Published:Updated:

அன்று, பாலை பூமி... இன்று, பசுமை பூமி!

எஸ்.ராஜாசெல்லம் படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

அன்று, பாலை பூமி... இன்று, பசுமை பூமி!

எஸ்.ராஜாசெல்லம் படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

Published:Updated:

திட்டம்

##~##

தமிழகத்தின் வறட்சி மாவட்ட பட்டியலில் இடம் பிடித்திருக்கும் தர்மபுரியின் பென்னாகரம் தாலூகா... கொஞ்சம் பாவப்பட்ட பூமிதான். கர்நாடகாவிலிருந்து பொங்கிவரும் காவிரி, இங்கேதான் தமிழகத்துக்குள் நுழைகிறது. ஆனால், அதனால் துளிகூட இப்பகுதிக்கு பலன் இல்லாமல்... எப்போதும் வறட்சியின் ஆதிக்கம்தான் இங்கே அதிகம்! இந்த பல்லாண்டு கால சோகத்துக்கு மெள்ள தீர்வு காணும் வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளது... 'நீர்ச்செறிவுத் திட்டம்’. வறண்ட நிலங்களிலெல்லாம், தென்னை, வாழை, நிலக்கடலை, காய்கறி... எனப் பயிர்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றன இப்போது!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட 'டீப்ஸ்’ தொண்டு நிறுவனத்தின் தலைவர் சங்கர், ''50% முதல் 60% வரை மேட்டு நிலமாகவும் அதிக வறட்சியாகவும் உள்ள பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தேர்வு செய்து அந்தப் பகுதிகளில் நீர்ச்செறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், பென்னாகரம் தாலூகா, வட்டுவனஅள்ளி ஊராட்சியை நபார்டு வங்கி தேர்ந்தெடுத்தது.

அன்று, பாலை பூமி... இன்று, பசுமை பூமி!

இங்கே மொத்த நிலப்பரப்பு 1,137 ஹெக்டேர். இதில் சுமார் 1,000 ஹெக்டேர் வானம் பார்த்த பூமிதான். கரடுமுரடான பகுதி என்பதால், மழைநேரத்தில் மட்டும் ஓடைகள்

அன்று, பாலை பூமி... இன்று, பசுமை பூமி!

ஆர்ப்பரித்து ஓடும். மற்ற நேரங்களில் விவசாயத்துக்கு நீரின்றி விவசாயிகள் தவிப்பார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் 11 பெரிய தடுப்பணைகள், 3 சிறிய தடுப்பணைகள், 150 கல் தடுப்பு அணைகள், 11 பண்ணைக் குட்டைகள் மற்றும் 5 லட்சம் மீட்டர் அளவுக்கு தொடர் நீர் உறிஞ்சுக் குழிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான செலவை நபார்டு மற்றும் மாநில அரசு சரிபாதியாக பகிர்ந்து கொள்ள, திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

ஊராட்சிக் கூட்டம் நடத்தி, நீர்ச்செறிவுத் திட்டத்துக்கான தலைவரைத் தேர்வு செய்து, அவர் மூலமே மேற்கொள்ளப்பட்டதால், நூறு சதவிகிதம் தரமாக திட்டப்பணிகள் நடந்துள்ளன. அணைகள், குட்டைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் மழைநீர் தேக்கப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதனால், விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கிவிட்டனர்'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.

நீர்ச்செறிவுத் திட்டத்தின் தலைவர் பெரியசாமி, ''வறட்சியினால ஊரைவிட்டே போனவங்கள்ல்லாம், இப்ப ஊருக்குத் திரும்புற அளவுக்கு இந்தத் திட்டம் சாதிச்சுருக்கு'' என்று ஒரேவரியில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism