Published:Updated:

64 வயது ஜெ. 64 லட்சம் கன்றுகள்...

முளைக்குமா முதல்வர் வைக்கும் மரங்கள் ?எஸ். ராஜாசெல்லம் படம்: என். விவேக்

64 வயது ஜெ. 64 லட்சம் கன்றுகள்...

முளைக்குமா முதல்வர் வைக்கும் மரங்கள் ?எஸ். ராஜாசெல்லம் படம்: என். விவேக்

Published:Updated:

பிரச்னை

##~##

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஜூன் மாத இறுதிக்குள் தமிழகம் எங்கும் 64 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மரம் வளர்க்க விரும்பும் தனியார் நிறுவனங்களிலும் இந்த திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு லட்சம் மரக்கன்றுகளுக்கு குறையாமல் நடவு செய்து, தமிழகத்தில் 64 லட்சம் மரங்களை உருவாக்கும்போது... தமிழகம் பசுமைச் சோலையாக சிரிக்கும்’ என்பதுதான் திட்டம். இதைச் செயல்படுத்தும் பொறுப்பு தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'திட்டம் சரிதான்... ஆனால், செயல்படுத்தும் காலம் சரியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும். 'சுட்டெரிக்கும் கோடையில் மரக்கன்றுகளை நடவு செய்தால், அவை எப்படிப் பிழைக்கும்?’ என்பதுதான் இவர்களது கேள்வி.  

64 வயது ஜெ. 64 லட்சம் கன்றுகள்...

சூழலியல் ஆர்வலர்கள் சொல்லி வரும் விஷயத்தை, வனத்துறை அதிகாரிகள் சிலரின் காதுகளுக்குக் கடத்தியபோது... அவர்களிடம் இருந்தும் இதே ஆதங்கம் பொங்கி வந்தது.

''வழக்கமா, ஜூன் மாசத்துக்கு மேல பருவ மழை தொடங்குறப்போதான் மரங்களை நடவு செய்யணும். அப்போதான் தனியா தண்ணி ஊத்தி பராமரிக்காமலேயே கன்னு பொழைச்சுக்கும். ஆனா, இப்போ பிப்ரவரி மாசத்துல ஆரம்பிச்சு, ஜூன் மாசத்துக்குள்ள 64 லட்சம் கன்னுகளையும் நடவு செஞ்சு முடிச்சுடணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. அடிக்கிற வெயில்ல பிஞ்சு வேர்கள் எப்படித் தாங்கும். செடி முழுக்க காய்ஞ்சுதான் போகும். மேல்மட்டத்துல இருக்குற அதிகாரிகளுக்கும் இதெல்லாம் நல்லா தெரியும். ஆனாலும், முதல்வர்கிட்ட எடுத்துச் சொல்ல பயந்துக்கிட்டு களத்துல இறங்கிட்டாங்க.

64 வயது ஜெ. 64 லட்சம் கன்றுகள்...

இப்போ, நடவு செஞ்சா... நூத்துக்கு பத்து கன்னுகூட பிழைக்காதுங்கிறதுதான் உண்மை'' என்று கன்றுகளைப் பாதுகாக்கும் ஊழியர்கள் சிலர், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் துறைரீதியிலாக இருக்கும் சங்கடங்களையும் பட்டியலிட்டனர்.

''எங்க துறையில ஏகப்பட்ட பணியிடங்கள் காலியா கிடக்கு. அதனால இருக்கற வேலையைச் செய்யவே ஆட்கள் கிடையாது. இது காட்டுத் தீ பத்தி எரியற காலம். மலைப்பகுதிகள்ல திடீர் திடீர்னு தீப்பத்தி எரியும். அப்படி வந்துட்டா, அதை அணைக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கும். வறட்சி ஆரம்பிச்சா, காட்டுக்குள்ள இருக்குற விலங்குகளெல்லாம் ஊருக்குள்ள ஓடி வந்துடும். அதையும் விரட்டணும். இப்படி ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவுல, ஜூன் மாசத்துக்குள்ள அவ்வளவு கன்னுகளையும் எப்படி நடவு செய்யப்போறோம்னு நினைச்சாலே நடுக்கமா இருக்கு.

'ஒரு வருஷத்துக்குள்ள முடிக்கலாம்'னு காலக்கெடு கொடுத்திருந்தா, கன்னுகளைப் பழுதில்லாம வளத்தெடுக்க முடியும். இல்லாட்டி இந்த திட்டமும் பேருக்குதான் நடக்கும். உடனடியா, முதல்வர் இந்த விஷயத்துல தலையிட்டு தேவையான மாற்றங்களைக் கொண்டு வரணும். இல்லைனா... அரசாங்கப் பணம் அத்தனையும் வீண்தான்'' என்று குமுறினார்கள்.

தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் கவனத்துக்கு இந்த விவாகரத்தைக் கொண்டு  சென்றோம். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அமைச்சர், ''முதல்கட்டமாக 32 லட்சம் மரக்கன்றுகளைத்தான் நடவு செய்துள்ளோம். மீதியுள்ள கன்றுகளை பருவ மழை தொடங்கும் சமயத்தில்தான் நடவு செய்ய போகிறோம். தற்சமயம் நடவு செய்யப்பட்டுள்ள கன்றுகளை, கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்'' என்றார் அக்கறையுடன்.

நடைமுறைச் சிக்கல் இருப்பது உண்மைதான்!

64 வயது ஜெ. 64 லட்சம் கன்றுகள்...

இது தொடர்பாகக் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரியும், தமிழக திட்டக்குழுவின் முன்னாள் முழுநேர உறுப்பினருமான குமாரவேலுவிடம் கேட்டபோது, ''செடிகளை உற்பத்தி செய்யும்போதே மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, வேம் (வேர் வளர்ச்சி பூசணம்) ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் கலந்து, செடிகளை உற்பத்தி செய்தால், கோடை வெப்பத்தைத் தாங்கி செடிகள் வளரும். ஆனால், தற்போது நடவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பது இந்த முறையில் உற்பத்தி செய்த செடிகளா எனத் தெரியவில்லை. அதேபோல... காட்டுத் தீ, வனவிலங்கு நடமாட்டம், கணக்கெடுப்பு, வனத்துறைப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறை சிரமங்கள் இருப்பதும் உண்மைதான். இதுதொடர்பாக அரசுதான் யோசிக்க வேண்டும்'' என்று சொன்ன குமாரவேலு,

''இந்தத் திட்டத்தை குற்றம் குறையில்லாமல் நிறைவேற்றும்போது, ஆண்டு முழுக்கப் பழங்களைத் தரும் 'சிங்கப்பூர் செர்ரி’ போன்ற மரக்கன்றுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இயற்கையை சமநிலையில் வைக்க உதவும் பறவைகளைக் காப்பாற்ற இந்த மரங்கள் கைகொடுக்கும்'' என்ற கூடுதல் யோசனையையும் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism