கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் துறைகள் பற்றி வரிசையாகப் பார்த்து வருகிறோம். இந்த இதழில் பயறு வகை துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஏ.ஆர் முத்தையா பேசுகிறார்...

''விவசாயப் பயிர்களில் விரைவாக மகசூல் கொடுக்கக் கூடியவை பயறு வகைகள்தான். மகசூல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணுக்கு வளம் சேர்க்கும் வேலையையும் அவை செய்து வருகின்றன என்பதால், பயறு வகைகள் மீதான நம்முடைய மரியாதை இன்னும் அதிகரிக்கிறது. உளுந்து, தட்டைப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு... போன்ற பயிர்களை சாகுபடி செய்யும்போது, அவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணுக்குக் கொடுக்கின்றன. இதனால், உரச் செலவு மிச்சமாகிறது. இந்தப் பயறு வகைச் செடிகள், உயிர்மூடாக்காகவும் செயல்படுகின்றன. அதனால், வயலில் களைகள் முளைப்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. அறுவடை முடிந்தவுடன் செடிகளை மண்ணிலேயே போட்டுவிட்டால், மட்கி உரமாக மாறிவிடும். கால்நடைத் தீவனமாகவும் இந்தச் செடிகளைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பயறு வகைப் பயிர்கள் பெரும்பாலும் ஊடுபயிராகத்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. கரும்பு, மரவள்ளி... போன்ற பயிர்களில் விதைக்கும்போது,

60 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இதன் மூலம் கிடைக்கும் தொகை, முக்கியப் பயிரின் சாகுபடிச் செலவுக்குக் கை கொடுக்கும்.

மனிதர்களுக்கு புரதச்சத்துக் கொடுக்கக் கூடிய பயறு வகைப் பயிர்கள் உற்பத்தி நமது மாநிலத்தில் குறைவாக உள்ளது. அதை போக்கும்விதமாக நல்ல விளைச்சல் கொடுக்கக் கூடிய ரகங்களை பல்கலைக்கழகத்தில் உருவாக்கியுள்ளோம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயிரிடும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. மானாவாரியில்கூட நல்ல மகசூல் கொடுக்கும் திறன் பயறு வகைப் பயிர்களுக்கு உண்டு.

அண்மைக் காலமாக 'தமிழ்நாட்டில் சோயா மொச்சை சாகுபடி செய்யலாமா?’ என்று விவசாயிகள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சோயா மொச்சையில் எண்ணெய் எடுக்கும் ஆலை அருகில் இருந்தால்தான் அதைப் பயிரிட வேண்டும். அப்படி இல்லையென்றால், விற்பனையில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எங்கள் துறை மூலம் உருவாக்கப்பட்ட பயறு வகைகளின் விதைகள், பல்கலைக்கழக விதை மையத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. பயறு சாகுபடி குறித்து சந்தேகம் உள்ள விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அழைக்கிறார் ஏ.ஆர்.முத்தையா.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-2450498.