Published:Updated:

விளைநிலங்களை அழித்து விமான நிலையம்..!

கரு. முத்து

விளைநிலங்களை அழித்து விமான நிலையம்..!

கரு. முத்து

Published:Updated:

பிரச்னை

##~##

'சுமார் 2,000 ஏக்கர் அளவுக்கு நிலங்களைக் கையகப்படுத்தி, விமான நிலையம் அமைக்கப்படும்' என்கிற அறிவிப்பு... காரைக்கால் பகுதி விவசாயிகளை கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோட்டுச்சேரி தொடங்கி நெடுங்காடு வரையிலான ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைப்பட்ட பகுதியிலிருக்கும் கிராமங்கள்தான் இதற்காக குறி வைக்கப்பட்டுள்ளன.

''இந்த ஏரியா மொத்தமுமே  முப்போகம் விளையற பூமி. அரசாங்கத்தோட தவறான கொள்கை முடிவுகளால விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டிருக்கு. ஆரம்பத்துல நிலங்களை அழிச்சு, 'தொழில்நகரம்’ கொண்டு வந்தாங்க. அடுத்து, தனியார் துறைமுகம் அமைக்கறதுக்காக அனுமதி வழங்குனதுல நிறைய நிலங்கள் காலியாச்சு. இப்போ, விமான நிலையம்னு சொல்லி நிலங்களுக்குக் குறி வெச்சுருக்காங்க'' என்று ஆதங்கப்பட்டார், சமூக ஆர்வலர் டேவிட்.

விளைநிலங்களை அழித்து விமான நிலையம்..!

விமானநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வரும் காரைக்கால் போராட்டக்குழு அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ''விமான நிலையம் வந்தால், விளைநிலங்கள் அழிவதோடு சுற்றுச்சூழலும் மாசுபடும். முப்போகம் விளையும் நிலத்தில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டுமா?'' என்று ஆவேசக் கேள்வி எழுப்பினார்.

விளைநிலங்களை அழித்து விமான நிலையம்..!

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், அசோக்குமாரிடம் கேட்டபோது, ''அமையவிருப்பது தனியார் விமான நிலையம்தான். இதில் அரசாங்கம் எந்த தலையீடும் செய்யாது. விவசாயிகள் விரும்பினால் நிலத்தை கொடுக்கலாம்.  அவர்களைக் கட்டாயப்படுத்தி நிலத்தை வாங்க அனுமதிக்க மாட்டோம்'' என்றும் சொன்னார்.

பார்ப்போம், அரசாங்கம் இதே உறுதியோடு கடைசி வரை நிற்கிறதா என்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism