Published:Updated:

வழிகாட்டி

இயற்கைப் பருத்திக்கு இனி எதிர்காலம் ! ஆறுச்சாமி

வழிகாட்டி

இயற்கைப் பருத்திக்கு இனி எதிர்காலம் ! ஆறுச்சாமி

Published:Updated:
##~##

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் துறைகள் பற்றி வரிசையாகப் பார்த்து வருகிறோம். இந்த இதழில் பருத்தித் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப. விந்தியவர்மன் பேசுகிறார்...

''நாகரிகத்தின் அடையாளமே பருத்தியில் இருந்துதான் தொடங்குகிறது. கருங்கண்ணி, உப்பன்... போன்ற பாரம்பரிய ரக பருத்திகள் பல ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் பயிரிடப்படுகின்றன. நம்நாட்டில், மானாவாரி பூமியிலும் பருத்தி பூத்துக் குலுங்குவதைப் பார்த்த ஆங்கிலேயர்கள், பருத்தி ஆராய்ச்சிக்கு என்று, தங்களுடைய ஆட்சிக் காலத்தில்  கோவில்பட்டியில் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மானாவாரியில் பருத்தி சாகுபடிக்கான ஆய்வுகள் அங்கே இன்றளவிலும் நடந்து வருகின்றன. இது தவிர... ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோடை இறவை சாகுபடிக்கும், கோவையில் குளிர்கால இறவை சாகுபடிக்கும், பெரம்பலூரில் குளிர்கால மானாவாரி சாகுபடிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

நமது பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்கள், நல்ல விளைச்சலைக் கொடுக்கின்றன. குறிப்பாக... எம்.சி.யூ-5 என்ற ரகம் விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது. அதற்குக் காரணம் இந்தப் பருத்தியின் இழை நீளம் அதிகம். ஒரு ஏக்கரில் 20 குவிண்டால் வரைகூட மகசூல் கிடைக்கும்.

வழிகாட்டி

தற்சமயம் தனியார் நூற்பாலைகள் இயற்கை விவசாய முறையில் விளைந்த பருத்தியை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு உருவாகியுள்ளது. அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதால், நாங்களும் இயற்கை விவசாய முறையில் பருத்தி சாகுபடி செய்வது குறித்த ஆய்வுகளையும் நடத்தி வருகிறோம்.

பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் கண்டிப்பாக ஆமணக்கு, தட்டைப் பயறு... போன்றவற்றை விதைக்க வேண்டும். தட்டைப் பயறு மூலம் உருவாகும் பொறிவண்டு, பருத்திக்குத் தீமை செய்யும் பூச்சி, புழுக்களைக் கட்டுப்படுத்தும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கு விதைப்பதால், புரோடீனியா புழுக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.

இப்படி நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை குறித்து மேலும் தகவல் பெற... எங்கள் துறைக்கு விவசாயிகளை அழைக்கிறோம்'' என்று அழைப்பு வைக்கிறார்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-2456297.

- தொடர்ந்து சந்திப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism