Published:Updated:

வேற யாராலும் சொல்ல முடியாது

இயக்குனர் ஜனநாதன்

##~##

'பசுமை விகடன்' விவசாயத்துக்குனு ஒரு பத்திரிகை... அதுவும் தமிழ்நாட்டுல மிகப்பெரிய நிறுவனத்துல இருந்து வந்தது ரொம்ப பெரிய விஷயம். முதல் இதழ்லயே என்னோட கட்டுரையும் வெளியாகியிருந்துச்சு. பசுமை விகடனுக்கும் மத்த பத்திரிகைகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னன்னா... அதுல வர்ற கட்டுரைகள் எல்லாமே நூறு சதவிகிதம் ஆதாரப்பூர்வமானக் கட்டுரைகள். அதுலயே நமக்கு மேற்கொண்டு தகவல் வேணும்னாலும், அந்த விவசாயிகிட்ட நாமளே தொடர்பு கொண்டு பேச வசதியா போன் நம்பரையும் போட்டுடுவாங்க. நானே பலமுறை இப்படி விவசாயிங்ககிட்ட பேசியிருக்கேன்.

 பசுமை விகடனோட நேரடியான விளைவு என்னனு எங்கயும் தேடி போகவேண்டியதில்ல... நானே நல்ல உதாரணம். பசுமை விகடனால தான் தூரன் நம்பி, புகழேந்தியோட அறிமுகம் கிடைச்சுது. அவங்களாலதான் நானும் இயற்கை விவசாயக் கூட்டுப் பண்ணையில விவசாய நிலம் வாங்கி, ஒரு விவசாயியா ஆக முடிஞ்சுது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வேற யாராலும் சொல்ல முடியாது

தஞ்சாவூர் மாவட்டம், வடசேரிதான் பூர்வீக கிராமம். ஆனா, நான் சென்னையிலயே பொறந்து வளர்ந்தவன். பிறப்பால் விவசாயி மகனா இருந்தாலும், இன்னிக்கு எனக்கு விவசாய அறிவைப் புகட்டினதுலயும் அனுபவ விவசாயியா என்னை மாத்தினதுலயும் பசுமை விகடனுக்கு ரொம்பவே பங்கு இருக்குது.

இயற்கை விவசாயத்தின் அருமையை பசுமை விகடன் முன்னெடுத்துச் செல்வது ரொம்பப் பெரிய விஷயம். ரசாயன விவசாயம் வயிற நெறைச்சுது... ஆனா, உயிரை குடிச்சுது. இயற்கை விவசாயம்தான் என்னிக்கும் நெலைச்சு நிக்கும்னு பசுமை விகடன் மாதிரி அடிச்சு, ஆணித்தரமா ஆதாரத்தோடு வேற யாராலும் சொல்ல முடியாது.

இன்னிக்கு அண்ணா ஹஜாரே, பென்னி குக் பத்தியெல்லாம் மீடியாக்கள்ல பக்கம் பக்கமா எழுதுறாங்க, படம் படமா காட்டுறாங்க. ஆனா, பசுமை விகடன் ஆரம்பிச்சதுலயிருந்தே அவங்களப் பத்தியெல்லாம் எழுதிகிட்டே இருக்கு.

இன்னிக்கு திரைப் படத்துறையிலயே பலரும் விவசாயத்துப் பக்கம் போக ஆரம்பிச்சுட்டாங்க. அதுல நடிகர் பசுபதி ரொம்ப முக்கியமானவர். ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது விவசாயத்தைப்பத்தி எங்கிட்ட பேசுவார். எல்லாத்துக்கும் காரணம்... பசுமைவிகடன்தான்!

சந்திப்பு: எஸ். கதிரேசன்