புத்தம் புதுசு !

பாரம்பரியம்

அழியும் தருவாயில் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை, வாசகர்களுக்கு தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது, 'பசுமை விகடன்’. இதன் மூலமாக பாரம்பரிய ரகங்களை அறிந்து கொள்ளும் விவசாயிகள், அதிக ஆர்வத்துடன் உடனடியாக அந்த ரங்களை சாகுபடி செய்து பார்த்துவிட்டு, நெகிழ்ச்சியோடு நம்மிடம் பகிர்ந்து கொள்வதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது!

இதோ... திருச்சி மாவட்டம் அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், அப்படி தன்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்கிறார். இவருடைய நெகிழ்ச்சிக்குக் காரணம்... பல ஆண்டுகளாக இவர் தேடி வந்த கிச்சடி சம்பா நெல் ரகம் இவருக்குக் கிடைத்ததுதான்!

''எனக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனா, ஒவ்வொரு முறையும் 'பசுமை விகடன்' வர்றதை ஆவலா எதிர்பார்த்துக்கிட்டு இருப்பேன். என்னோட அண்ணன்தான் முழுக்க வாசிச்சு சொல்வார். அது மூலமாத்தான் இயற்கை உரங்கள், பாரம்பரியமான ரகங்கள், கருவிகள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிறேன். இன்னிக்கும் எங்கேயோ இருக்குற ஏகப்பட்ட விவசாயிகளோட எனக்கு உறவை ஏற்படுத்திக் கொடுத்துக்கிட்டிருக்கறது... பசுமை விகடன்தான்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன்,

''எங்க பகுதியில முப்பது வருஷத்துக்கு முன்ன பரவலா, கிச்சடி சம்பா நெல்லை சாகுபடி பண்ணுவாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, ஒரு கட்டத்துல அந்த ரகமே சுத்தமா இல்லாம போயிடுச்சு. நான் தேடிப் பார்த்தப்போ... விதைநெல்கூட கிடைக்கல. இந்த சமயத்துலதான் 'ஏக்கருக்கு 74 மூட்டை! இயற்கை விவசாயத்தில்... இன்னுமொரு சாதனை!’னு பசுமை விகடன்ல (10.5.10 தேதியிட்ட இதழ்) 'கிச்சடி சம்பா’ நெல் பத்தி ஒரு கட்டுரை வந்திருந்துச்சு.

கர்னல் கொடுத்த கிச்சடி சம்பா!

அதைப் பயிர் பண்ணியிருந்த விவசாயி, 'கர்னல்’ தேவதாஸ், ஏக்கருக்கு 74 மூட்டை மகசூல் எடுத்தார்ங்கறத நம்பவும் முடியல... நம்பாம இருக்கவும் முடியலை. ஏன்னா, பாரம்பரிய ரகத்துல முப்பது மூட்டை மகசூல் எடுக்கறதே, ரொம்பக் கஷ்டம். உடனே கர்னல்கிட்ட பேசி, விதைநெல்லை வரவழைச்சு போன சம்பா பருவத்துல போட்டு ஒரு போகம் எடுத்துட்டேன். இப்பவும் போட்டிருக்கேன்

80% இயற்கை!

இது வண்டலும் மணலும் கலந்த பூமி. இரண்டரை ஏக்கர்ல வாழை, இரண்டு ஏக்கர்ல நெல் இருக்கு. பூச்சிக்கொல்லிகளால வர்ற ஆபத்துகளை பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுக்கிட்டதால, இயற்கையான முறையில தயாரிக்கற பூச்சிவிரட்டிகளை மட்டும்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். எண்பது சதவிகித அளவுக்கு ரசாயன உரங்களையும் குறைச்சுட்டேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பொறுத்தவரை முழுக்கவே இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றேன். துளிகூட ரசாயனத்தைச் சேர்க்கறதில்ல.

சம்பாவில் சாதாரண நடவு!

இந்தப் பகுதியில, சம்பா பருவத்துல ஒற்றை நாற்று முறையில சாகுபடி பண்ண முடியாது. நடவுக்குப் பின்ன மழை வந்துடுச்சுனா, நாத்து சாய்ஞ்சுடும். அதனால சாதாரண முறையிலதான் சாகுபடி பண்றேன். ஆரம்பத்துல 10 கிலோ விதைநெல்தான் கிடைச்சுது. அதனால, அரை ஏக்கர்ல மட்டும்தான் சாகுபடி செஞ்சேன்'' என்றவர், தான் மேற்கொண்ட சாகுபடி முறை பற்றி விவரித்தார்.

இயற்கை இடுபொருட்கள் மட்டும்தான்!

''3 சென்ட் நிலத்துல நாற்றங்கால் அமைச்சேன். அதுல தொழுவுரத்தைத் தவிர வேறெதையும் போடாமலே, நாத்துக நல்லா வளந்துச்சு. நடவு செய்றதுக்காக ஒதுக்கின அரை ஏக்கர் நிலத்துல உழவு ஓட்டி, சவண்டல், வேப்பிலை, பூவரச இலை, வாதமடக்கி இலை ஒவ்வொண்ணுலயும் 500 கிலோ அளவுக்குப் போட்டு, திரும்பவும் ஒரு உழவு ஓட்டி நாத்துகளை நடவு செஞ்சேன்.

தேவையான சமயத்துல களைகளை எடுத்துட்டு, காய்ச்சலும் பாய்ச்சலுமா தண்ணி விட்டேன். மண்புழு உரம், தொழுவுரம், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா இப்படி இயற்கை இடுபொருட்களா கொடுத்துதான் சாகுபடி பண்ணினேன்.

பூச்சி, நோய் தாக்குவதில்லை!

நடவு செஞ்சி 50-ம் நாள் கதிர் வர்ற சமயத்துல ஒரு கிலோ சூடோமோனஸை 150 லிட்டர் தண்ணீர்ல கைத்தெளிப்பான் மூலம் தெளிச்சேன்.

அதுல நல்ல பலன் கிடைச்சுது. பூச்சி... நோய் தாக்குதல்னு எதுவும் இல்லவே இல்லை. அறுவடை சமயத்துல மூணரை அடி உயரத்துக்கு பயிர் இருந்துச்சு. ஒவ்வொரு கதிர்லயும் 250 நெல்மணிகள் வரை இருந்துச்சு. 130 நாள்ல அறுவடை பண்ணிட்டேன். அரை ஏக்கர்ல இருபத்தி ஏழரை மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது... அசந்து போயிட்டேன். இடுபொருட்களை கொஞ்சம் அதிகமா கொடுத்திருந்தா இன்னமும் கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கும்.

'அறுவடை பண்ணினதுக்கப்பறம் வீட்டுத் தேவைக்கு மட்டும் கொஞ்சம் நெல்லை எடுத்து வெச்சுட்டு, மீதியை விதைநெல்லாதான் பத்திரப்படுத்தியிருக்கேன். இந்த அரிசியில சாதம் நல்லா சுவையா இருக்கு. சீக்கிரம் செரிமானம் ஆயிடுது. எங்க பகுதியில சில நண்பர்களுக்கு விதைநெல்லை கொடுத்திருக்கேன். இந்த போகத்துல முக்கால் ஏக்கர்ல கிச்சடி சம்பாவைத்தான் போட்டிருக்கேன். இப்போ நாத்து நடவு செஞ்சு பதினஞ்சு நாள்தான் ஆகுது. 'போன முறையை விட இந்த முறை, அதிக மகசூல் எடுத்துடுவேன்’னு நம்பிக்கை இருக்கு'' என்று சொன்ன பாஸ்கரன்,

''ரொம்ப நாளா நான் தேடிகிட்டிருந்த இந்த கிச்சடி சம்பா, 'பசுமை விகடன்' மூலமாத்தான் எனக்குக் கிடைச்சுது. அதுக்காக என்னிக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்'' என்று நெகிழ்ச்சியோடு சொல்லி, விடை கொடுத்தார்!

தொடர்புக்கு,
பாஸ்கரன்,
தொலைபேசி: 0431-2625132.