Published:Updated:

களத்தில் விகடன்

தானே துயர் துடைத்தோம் !

களத்தில் விகடன்

தானே துயர் துடைத்தோம் !

Published:Updated:

விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி

##~##

'தானே’ புயலின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடலூரில் நாம் திறந்திருக்கும் அலுவலகத்துக்கு கையில் மனுவோடு வந்திருந்தார் வசனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு. நம்மைக் கண்டதுமே கண்கள் கலங்கியவர்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தப் புயலால் எங்கள் வாழ்க்கையே தலைகீழாகி விட்டது. வீட்டுப் படி ஏறி யார் வந்தாலும், படி அளக்கும் நிலையில் இருந்தவர்கள், இன்று அடுத்தவரிடம் கையேந்தும் நிலை. புயல் சாய்த்துப் போட்ட மரங்களை வெட்டி எடுக்கக்கூட முடியாமல், வறுமையில் தவித்துவருகிறோம். எங்கள் நிலத்தைச் சுத்தப்படுத்திக் கொடுங்கள். சேதம் அடைந்த மரங்களை வெட்டிக் கொடுத்து, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் வாழ்விலும் விளக்கேற்றுங்கள்!'' என்று கதறினார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம், அவர் ஊர் போய்ச் சேர்வதற்குள்ளாகவே, அந்த ஊரின் உண்மையான நிலைமையை நேரில் உறுதிப்படுத்திக் கொண்டு, ''உங்கள் தோட்டங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை, விகடன் சார்பில் அப்புறப்படுத்திக் கொடுக்கிறோம்!'' என்கிற வாக்குறுதியைக் கொடுத்தபோது, கிராமத்து மக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

களத்தில் விகடன்

ஏற்கெனவே நடுத்திட்டுக் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் விழுந்துகிடக்கும் மரங்களை, தினமும் 32-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள். இரண்டாவதாக சேர்ந்திருக்கிறது குள்ளஞ்சாவடி அருகேயுள்ள வசனங்குப்பம். இங்கே சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சரிந்துகிடக்கும் முந்திரி மரங்களை அப்புறப்படுத்தும் பணி ஆரம்பமாகியுள்ளது.

''எங்கள் குடும்பத்துக்கு இந்த ஆறரை ஏக்கர் நிலம்தான் சொத்து. இந்த நிலம் கொடுத்த வருமானம்தான் என் அண்ணன் மகன் சுப்ரமணியை இன்ஜினீயராகவும்... மகள் சரஸ்வதியை எம்.பி.ஏ. பட்டதாரியாவும் ஆக்குச்சு. ஆனா, இப்போ எங்க குடும்பத்தோட எதிர்காலமே கேள்விகுறியாக்கிடுச்சு. நாங்க கூட்டுக் குடும்பம்தான். காலையில் மொத்தக் குடும்பமும் வயலுக்கு முந்திரிக்கொட்டை பொறுக்கப்போனா, சாயங்காலம்தான் வீடு திரும்புவோம். இப்போ எங்க போறதுன்னே தெரியல. இப்ப... சிதைஞ்சுபோன மரங்களை வெட்டி எங்க வாழ்க்கையில நம்பிக்கை விளக்கு ஏத்த விகடன் வந்திருக்கறத நினைக்கிறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்று நெகிழ்ந்தார் பயனாளிகளில் ஒருவரான அசோகன்!

இன்னும் ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன.

வாருங்கள் வாசகர்களே... கைகோப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism