கழிகள் வைத்திருக்கிறேன். அவற்றை அந்த மக்களுக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் சொல்லும் இடத்தில் நானே கொண்டு வந்து சேர்க்கிறேன்' என்று தன் குரலை பதிவு செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்ரீதுர்காபவன் உணவகம் நடத்தும் பி.செல்வம்.

'புயலின் கோரத் தாக்குதலால் வீடுகளின் கூரைகளை இழந்த மக்களுக்கு இதைக் கொண்டு சேர்க்கலாம்' என்று தீர்மானித்த நாங்கள், கூடவே... 'கீற்று, பாளை, கயிறு ஆகியவற்றையும் கொடுப்பதுதானே சரி' என்று யோசித்தோம்.

தலையங்கம்

''கீற்றுகளை வாங்கி, நீங்கள் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து இறக்குவது என் பொறுப்பு'' என்று முன் வந்தார் இயக்குநர் மற்றும் நடிகர் சசிக்குமார்.

இந்த உதவிப் பொருட்களை வழங்குவதற்காக நாம் தேர்ந்தெடுத்தது... கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சாலியந்தோப்பு கிராமத்தின் ஆற்றுக் கரையோர குடிசைகளைத்தான். கீற்றுக்கூரைகள் எல்லாம், காற்றுக்கு இரையாகிவிட, பாலிதீன் பேப்பர்களையே கூரையாக்கி வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு... இவற்றையெல்லாம் நேரில் வந்து வழங்கினர் சசிக்குமார் மற்றும் செல்வம்.

காலத்தினாற் செய்த இந்த உதவிக்கு, தங்களின் கண்ணீரை நன்றி காணிக்கையாக்கினர் அந்த ஏழைகள்!

சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் உதவியோடு, செட்டிநாடு ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த 20 மருத்துவர்கள், 30 மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்க, பன்ருட்டி அருகேயுள்ள பத்திரக்கோட்டை கிராமத்தில், ஜனவரி 21 அன்று மருத்துவ முகாம் ஒன்று 'டாக்டர் விகடன்' சார்பில் நடத்தப்பட்டுள்ளது.

தலையங்கம்