அலசல்

புத்தம் புதுசு !

'பருவத்தே பயிர் செய்’ என்பது, நெடுங்காலமாக உள்ள பழமொழி. மழை வரும் காலங்கள், பூச்சிகள், நோய்கள் தாக்கும் காலங்கள், விதைகளின் முளைப்புக் காலங்கள்... போன்றவற்றை வைத்துத்தான் பயிர்களுக்குப் பட்டங்களை நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் சரிவர கடைபிடிக்கப்படாத போது... மகசூல் என்பது கையைக் கடித்து, பணத்துக்கும் வேட்டு வைக்கிறது!

'எந்தெந்த மாதங்களில் என்னென்ன பயிர்களைப் பயிரிடலாம்? அவற்றுக்கு அறுவடைக் காலங்களில் என்ன விலை கிடைக்கும்? என்னªன்ன பூச்சிகள் எப்போது தாக்கும்?’ என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது... நம்முடைய நேரம், பணம் என்று அனைத்துக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்தானே! இதோ... அந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்குத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்கப் போகிறது... இந்த 'முன்னறிவிப்பு!'

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பயிர் பாதுகாப்பு மையம், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் மூலம் இந்த விவரங்கள் வழங்கப்பட உள்ளன.

மக்காச்சோளம் குவிண்டால் 1,200 ரூபாய் !

மக்காச்சோளத்துக்கு தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி மாதங்கள்) ஏற்றது. இப்பட்டத்தில் விதைத்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் அறுவடை செய்யலாம். கடந்த 16 ஆண்டுகளில் உடுமலைப்பேட்டை சந்தையில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்ட விலைகள் பற்றிய ஆய்வின் மூலம்... ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 1,200 ரூபாய்க்கு மேல் விற்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.

நிலக்கடலைக்கு நிலையான விலை !

தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைப்படி நிலக்கடலை விதைப்புக்கு தைப்பட்டம் ஏற்றதாகும். கடந்த 20 வருடங்களில் சேவூர் மற்றும் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நிலக்கடலை விற்பனை செய்யப்பட்ட விலை பற்றி ஆய்வு செய்ததில், ஏப்ரல் முதல் மே வரை சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ஒரு கிலோ நிலக்கடலைக்கு 35 முதல் 40 ரூபாய் வரை விலை கிடைக்கலாம். திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 40 முதல் 45 ரூபாய் வரையிலும் விலை கிடைக்கக்கூடும் என்பதை மனதில் கொள்ளவும்.

சின்னவெங்காயம் விலை சற்று ஏறும் !

தற்போது, தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்து சின்னவெங்காயம் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் சின்னவெங்காயம் வரத்து இருப்பதால், தமிழக வெங்காயம் விலை இறங்கி இருக்கிறது. மார்ச் மாதத்துக்கு மேல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரத்து குறைந்து விடும் என்பதால், தமிழகத்தில் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தைப்பட்டத்தில் நடவு செய்யப்படும் வெங்காயம் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படும்போது, ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் முதல் 16 ரூபாய் விலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

பீட்ரூட் கிலோ 18 ரூபாய் !

கடந்த ஏழு ஆண்டுகளில் நிலவிய பீட்ரூட் விலை நிலவரத்தை ஆய்வு செய்ததில், பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான காலங்களில் பயிரிட்டு மே முதல் ஜூலை வரை அறுவடை செய்யப்படும் பீட்ரூட் நல்ல விலைக்கு விற்பனை ஆகியிருப்பது தெரிய வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு... ஒரு கிலோவுக்கு 16 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பூச்சி மற்றும் நோய் உஜார்... உஜார்!

தண்டுத் துளைப்பான் ஜாக்கிரதை !

கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கலாம். இரவு நேரங்களில் விளக்குப்பொறி அமைத்தல், வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தல் மூலமாக, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

கடலையில் விளக்குப்பொறி !

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலைப் பயிரில் இலைச் சுருட்டுப்புழுத் தாக்குதல் காணப்படுகிறது. பூச்சி நடமாட்டத்தை விளக்குப்பொறி வைத்தல், வேப்பங்கொட்டைச் சாறைத் தெளித்தல் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பப்பாளி மாவுப்பூச்சி ஜாக்கிரதை !

மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி ஆகியவற்றில் பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்பட்டால், அருகில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அணுகி, 'அசிரோபாகஸ் பப்பாயே’ (Acerophagus Papayae) என்கிற ஒட்டுண்ணியை இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

பூண்டு விலையேற வாய்ப்பில்லை !

தமிழ்நாட்டில் அக்டோபர்-நவம்பர் மற்றும் ஜூன்-ஜூலை ஆகிய பட்டங்களில் பூண்டு பயிரிடப்படுகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் விதைத்த பூண்டு, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அறுவடைக்கு வரும். தற்போது, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தும் பூண்டு வரத்து இருப்பதால், விலை உயர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே! மேட்டுப்பாளையம் பூண்டு மண்டியின் கடந்த கால விலை நிலவரப்படி, ஒரு கிலோ பூண்டு 75 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால், பூண்டை இருப்பு வைக்காமல் விற்று விடுவது நல்லது.