Published:Updated:

''சோயா சாகுபடி... பயம் தேவையில்லை!''

பசுமைக் குழு

''சோயா சாகுபடி... பயம் தேவையில்லை!''

பசுமைக் குழு

Published:Updated:

விளக்கம்

##~##

சோயா மொச்சை, லாபம் கொடுக்குமா?'' என்ற தலைப்பில், கடந்த 25.2.2012-ம் தேதியிட்ட இதழின், 'வழிகாட்டி' பகுதியில், செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயறு வகைத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஏ.ஆர். முத்தையா, ''சோயா மொச்சையில் எண்ணெய் எடுக்கும் ஆலை அருகில் இருந்தால்தான், அதைப் பயிரிட வேண்டும். அப்படி இல்லையென்றால், விற்பனையில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு'' என்று சொல்லியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து நம்மைத் தொடர்பு கொண்ட 'சக்தி சுகர்ஸ்’ நிறுவனத்தின் சோயா பிரிவு உதவிப் பொதுமேலாளர் ம. சேவியர் பால்ராஜ், ''தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் சோயாவை சாகுபடி செய்து வருகிறார்கள். சென்னை அருகே உள்ள திருவள்ளூர் பகுதியிலும் எங்கள் நிறுவனம் மூலம் சோயா சாகுபடி நடக்கிறது.

சோயாவை கொள்முதல் செய்து, பொள்ளாச்சியில் இருக்கும் எண்ணெய் ஆலைக்கு அனுப்பி வருகிறோம். எனவே, ஆலை அருகில் இருந்தால் மட்டுமே விவசாயம் செய்ய வேண்டும் என்று பயப்படத் தேவையில்லை'' என்று சொன்னார்.

''சோயா சாகுபடி... பயம் தேவையில்லை!''

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி, பாலரெட்டி கண்டிகை, மேட்டுக் கண்டிகை... போன்ற பகுதிகளில் வலம் வந்த போது, அங்கு சுமார் 500 ஏக்கர் வரை சோயா சாகுபடி செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

பாலரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முரசொலி என்கிற விவசாயி, ''மத்த பயிரைக் காட்டிலும் சோயாவுல எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்குது. அதனாலதான் 15 வருஷமா ஒப்பந்த முறையில சாகுபடி செய்றோம். ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் கிடைக்குது. ஒரு கிலோ 20 ரூபாய்னாலும்... 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவு போக 15 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும்.

இந்தப் பயிரை பூச்சி, நோய்களும் பெருசா தாக்குறதில்லைங்கறதால பூச்சிக்கொல்லியே தெளிக்கல. அடுத்த வருஷம், இயற்கை உரம், பூச்சிவிரட்டி இதைத்தான் பயன்படுத்தப் போறேன். சோயா செடி, காத்துல இருக்குற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்குதுனு சொல்றாங்க. அதனால, சோயா சாகுபடி முடிஞ்சவுடனே, அந்த நிலத்துல வேற எந்தப் பயிர் வெச்சாலும், அருமையா விளையுது. நான் நெல் போட்டு ஏக்கருக்கு 35 மூட்டை  (75 கிலோ) வரைக்கும் எடுக்குறேன்'' என்றார் உற்சாகமாக.

தொடர்புக்கு: முரசொலி,
செல்போன்: 94440-69376.
சேவியர் பால்ராஜ்,
செல்போன்: 94431-37338

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism