சாட்டை

''ஆகா... 4.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்த விவசாயிகளின் கடனை, 5.75 லட்சம் கோடி ரூபாயாக பட்ஜெட் உயர்த்திவிட்டது. உண்மையிலேயே இது 'விவசாயிகளின் பட்ஜெட்’ என்றே கொண்டாட வேண்டும்'' என வல்லுநர்கள் பலரும் மத்திய பட்ஜெட்டுக்கு வரவேற்பு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

இது, வேடிக்கையாக மட்டுமல்ல, பிரச்னைகளைத் திசை திருப்பும் சூழ்ச்சி என்பதாகத்தான் புரிகிறது எனக்கு. பின்னே... நீங்கள் இந்த ஆண்டு ஒரு லட்ச ரூபாய் கடனாளியாக இருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு, இரண்டு லட்ச ரூபாய்க்கு நீங்கள் கடனாளியாகிவிட்டால்... உங்களுக்கு உற்சாகம் பிய்த்துக் கொள்ளுமா? இந்த உண்மை புரியவில்லையா... அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்களா!

'தூக்கில் தொங்குபவனுக்கு, தூக்குக் கயிறு செய்யும் உதவியைத்தான், இந்தக் கடன் விவசாயிகளுக்குச் செய்கிறது' என்பதை பலமுறை நான் வலியுறுத்தியிருக்கிறேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்துக்கான கடன் உயர்த்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அது விவசாயிகளை வாழ வைக்கும் என்றால், பிறகு ஏன் விவசாய வளர்ச்சி என்பது தொடர்ந்து நொண்டி அடிக்க வேண்டும்?

'வணிக வெறி' பிடித்த மன்மோகன்சிங் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்திய விவசாயிகளுக்கு சனி பிடித்தது. அது, தற்போது அனைத்துத் தரப்பையும் பிடித்து ஆட்டுகிறது. விவசாயத் துறையில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை, இன்று தொழில் துறையிலும் நங்கூரம் பாய்ச்சியுள்ளது.

கடந்த சில மாதங்களாக விவசாய விளைபொருட்களின் விலைப் புள்ளி (Food inflation) வீழ்ச்சியடைந்து வருகிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு குவிண்டால் 17,000 ரூபாய்க்கு விற்ற மஞ்சள், இந்த ஆண்டு, 3,000 முதல் 4,000 ரூபாய்; குவிண்டால் 1,300 ரூபாய் வரை விற்ற நெல்... 700 முதல் 900 ரூபாய்; கிலோ 75 ரூபாய்க்கு விற்ற கொப்பரை, 40 ரூபாய்; குவிண்டால் 6,500 ரூபாய்க்கு விற்ற பருத்தி, 4,000 ரூபாய்.

இப்படி உற்பத்திப் பொருட்களின் விலை இறங்கிக் கொண்டே இருக்க, அதற்கு நேர்மாறாக உற்பத்திச் செலவு (உரம், கூலி) உயர்ந்துகொண்டே இருக்கிறது. இத்தகையச் சூழலில் விவசாயி என்ன செய்வான். எந்த முதலாளியாவது நஷ்டத்துக்குத் தொழில் செய்வாரா? இதை சமாளிக்கத்தான் அழுத பிள்ளைக்கு ஐஸ் குச்சி வாங்கித் தருவது மாதிரி கடன் கொடுத்து, அவனை நிரந்தர கடனாளியாக்கி தற்கொலை வரை தள்ளிக்கொண்டு போக வழிவகை செய்கிறது இந்த பட்ஜெட்.

இந்த லட்சணத்தில், ஒழுங்காகக் கடனைக் கட்டினால் 4% வட்டிச் சலுகையாம்! 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'சந்திரமுகி' படத்தில் சொன்னபடி.. 'எழுந்து நிக்கவே முடியாதவனுக்கு, ஒன்பது பொண்டாட்டி' என்கிற கதையாகத்தான் இருக்கிறது!

உணவுப் பொருட்கள் அல்லாத (Non-food items) பொருட்களின் விலைவாசி புள்ளி 7%, 8% என எகிறிக் கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களில் 40,000 ரூபாய்க்கு விற்ற ஒரு டன் இரும்புக் கம்பி... 56,000 ரூபாய்;

260 ரூபாய்க்கு விற்ற சிமென்ட்... 315 ரூபாய்; 600 ரூபாய்க்கு விற்ற உரம்... 900, 1,000 என எகிறிக் கொண்டே போகிறது.

வீழ்ச்சி அடைந்து வரும் விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சென்ற வருடம் ஊக்க நிதி (Stimulus) என்கிற பெயரில் மட்டுமே ஏறக்குறைய 5 லட்சம் கோடியைத் தூக்கிக் கொடுத்து இருக்கிறது. விவசாயிகளுக்குக் கொடுத்தால் கடன்... வியாபாரிகளுக்குக் கொடுத்தால் ஊக்க நிதி! விவசாயிகளுக்கும் ஊக்க நிதி கொடுத்து இருந்தால், வறுமையை என்றைக்கோ விரட்டி அடித்து இருப்பார்களே!

பாதிபேர் பட்டினி கிடப்பதால், உணவு பொருட்கள் உபரியாக தோற்றம் அளிக்கிறது. அரசு கணக்குப்படி விவசாய ஜி.டி.பி வளர்ச்சி 2.5%, தொழில்துறை 4.6%, சேவைத்துறை

9.4% ஆக... ஒட்டுமொத்த நாட்டு வளர்ச்சி 6.9% யைத் தாண்டும் என்று கோடங்கி கணக்காகக் குறி சொல்கிறது. நாட்டில் 60% என்கிற அளவில் இருக்கும் உற்பத்தித் துறை பலவீனமாவதும், 12% அல்லது 15% ஆக இருக்கும் சேவைத் துறை வளர்வதும் நல்லதற்கல்ல!

'பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்' என்பதே உண்மை. மேலே தெரியும் அழகான கட்டடத்தைக் காட்டி காட்டியே, மக்களை ஏமாற்ற நினைத்தால், ஒரு நாள் ஒட்டுமொத்தமாக சரிந்து, மண்குவியல்தான்!

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 'விவசாய பட்ஜெட்' என்று எல்லோருமே சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்... தங்கள் முகத்திலும் கரி பூசிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியாமலே!

ஒட்டுமொத்தத்தில் இது பட்ஜெட் அல்ல. பம்மாத்து.