Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

 இலவசப் பயிற்சிகள்

விஞ்ஞான ஆடு!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகங்கை மாவட்டம்,  குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 22-ம் தேதி கரும்பு சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை; 27-ம் தேதி விஞ்ஞான ரீதியில் ஆடு வளர்ப்பு; 28-ம் தேதி கூட்டு இன கெண்டை மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206.

தொலைபேசி: 04577-264288.

இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மை!

மார்ச் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி முடிய இயற்கை வேளாண்மை, கால்நடை மூலிகை வைத்தியம், பசு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இடம்: ஜி.ஆர்.சி. கோசாலா, செம்மங்குடி, கும்பகோணம். 30 வயதிற்குட்பட்ட அதிகம் படிக்காத இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். தங்கும் இடம், உணவு வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள முன்பணமாக ரூ.300 கட்ட வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் இந்தத் தொகை திரும்ப வழங்கப்படும்.

ஏற்பாடு: ஜி.ஆர்.சி. கிராம வள மையம், வி.இ.எஸ்.ஐ, சேவா தொண்டு நிறுவனம். தொடர்புக்கு: சேவா, தொலைபேசி: 0452-2380082, 2380943. ஜி.ஆர்.சி. கிராம வள மையம், செல்போன்: 94432-22257.

இயற்கை வாழ்வியல்!

கரூர் மாவட்டம், கடவூரில் 'வானகம்’ இயற்கை விவசாயப் பண்ணை உள்ளது. இங்கு மார்ச்-16-ம் தேதி முதல் 20-ம் தேதி முடிய, இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இயற்கை வேளாண்மை, கலந்துரையாடல், செய்முறை, படக்காட்சி, பார்த்துணர்தல்... போன்றவை முகாமில் இடம் பெறும். பயிற்சியை இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வழி நடத்துகிறார். தங்குமிடம், உணவு வழங்கப்படும்.

முன்பதிவு முக்கியம். தொடர்புக்கு, செல்போன்: 94435-75431, 99523-24855

தண்டோரா

நன்னீர் இறால்!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 15-ம் தேதி வான்கோழி வளர்ப்பில் நோய் மேலாண்மை; 20-ம்தேதி செம்மறிஆடுகளின் இனப்பெருக்க மேலாண்மை; 22-ம் தேதி ஒருங்கிணைந்த நன்னீர்; இறால் வளர்ப்பு; 30-ம் தேதி இயற்கை முறையில் கத்திரி மற்றும் வெண்டை சாகுபடி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266650, 266345.

சர்வதேச கருத்தரங்கு!

மார்ச் 25-26 தேதிகளில் சர்வதேச விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது. இடம்: ஆர்.வி.எஸ் கல்லூரி, கோவை. 'லாவிய கெம்பசினா’ (La Via Campesina) என்ற சர்வதேச விவசாய அமைப்பைச் சேர்ந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா... போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துரை வழங்குகிறார்கள். உணவுப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, புவி வெப்பம், விவசாயிகளின் உரிமை... குறித்து விவாதிக்கப்படும்.

ஏற்பாடு: கு.செல்லமுத்து, தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி, தொடர்புக்கு: செல்போன்: 94430-45690.

பசுமை இல்லம்!

கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திராவில் மார்ச் 16-18 வரை 'பசுமை இல்லம்’ கட்டும் பயிற்சி நடைபெறுகிறது. குறைந்த செலவில் வீடு கட்டும் நுட்பம், மழை நீர் சேமிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு... உள்ளிட்ட நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்படும். சிவில் என்ஜினீயரிங், ஆர்கிடெக் பட்டதாரிகள் மற்றும், இந்தப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652- 246296.

இயற்கையும், கால்நடையும்!

மார்ச் 18-ம் தேதி 'இயற்கை விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு’ பயிற்சி நடைபெறுகிறது. இடம்: திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேவந்தவாக்கம் கிராமம்.  இயற்கை விவசாயம், தீவன வளர்ப்பு, பசு பொருட்கள் தயாரிப்பு... பற்றி முன்னோடி இயற்கை விவசாயிகள், விஞ்ஞானிகள் கருத்துரை வழங்குகிறார்கள். தேநீர், மதிய உணவு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு: சுயம் அறக்கட்டளை மற்றும் இயற்கை வேளாண் சங்கம், சென்னை.

தொடர்புக்கு: செல்போன்: 94441-65946, 94440-74744.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism