ஆலோசனை

''ஆறு வருஷத்துக்கு முன்ன மா நடவு செஞ்சிருந்தேன். மரங்கள்ல்லாம் நல்லா வளர்ந்திருந்தாலும், காய் பிடிக்கவே மாட்டேங்குது. பூ பூத்ததுமே உதிர்ந்து போயிடுது. என்ன செய்றதுனே தெரியல. இந்த மரங்களை சரி பண்ண முடியுமா? அல்லது வெட்டிட்டு தென்னையை நடவு செஞ்சுடவா?'' என்று நமது 'நேரடி குரல் பதிவு சேவை' (044 -66808003) மூலமாக ஆதங்கக் குரலைப் பதிவு செய்திருந்தார்... திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன்.

இவருடைய தோட்டத்துக்கு நாம் அழைத்துச் சென்ற 'பசுமை டாக்டர்'... மா சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த, திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சேர்ந்த சௌந்திரராஜனைத்தான்.

''இது எங்க பூர்வீகத் தோப்பு. இந்தப் பகுதியில முதன்முதல்ல மா சாகுபடியை ஆரம்பிச்சவர் எங்கப்பாதான். அவருக்குப் பின்னாடி சரியா பராமரிக்க முடியாம போயிடுச்சு. நான் வணிகவரித் துறையில இணை ஆணையரா வேலை பாத்துட்டு இருந்ததால அடிக்கடி வந்து தோட்டத்தைப் பார்க்க முடியல.

வேலையாளை வெச்சுதான் பாத்துகிட்டு இருக்கேன். என்னோட பசங்களுக்கும் விவசாயத்துல ஆர்வம் கிடையாது. இப்போ நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். அதனால முழுசா விவசாயத்துல இறங்கிட்டேன்.

ஆறு வருஷத்துக்கு முன்ன, நண்பர் ஒருத்தர், 'சேலம் பெங்களூரா ரகத்துல அதிகமான மகசூல் கிடைக்கும்’னு சொன்னதை வெச்சு, இந்த ரகத்தை வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். மரம் நல்லாத்தான் வளர்ந்துருக்கு... பூவும் பிடிக்குது.

ஆனா, காய் காய்க்க மாட்டேங்குது'' என பிரச்னையை 'பசுமை டாக்டர்' சௌந்திரராஜனிடம் தெளிவாக எடுத்து வைத்தார், தேவநாதன்.

அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட சௌந்திரராஜன், ''காய்க்காத மரம்னு எதுவும் இருக்க முடியாது. உங்க மரம் காய்க்காததுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதைக் கண்டுபிடிச்சுட்டா... சுலபமா காய்க்க வெச்சுடலாம்'' என நம்பிக்கை கொடுத்தபடி தோட்டத்துக்குள் ஒரு சுற்று வந்தார்.

அளவான தண்ணீர் அவசியம் !

''நல்ல வளமான மண்ணுதான். ஆனா, பராமரிப்புதான் சரியில்ல. சரியானபடி பாசனம் செய்யல. எந்தப் பயிரா இருந்தாலும், தண்ணி முக்கியம். அதை அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, குறைச்சலாவும் கொடுக்கக் கூடாது. தேவையான நேரத்துல தேவையான அளவு கொடுக்கணும், தேவையில்லாதப்ப கொடுக்கவே கூடாது. ஆனா, பல விவசாயிக கரன்ட் வந்தா... உடனே தண்ணி பாய்ச்சிடணும்னு நினைக்கறாங்க... இது தப்பு.

இந்தத் தோப்பைப் பொருத்தவரைக்கும் மரங்களுக்குத் தேவையான அளவுக்கு தண்ணி பாயல. எல்லாம் கொலை பட்டினியா இருக்கு. அப்பப்ப பாய்ச்சுற தண்ணியை வெச்சு உசுரைக் காப்பாத்திகிட்டு நிக்குது. அதுனால முதல்ல மரங்களுக்கு தண்ணி கொடுங்க. ஒவ்வொரு மரமும் 'தன் எஜமானனுக்கு ஏதாவது செய்தே ஆகணும்’னு நினைக்கும். இப்பக்கூட நீங்க உள்ள வந்ததை அது உணர்ந்திருக்கும். 'எஜமான் வந்துட்டாரு... நமக்கு ஏதாவது நல்லது செய்வாரு’னு நினைக்கும். அதை ஆத்மார்த்தமா நேசிச்சாத்தான் அது புரியும். 'வேலையாட்கள் பாத்துக்குவாங்க’னு நினைக்காம நீங்களும் அர்ப்பணிப்போட அக்கறை காட்டணும்.

'இதை இப்படி செஞ்சா, இவ்வளவு கிடைக்கும்!'னு உக்காந்த இடத்துலயே போடுற கணக்கெல்லாம் விவசாயத்துக்கு உதவாது. நம்ம நேரடிப் பார்வையில, முறையானப் பராமரிப்பும் இயற்கையின் ஒத்துழைப்பும் இருந்தா மட்டும்தான் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பூவெடுத்த பிறகு பாசனம் செய்யலைனா... பூ கொட்டத்தான் செய்யும். அதனால, உடனே நீங்க பாசனத்தைக் கொடுங்க... இப்ப பிடிச்ச பூவெல்லாம் பிஞ்சா மாறும். அதேநேரத்துல வளர்ச்சி ஊக்கி தெளிச்சா பிஞ்சுக உதிராது.

மரத்தையும் உயிருள்ள ஒரு பொருளா நினைச்சு, அந்தந்த நேரத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்பை செஞ்சுட்டா... மகசூலுக்குப் பஞ்சமே இருக்காது. அதேப்போல உங்க மரங்கள பறவைக் கண் நோய் தாக்கியிருக்கு. இதனாலதான் மரங்கள்ல இலை, கிளை, காய்னு தார் பூசினது கணக்கா கருப்பு நிறத்துல இருக்கு. நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் இந்த நோய் வருது. 'சூடோமோனஸ் ஃப்ளோரோசன்'கிற உயிரி பூஞ்சணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணிக்கு, 5 மில்லி கலந்து தெளிச்சா இது சரியாகிடும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 20-ம் நம்பர் ஆய்வுக்கூடத்துல இது கிடைக்கும். மழைக் காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்த மருந்தைத் தெளிக்கணும். இதை மட்டும் சரியா செய்ங்க. உங்க மரம் தன்னால காய்க்க ஆரம்பிச்சுடும்'' என்ற சௌந்திரராஜனிடம்,

''பக்கத்துல இருக்கற இன்னொரு நிலத்துலயும் மா நடவு செய்யலாம்னு இருக்கேன். அதுக்கும் உங்களோட ஆலோசனை கிடைச்சா உதவியாயிருக்கும்'' என வேண்டுகோள் வைத்தார், தேவநாதன்.

''அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு'' என்ற பசுமை டாக்டர், அதை பாடமாகவே நடத்த ஆரம்பித்தார். அது,

அடுத்த இதழில் பார்ப்போம்!

தொடர்புக்கு,

சௌந்திரராஜன், செல்போன்: 98421-28882.
தேவநாதன், செல்போன்: 94422-17079.

அல்போன்சா சாதனை!

இந்த இதழில் ஆலோசனைகளை வழங்கியிருக்கும் 'பசுமை டாக்டர்' சௌந்திரராஜன், பழனி அருகே வறண்ட பிரதேசத்திலிருக்கும் அமரம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர். இங்கே 106 ஏக்கர் நிலத்தில் பல்வேறு 'மா’ ரகங்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்து வந்த முன்னோடி விவசாயி. வறண்ட பகுதியிலும் அல்போன்சாவை விளைய வைத்து நல்ல மகசூல் எடுத்தது இவரது சாதனை. உடல்நிலைக் கோளாறு காரணமாக, நான்காண்டுகளுக்கு முன்பு நிலங்களை விற்று விட்டு பழநியில் ஓய்வெடுத்து வருகிறார்.