Published:Updated:

''களைக்கொல்லிகளும்... பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களுக்கு எதிரியே!''

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அதிரடி எஸ். ராஜாசெல்லம்

''களைக்கொல்லிகளும்... பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களுக்கு எதிரியே!''

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அதிரடி எஸ். ராஜாசெல்லம்

Published:Updated:

கூட்டம்

##~##

ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஒன்றிணைந்து, 'சங்கமம் உழவர் மன்றக் கூட்டமைப்பு’ என்னும் அமைப்பை உருவாக்கி இருப்பது குறித்து, 10.10.11 தேதியிட்ட இதழில் செய்தி வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து, சுறுசுறுப்போடு இயங்கிவரும் இந்த அமைப்பின் மூலமாக, அவ்வப்போது இயற்கை விவசாய விழிப்பு உணர்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில், புத்தம் புது முயற்சியாக, ரசாயன முறை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மனதிலும் இயற்கை விவசாயத்தை விதைக்கும் வேலையைக் கையில் எடுத்துள்ளனர் சங்கமம் அமைப்பினர். அந்த வகையில், பவானியை அடுத்த காடையம்பட்டி கிராமத்தில், இந்த அமைப்பின் மூலமாக, உழவர் மன்றங்கள் துவக்கும் விழா சமீபத்தில் நடத்தப்பட்டது. ஏறத்தாழ, 350 விவசாயிகள் பங்கெடுத்துக் கொண்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி கலந்து கொண்டார்.

''களைக்கொல்லிகளும்... பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களுக்கு எதிரியே!''

''ரசாயனங்கள் மனிதகுலத்துக்குக் கேடு விளைவிப்பவைதான். ஆனால், மண்ணின் வழியாக இடப்படும் ரசாயன உரங்கள் மனிதர்களுக்கு பெரிய அளவில் ஆரோக்கிய கேடு ஏற்படுத்துவதில்லை. எனவே, அடியுரமாக போடப்படும் ரசாயன உரங்களால் பாதிப்பு கிடையாது. ஆனால், களைக்கொல்லிகள் மற்றும் பயிர்களின் மீது நேரடியாகத் தெளிக்கப்படும் நச்சுகளால் கண்டிப்பாக மண்ணுக்கும், மனிதனுக்கும்

''களைக்கொல்லிகளும்... பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களுக்கு எதிரியே!''

பாதிப்பு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்'' என்று சொல்லி, விவசாயிகளின் கைதட்டல்களை அள்ளினார் துணைவேந்தர்.

கூட்டமைப்பின் இளம் உறுப்பினர் விஜயகுமார், ''இயற்கை என்பது தீப்பெட்டி போன்றது. இதில் வசிக்கும் ஜீவராசிகள் தீக்குச்சி போன்றவை. அதனால் இயற்கையோடு இணங்கி வாழ்ந்தால்தான் பூமியும், ஜீவராசிகளும் தப்பிக்க முடியும். முரண்பட்டு உரச நினைத்தால்... மொத்தமும் சாம்பல்தான். அதனால், முடிந்தவரை இயற்கை வழியையே பின்பற்றுவோம். கரையை முழ்கடித்து விட்டால், கப்பல் விட முடியாது. இயற்கைதான் நமக்கு கரை. நமது அலட்சியத்தால், இயற்கையை மூழ்கடித்து விட்டால் நாம் வாழ முடியாது. அதனால், சாமியை விட பூமிதான் பெரிது'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்ல... ஒட்டுமொத்த கூட்டமும் ஆமோதித்து தலையாட்டியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism