வீட்டுத் தோட்டம்

பரபரப்பான வாழ்க்கைச் சூழல், மாறிப்போன உணவுப் பழக்கம்... என, பல்வேறு காரணங்களால், இன்று இளைய தலைமுறையினரும்கூட, மனஅழுத்தம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி... என ஏகப்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். இதுபற்றிய விழிப்பு உணர்வு பெருகப்பெருக... நகரவாசிகள் பலரும் உடல் ஆரோக்கியத்துக்காக இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்களாக... இயற்கையான காய்கறிகள் கிடைப்பதோடு... வீட்டுத் தோட்ட வேலைகளின் ஈடுபாட்டால், மனஅழுத்தமும் குறைகிறது என்பதுதான் சிறப்பே!

''இதற்கு நான்தான் மிகமிக பொருத்தமான உதாரணம்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் கோவில்பட்டியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றும் இராஜகுமார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து மேற்கே செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, மணல்குன்று கிராமம். நகரத்தை ஒட்டிய பகுதி என்பதால், கிட்டத்தட்ட விவசாயம் அழிந்துவிட்ட நிலையில்... எஞ்சியிருப்பது, ரப்பர் சாகுபடி மட்டும்தான். ரப்பர் மரக் கூட்டத்தோடு ஏகாந்தமான சூழலில் இருக்கிறது, இராஜகுமாரின் வீடு. வீட்டுக்குள் நுழையும்போதே, அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள், மரங்கள், வாசனைச் செடிகள் என, பலவிதமான தாவரங்கள்தான் நம்மை வரவேற்கின்றன.

வீட்டிலேயே மருத்துவமனை !

''கோவில்பட்டியில் வேலை பார்க்கறதால வாரத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்கு வருவேன். அப்படி வர்றப்ப எல்லாம், அதிக நேரம் தோட்டத்துலதான் இருப்பேன். மத்த நாட்கள்ல மனைவி சாந்தி இதை பராமரிச்சுக்குவாங்க. பொதுவா, வீட்டுத் தோட்டம்னா காய்கறிகளை மட்டும்தான் சாகுபடி பண்ணுவாங்க. நான், நிறைய மூலிகைகளையும் போட்டிருக்கேன். அதுகளை வெச்சே நாங்க வைத்தியமும் பாத்துக்குறோம். எங்களுக்கு ஆஸ்பத்திரியே எங்க தோட்டம்தான். உதாரணத்துக்கு, சதகுப்பைனு செடி வளத்துக்கிட்டிருக்கேன். சின்னக் குழந்தைகளுக்கு வயித்துல ஏதாவது பிரச்னை வந்தா... இந்த இலையை நல்லா அரைச்சு பால்ல கலந்து கொடுத்தா சரியாயிடும். இதுமாதிரி, நிறைய மூலிகைகள் இருக்கு!

வீட்டுக்கு முன்னாடி இருந்த ஒரு சென்ட் இடத்துலதான் தோட்டம் போட்டிருக்கேன். அதுல, அல்போன்சா, செங்கவருக்கை, நீலம் ரக மா மரங்கள்; ஒட்டு நெல்லி; ஒட்டு முருங்கை; ஒட்டு நாவல்; வேம்பு; மாதுளை; தென்னைனு மரங்கள் இருக்கு. இதுங்களுக்கு இடையிலதான் மத்த செடிகள் இருக்கு. இந்த மரங்களோட வேர்கள் மண்ணுக்குக் கீழ படர்ந்திருக்கறதால மத்த செடிகளை தொட்டியிலயும் சாக்குலயும் வெச்சுருக்கேன்'' என்ற இராஜகுமார், செடிகளைப் பற்றி விவரித்தார்.

புதர் மிளகு..!

'புதர் மிளகு பாக்குறதுக்கு அழகுச்செடி மாதிரியே இருக்கும். மிளகுல இருந்து ஒட்டுப்போட்டு உருவாக்குற செடி இது. தொட்டியிலயே வளக்கலாம். பக்கத்துல இருக்குற மரங்களைப் பிடிச்சு வளந்துக்கும். இதை பேச்சிப்பாறை வேளாண்மை அறிவியல் நிலையத்துல வாங்கினேன். இது நல்லா காய்க்குது.

அழகுக்கு ஆந்தூரியம்... வாசத்துக்கு சர்வ சுகந்தி !

இது சர்வ சுகந்திச் செடி. இதையும் பேச்சிப்பாறையில்தான் வாங்கினேன். இது ரொம்ப வாசனையா இருக்கும். பட்டை, சோம்பு, ஏலக்காய்... மாதிரியான மசாலா சாமான்கள்ல இருக்குற அத்தனை வாசமும் இதுல கலந்து அடிக்கும். மொத்த மசாலாவுக்கும் பதிலா இது ஒண்ணையே இறைச்சி சமைக்கப் பயன்படுத்தலாம்.

திசு வாழை முதல் கீரை வகைகள் வரை..!

ரொபஸ்டா ரக திசு வாழைனு ஒண்ணு இருக்கு. இது ஆறு மாசத்துலேயே குலை போட்டுடக் கூடிய ரகம். நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமா இருக்கு. அதனால வாடல் நோய் கூட வர்றது இல்லை. பூச்சிகளும் தாக்குறதில்லை. இதுக்குப் பக்கத்துலயே பொன்னாங்கண்ணி கீரை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிற தவசிக் கீரைனு ரகம் ரகமா கீரைகளும் இருக்கு. இந்த தவசிக் கீரையை எங்க பகுதிகளில் 'கீரைகளின் அரசி’னு சொல்லுவோம். ஒரு தடவை நட்டாலே போதும். 'தளதள’னு வளந்து வந்துடும். இந்த ரெண்டு கீரையுமே உடம்புக்கு ரொம்ப நல்லது.

தென்னை மரத்தில் கோவை..!

இதுபோக... பச்சை மிளகாய், கத்திரிக்காய், சேம்புனு காய்கறிகளும்... கறிவேப்பிலை, எலுமிச்சை, கஸ்தூரி ஆரஞ்சுனு வீட்டுக்குத் தேவையான மரப்பயிர்களும் இருக்கு. அழகுக்காக ஆந்தூரியம், ஆர்கிட் செடிகளும் இருக்கு. கஸ்தூரி ஆரஞ்சுங்கறது... எலுமிச்சைப் பழ அளவுலதான் இருக்கும். ஆரஞ்சு சுளை மாதிரியே இருக்கும். இதுல ஜூஸ் போட்டு குடிக்கலாம். தென்னை மரத்துக்குப் பக்கத்துல வெச்சிருந்த கோவைக்காய் செடி தென்னையில படர்ந்து மொட்டை மாடி வரைக்கும் போயிடுச்சு. அதுல வாரத்துக்கு இரண்டு கிலோவுக்கு குறையாம கோவைக்காய் கிடைக்குது. வீட்டுத் தேவைக்குப் போக மீதியை, கிலோ ஐம்பது ரூபாய்னு வித்துடுவோம். இல்லேனா பண்ட மாற்று முறையில கோவைக்காயைக் கொடுத்து, வேற காய்களை வாங்கிக்குவோம்'' என்ற இராஜகுமார் பராமரிக்கும் விதங்களைப் பற்றி சொன்னார்.

''தொட்டியில செம்மண், மணலை நிரப்பி அதோட, தொழுவுரம், வேப்பம் பிண்ணாக்கு, எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூள், உயிர் உரங்களையும் கலந்து போட்டு செடிகளை நடுவோம். தினமும் சாயங்காலம் மட்டும் தண்ணி ஊத்துவோம். தொடர்ந்து... வீட்டில் மிச்சமாகிற காய்கறிக் கழிவு, தேயிலைத் தூள், முட்டைக் கூடு... எல்லாத்தையும் செடிகளுக்குப் போட்டுடுவோம். இதுபோக மண்புழு உரத்தையும் தயாரிச்சு ஒவ்வொரு செடிக்கும் மாசத்துக்கொரு தடவை கையளவு போட்டுடுவோம். அப்பப்போ, பஞ்சகவ்யா, பழங்களை ஊற வைச்சி, தயாரிக்கிற பழக்காடி, மூலிகைப் பூச்சிவிரட்டி இதுகளையும் தயாரிச்சு தெளிச்சு விடுவோம்.

இந்த வீட்டுத் தோட்டத்தால எங்க குடும்பத்துக்கு சத்தான காய்கறிகள் கிடைக்குது. அதனால, உடம்பும் மனசும் எப்பவும் தெம்பாவே இருக்குது. இதைவிட வேற என்னங்க மனுஷனுக்கு வேணும்?'' என்கிற கேள்வியை நமக்குள்ளும் விதைத்து விடை கொடுத்தார், இராஜகுமார்.

தொடர்புக்கு,
இராஜகுமார், செல்போன்: 94432-65003.

மூலிகைப் பூச்சிவிரட்டி...

வேம்பு, எருக்கு, ஆடுதொடா, துளசி, நொச்சி ஆகியவற்றின் இலைகளை சமஅளவு எடுத்துக் கொண்டு, ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை ஊற்றி, 15 நாட்கள் மூடி வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை நன்றாகக் கலக்கிவிட வேண்டும். 15 நாட்கள் கழித்து, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 30 மில்லி இலைக் கரைசல் என்கிற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.

பழக்காடி...

அழுகியப் பழங்களை ஒரு பிளாஸ்டிக் கலன் அல்லது மண் பானையில் போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு மோர் அல்லது வடித்தக் கஞ்சியை ஊற்றி 15 நாட்கள் மூடி வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை நன்றாகக் கலக்கி விட வேண்டும். 15 நாட்கள் கழித்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தலாம்.