Published:Updated:

தண்டோரா - பசுமைக்குழு

படம் : தி.விஜய்

இலவசப் பயிற்சிகள்

 ஸ்பைருலீனா வளர்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 2-ம் தேதி ஸ்பைருலீனா பாசி வளர்ப்பு; 8-9 தேதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு; 10-ம் தேதி தேனீ வளர்ப்பு; 14-ம் தேதி முயல் வளர்ப்பு; 15-16 தேதிகளில் பருவகால காய்கறி சாகுபடி; 21-22 தேதிகளில் நெல் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்கான பண்ணைக் கருவிகள்; 22-23 தேதிகளில் மதிப்பூட்டப்பட்ட சோயா பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.

பண்ணைக் குட்டை!

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 25-ம் தேதி பசுந்தீவன உற்பத்தி; 31-ம் தேதி பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, அலைபேசி: 99429-78526.

அலங்கார மீன்!

தண்டோரா - பசுமைக்குழு

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், பிப்ரவரி 14-ம் தேதி இறைச்சி உற்பத்திக்கான ஜப்பானியக் காடை வளர்ப்பு; 16-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு; 23-ம் தேதி கறவை மாடுகளுக்கான பசுந்தீவன உற்பத்தி மற்றும் நோய் மேலாண்மை; 28-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பில் தொற்றுநோய் தடுப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266650, 266345.

கால்நடை கண்காட்சி!

தண்டோரா - பசுமைக்குழு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல கால்நடை கண்காட்சி நடத்துகிறது. பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. கறவை மாடு வளர்ப்பு, ஆடு, முயல், வெண்பன்றி, நாட்டுக்கோழி, தீவனப்புற்கள், பால் கறக்கும் இயந்திரம், மதிப்பூட்டிய பால், இறைச்சிப் பொருட்கள்... போன்றவை இடம்பெற உள்ளன. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையங்களும் அரங்குகள் அமைக்கின்றன. ஒரே குடையின் கீழ் கால்நடை மற்றும் மீன் வளம் குறித்தத் தகவல்களைப் பெறலாம்.

கட்டணப் பயிற்சி

கால்நடைகளுக்கு பாரம்பரிய மருத்துவம்!

கால்நடைகளுக்கான பாரம்பரிய மருத்துவப் பயிற்சி முகாம் பிப்ரவரி 2-3 தேதிகளில் நடைபெற உள்ளது. இடம்: கோபிச்செட்டிப்பாளையம், சீதா கல்யாண மண்டபம்.

கால்நடை நோய்களுக்கு, மூலிகைகளைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தல் மற்றும் சிறுதானியம், இயற்கை வேளாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். உணவு, தங்குமிட கட்டணம் ரூ.200. முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஏற்பாடு: மதுரை சேவா தொண்டு நிறுவனம், ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, தானம் அறக்கட்டளை.

தொடர்புக்கு: ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, 88 ராமசாமி தெரு, கவுந்தப்பாடி-638455. செல்போன்: 94425-41504, 98427-04504.