Published:Updated:

இந்திய தக்காளிச் செடிகளைத் தாக்க கடல் கடந்து வந்துள்ள தென் அமெரிக்கப் பூச்சி!

நந்தினி பா
இந்திய தக்காளிச் செடிகளைத் தாக்க கடல் கடந்து வந்துள்ள தென் அமெரிக்கப் பூச்சி!
இந்திய தக்காளிச் செடிகளைத் தாக்க கடல் கடந்து வந்துள்ள தென் அமெரிக்கப் பூச்சி!

விவசாயத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று பூச்சித் தாக்குதல். ஏற்கெனவே படைப்புழு வந்து ஆட்டிப்படைக்கும் நேரத்தில் மற்றொரு பூச்சியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய தக்காளிச் செடிகளைத் தாக்க கடல் கடந்து வந்துள்ள தென் அமெரிக்கப் பூச்சி!

2014-ம் ஆண்டு பெங்களூரு - இந்திய தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தக்காளிச் செடிகளைப் புதிய புழு ஒன்று தாக்கியிருந்தது. அப்போது அந்த மையத்தின் ஆராய்ச்சியாளரால் ஆரம்ப நிலையில் இருந்த புழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, மற்ற செடிகளுக்கு பரவும் முன்னர் தடுக்கப்பட்டது. அந்தப் பூச்சியின் பெயர் Tuta absoluta. அந்தப் புழுவானது தக்காளிப் பழம் மற்றும் இலைகளில் இருந்து சாறு உறிஞ்சித் தாக்குதலை ஏற்படுத்தி மகசூலைக் குறைக்கும்.

தெற்கு அமெரிக்காவைப் பிறப்பிடமாக கொண்ட இந்தப் பூச்சி, தக்காளி மட்டுமின்றி கிழங்கு குடும்பத் தாவரங்களையும் தாக்கும் சக்தி உடையது. தற்போது மீண்டும் அப்பூச்சி தாக்குதல் கர்நாடகாவில் தென்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் இந்தப் பூச்சி பரவியுள்ளது. இந்தப் பூச்சியின் தாக்கத்தால் 100 சதவிகிதம் மகசூல் இழப்பு கூட ஏற்பட வாய்ப்புண்டு. சிறிய பச்சை நிற புழுவானது, பழங்களை முற்றிலுமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையைப் பின்பற்ற வேண்டும் என IIHR பரிந்துரைத்துள்ளது.

Tuta absoluta பூச்சிக்கென தனி இனக்கவர்ச்சி பொறி சந்தையில் கிடைக்கிறது. பூச்சிகளின் மீது Matarhizium anisopliae என்ற பூஞ்சானை தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். Spinosad என்ற மண் பாக்டீரியாவையும் பயன்படுத்தலாம். கடைசியாக வேம்பு சார்ந்த உயிர் - பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vikatan