Published:Updated:

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

##~##

டு, மாடுகளுக்கு நோய் நொடி வந்தாலும் சரி, பயிர் பச்சைக்கு பாதிப்பு வந்தாலும் சரி... உடனே கை கொடுக்கறது மூலிகைதான். ஆனா, இப்ப இருக்கற தலைமுறைக்கு, மூலிகைகள் பத்தின வெவரமே போய் சேராம இருக்கு. அந்தக் குறையைத் தீர்த்து வைக்கறதுக்காக... படங்களோட ஒவ்வொரு மூலிகையா சொல்லப் போறேன். கவனமா கேட்டு, அடுத்த தலைமுறைக்கு அதையெல்லாம் கடத்துங்க!

• பால்மாட்டுக்கு மடிவீக்க நோய் வந்தா... சோற்றுக் கற்றாழை 250 கிராம், மஞ்சள் பொடி 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம்... இது மூணையும் உரல்ல போட்டு கெட்டியா அரைச்சி எடுத்துக்கோங்க. இதுல ஒரு கை அளவு எடுத்து, நீர்விட்டு கரைச்சி... மாட்டோட மடி, காம்பு மேல இரண்டு மணி நேரத்துக்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மண்புழு மன்னாரு!

ஒரு தடவை பூசி விடுங்க. ரெண்டு மூணு நாளைக்கு இப்படி செஞ்சா... மடிவீக்கம், குணமாயிடும்.

• அளவுக்கு மீறி தீனி தின்னுட்டா... ஆடு, மாடுங்களுக்கு வயிறு உப்புசம் வந்துடும். வெற்றிலை 20, பிரண்டை 10, கொழுந்து பூண்டு 10 பல், சின்னவெங்காயம் 10, இஞ்சி 100 கிராம், மிளகு 50 கிராம், சீரகம் 25 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம்... இது எல்லாத்தையும் ஒண்ணா உரல்ல போட்டு இடிங்க. கொஞ்சம் மசிஞ்ச பிறகு, கால் உப்பு அரைக்கை அளவுக்கு அதுல போட்டு உருண்டை பிடிச்சி, மாட்டோட நாக்குல தேய்ச்சிவிட்டு, உள்ளுக்கும் கொடுங்க. உப்புசம், ஓடிப் போயிரும்.

• தமிழ்நாட்டோட சில பகுதிகள்ல கோமாரி நோய் தாக்குதலை இப்ப பார்க்க முடியுது. அதை தூர விரட்டறதுக்கு... தேங்காய்த் துருவல் 100 கிராம், சீரகம் 50 கிராம், வெந்தயம் 25 கிராம், மஞ்சள் பொடி 20 கிராம், பனைவெல்லம் 100 கிராம்... இதையெல்லாம் ஒண்ணா கலந்துக்கோங்க. இந்தக் கலவையை காலையில, சாயங்காலம்னு ரெண்டு வேளையும், மூணு நாளைக்குக் கொடுத்தா... கோமாரி காணாம போயிடும்.

• மாடுங்களுக்கு கோமாரி நோய் வந்தா... கால் புண்ணும் வந்துடும். அதை குணப்படுத்த... குப்பைமேனி இலை 100 கிராம், பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 100 கிராம் இதையெல்லாம் 250 மில்லி இலுப்பை எண்ணெயில சேர்த்து காய்ச்சுங்க. சூடு ஆறின பிறகு, இந்த எண்ணெயை புண்ணு மேல தடவுங்க. இந்த மருந்தை காலையிலயும், சாயங்காலமும் தடவி வந்தா... ரெண்டு நாளையில புண்ணு ஆற ஆரம்பிக்கும். இதைத் தடவறதுக்கு முன்ன வெதுவெதுப்பான தண்ணியில மஞ்சள் தூள் கலந்து, புண்ணைக் கழுவறதுக்கு மறக்காதீங்க.

மண்புழு மன்னாரு!

• மேய்ச்சலுக்கு போற இடத்துல ஆடுங்கள விஷஜந்துங்க தீண்டுறதுக்கு வாய்ப்பிருக்கு. அப்படி ஏதும் தீண்டினது தெரிஞ்சா... தும்பை இலை 15, சிறியாநங்கை 15 கிராம், மிளகு 10, சீரகம் 15 கிராம், வெந்தயம் 10 கிராம், வெற்றிலை 6, வாழைப்பட்டைச் சாறு 50 மில்லி, உப்பு 15 கிராம் இதையெல்லாம் ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி எடுத்துக்கோங்க. அதோட... 100 கிராம் பனை வெல்லத்தைக் கலந்து ஆட்டுக்குக் கொடுத்தா... விஷம் முறிஞ்சிடும்.

• வெள்ளைக் கழிச்சல் நோய் வந்தா... கோழிங்க தலையை கீழ தொங்கப் போட்டு விழுந்துடும். இதை குணப்படுத்தறதுக்கு... சீரகம் 10 கிராம், மிளகு 10 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், கீழாநெல்லி 50 கிராம், வெங்காயம் 10 பல், பூண்டு 10 பல் எல்லாத்தையும் ஒண்ணா போட்டு, மைய அரைச்சுடுங்க. இதை அரிசிக் குருணையில கலந்து, கோழிங்களுக்குக் கொடுக்கலாம். நான் சொன்னது 10 கோழிங்களுக்கான அளவு. உங்களுக்குத் தேவையான அளவுக்குத் தயாரிச்சுக்கோங்க.

• சினை பிடிக்காம இருக்கற மாடுங்களுக்கு, சோற்றுக்கற்றாழையில ரெண்டு மடலை எடுத்து, வெளித்தோலை சீவிட்டு, காலையில தீவனம் கொடுக்கறதுக்கு முன்ன சாப்பிட கொடுங்க. ஒரு வாரம் இப்படி கொடுத்தா... பசு, காளைக்கு கத்த ஆரம்பிக்கும்.

இதுக்கு இன்னொரு வழியும்கூட இருக்கு... கொண்டைக் கடலை 100 கிராம் எடுத்து ஊற வெச்சு, பனைவெல்லம் 200 கிராம் கலந்து ரெண்டு வாரத்துக்கு கொடுத்தா... ம்ம்ம்மா...'னு பருவ சத்தம் போடும் மாடு. வேப்பிலை, மலைவேம்பு இலை இதையெல்லாம் தின்னு பழகின மாடுங்களுக்கு, இந்தப் பிரச்னையே இல்லை.

• ஆடு, நாய் இதுக்கெல்லாம் கழுத்து, தாடை முதுகுல படை மாதிரி சொறி சொறியாய் இருக்கும். அதைப் போக்கறதுக்கு சோற்றுக்கற்றாழை நான்கைந்து மடல், மஞ்சள் 50 கிராம், கல் உப்பு 50 கிராம், ரெண்டு எலுமிச்சம் பழம்... இதையெல்லாம் கலந்து நல்லா அரைச்சி எடுத்துக்கோங்க. இந்தக் கலவையை சொறியிருக்கற இடத்துல நாலு நாளைக்கு தேய்ச்சிவிட்டா... படை, சொறியெல்லாம் மறைஞ்சி, தோல் பளபளப்பா மாறிடும்.

• கல்யாண வீட்டுல பாயசம் மீதியாயிடுச்சுனா... அதை ஆடு, மாடுகளுக்குத்தான் ஊத்துவோம். அதை குடிச்சி உயிரை விட்ட ஆடு, மாடுங்க அனேகம். பாயசம் குடிச்சா... வயிறு உப்புசம் வந்துடும். வெற்றிலை 25, மிளகு 100 கிராம், முருங்கை இலை 2 கைப்பிடி, பிரண்டை 2 கைப்பிடி, இஞ்சி அல்லது சுக்கு 100 கிராம், பச்சைமிளகாய் 5... இதையெல்லாம் ஒரு உரல்ல போட்டு இடிச்சி உள்ளுக்கு கொடுங்க. ரெண்டுவேளை கொடுத்தா போதும்... வயிறு உப்புசம் குறையும்.

• மாடுங்க கன்னு போட்டதுமே மூணு மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேறும். நஞ்சுக்கொடி பிரிஞ்சி வரலனா... செஞ்சோளக் கூழ், இல்லைனா, பனை வெல்லம் கலந்த கம்மங்கூழ் கொடுக்கலாம். இதை ரெண்டு தடவை கொடுத்தா போதும்... நஞ்சுக்கொடி வெளியேறிடும்.