Published:Updated:

ஒரு அறை கொடுத்தேன்... 16 லட்சம் திரும்பி வந்தது!

உணர்ச்சித் தீயைப் பற்ற வைத்த உலக விவசாயிகள்ஜி.பழனிச்சாமிபடங்கள் : த.சித்தார்த், க.ரமேஷ்

ஒரு அறை கொடுத்தேன்... 16 லட்சம் திரும்பி வந்தது!

உணர்ச்சித் தீயைப் பற்ற வைத்த உலக விவசாயிகள்ஜி.பழனிச்சாமிபடங்கள் : த.சித்தார்த், க.ரமேஷ்

Published:Updated:
##~##

ர்வதேச விவசாயிகள் கூட்டமைப்பான லா வயா கெம்பசினா (La-Via-Campe-sina), ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டில் கூடி விவசாயப் பிரச்னைகள் பற்றி விவாதிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கூட்டம், தமிழகத்தின் கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் மார்ச் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா, இந்தோனேஷியா, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஆப்பிரிக்கா, கொலம்பியா, நேபாளம் உள்ளிட்ட 27 நாடுகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், 'புவிவெப்பமயமாதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு’  குறித்து தீவிரமாக விவாதிக்கப் பட்டது.

 முதல் இரண்டு நாட்கள் கோவை, சூலூரில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த விவசாய போராளி ஹென்றி சாரஹி பேசும்போது, ''பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வளைத்துப் போட்டு, வணிக விவசாயம் செய்ய எத்தனிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கை இன்றைக்கு ஓங்கி வருகின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு அறை கொடுத்தேன்... 16 லட்சம் திரும்பி வந்தது!

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இவை எளிதாக காலூன்றி வருகின்றன. அரசியல்வாதிகளின் ஆசியுடன் நடக்கும் இச்செயல், சிறு, குறு விவசாயிகளைச் சீரழித்து, பாரம்பரிய வேளாண்மையை அழிக்கும், கிராம மக்களை பன்னாட்டு கம்பெனிகளின் அடிமைகளாக்கும். உலக விவசாயிகள் ஒன்றிணைந்துப் போராடினால் மட்டுமே இதற்குத் தக்க பாடம் புகட்ட முடியும்'' என்று உணர்ச்சித் தீயை பற்ற வைத்தார்.

பாரதீய கிசான் யூனியன் தலைவர் யுத்வீர் சிங், தன்னுடைய பேச்சில், ''அரியானா மாநிலத்தில் உள்ள 9 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை ஏக்கர் 20 லட்சம் ரூபாய் விலையில் விவசாயிகளிடம் வாங்கி போட்டுள்ளது அம்பானி நிறுவனம். இவர்களுக்கெல்லாம் நில உச்சவரம்பு சட்டம் கிடையாதா..?

ஒரு அறை கொடுத்தேன்... 16 லட்சம் திரும்பி வந்தது!

'விவசாய நிலங்கள் பறிபோகிறது தடுத்து நிறுத்துங்கள்’ என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரிடம் சொன்னேன். 'அவன் நிலம் அவன் விற்கிறான். யார் தடுக்கமுடியும்?’ என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார். இதுபோன்ற அமைச்சர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் பகடைக்காயாக இருக்கிறார்கள். இவர்கள் முகத்திரையைக் கிழித்து பறிபோகும் வேளாண்நிலங்களை மீட்போம்'' என்று சூளுரைத்தார்.

கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர், கோடியள்ளி சந்திரசேகர், ''எங்கள் மாநில விவசாயி ஒருவர், வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நெல் அறுவடை இயந்திரம் சரியாக இயங்கவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட கம்பெனியின் நிர்வாகியிடம் புகார் சொன்னபோது, அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அந்த விவசாயி வட்டி கட்ட முடியாமல் புலம்பினார். இயந்திரப் பழுது குறித்து நிர்வாகியிடம் எடுத்துச் சொன்னோம். அவர் மதிக்கவில்லை. ஓங்கி அவர் கன்னத்தில் ஒரு அறைவிட்டேன். உடனே, தன் தவறை ஏற்றுக்கொண்டதுடன், அந்த விவசாயி செலுத்திய பதினாறு லட்ச ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுத்தது அந்த நிறுவனம். இந்த தைரியத்தை எங்களுக்குக் கொடுத்தது விவசாய சங்கம்தான்'' எனவே அமைப்பாக இணைந்து இயங்கும்போது, கிடைக்கும் வலிமைக்கு அருமையான உதாரணத்தைக் காட்டினார்.

கருத்தரங்கு முழுமைக்கும் பொறுப்பேற்றிருந்த உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, ''இந்தக் கருத்தரங்கு... காற்று, நீர், மண் இவைகள் மாசுபடுவதைத் தடுக்கும் ஆற்றல், இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே உள்ளது என்பதை உலகுக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மார்ச் 27-ம் தேதி அன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அருணாசலம் இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்வையிட விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பல வருடங்களாக ரசாயனப் பயன்பாடு இல்லாத, உழவு செய்யாத அந்த மண் ஈரப்பதமுடன் இருப்பதையும், கையால் குழி பறித்தாலே மண்புழுக்கள் தென்படுவதையும் கண்டு வியந்தனர் விவசாயிகள்.

மேலும் மூடாக்கு அமைத்தல், பஞ்சகவ்யா மற்றும் ஆட்டூட்டம் தயாரித்தல், மூலிகைப் பூச்சிவிரட்டியின் பயன்பாடு, ஆடு, மாடு, கோழிகள் அடங்கிய ஒருங்கிணைந்தப் பண்ணையம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது.

கடைசி நான்கு நாட்கள் ஊட்டியில் கலந்துரையாடல் நடைபெற, 31|ம் தேதியுடன் இனிதே நிறைவு பெற்றது சர்வதேச கருத்தரங்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism