Published:Updated:

ஆறு... உருவான வரலாறு!

ஜி.பழனிச்சாமிபடங்கள் : தி.விஜய்

ஆறு... உருவான வரலாறு!

ந்த இதழுக்கான அட்டைப்படம் எடுக்கப்பட்ட இடம்... நாமக்கல் மாவட்டம், கொடுமுடி, முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள ஒரு வயலில்தான்.

 'முன்னோடி இயற்கை விவசாயி' புரவிமுத்துவின் ஏற்பாட்டில், தொட்டிப்பாளையம் சுப்பிரமணி என்பவர் நடவுப் பெண்களை அழைத்து வந்தார். பலமுறை நீட்டிக் குறைத்து, ஒரு வழியாக வடிவத்துக்கு வந்தது 6!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எல்லாம் சரியான பிறகு பறவைப் பார்வையில் படம் எடுப்பதில் சிக்கல்! மாட்டுவண்டி, டிராக்டர் எதுவும் கைகொடுக்கவில்லை.

''ஏணி மேல ஏறி நின்னு எடுங்களேன்'' என்று சினிமா ஒளிப்பதிவாளர் கணக்காக அங்கிருந்த பெண் கொடுத்த யோசனையை உற்சாகமாக செயல்படுத்தினோம்.

இரண்டு, மூன்று பேர் சேர்ந்து ஏணியை செங்குத்தாக நிறுத்தி பிடித்துக்கொள்ள, உச்சியில் ஏறி படம் பிடித்தார் புகைப்படக்காரர்.

கீழே இறங்கி வந்து... 'படம் நன்றாக இருக்கிறது' என்று மானிட்டரை பார்த்து அவர் சொல்ல... அனைவருக்கும் ஏக சந்தோஷம்!