Published:Updated:

முன்னறிவிப்பு!

பசுமைக் குழு

முன்னறிவிப்பு!

பசுமைக் குழு

Published:Updated:
##~##

ங்குனி மாதத்தில் அறுவடை செய்யப்படவுள்ள பயிர்களின் விலை பற்றிய முன்னறிவிப்பு; தற்பொழுது நிலவும் வறண்ட தட்பவெட்ப நிலையில் பயிர்களைத் தாக்கக்கூடிய பூச்சிகள் மற்றும் நோய்கள்... அவற்றை தடுக்கும் முறைகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம்.

 பயறு வகைகள் விலையேறாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாட்டில், உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்றவை முக்கிய பயறு வகைகளாகும். 'தாளடி’ பட்டத்தில் விதைக்கப்பட்ட உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் வரை அறுவடை செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் பற்றிய ஆய்வு மூலம்... ஏப்ரல்-மே மாதங்களில் ஒரு கிலோ உளுந்து 34 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புள்ளது. ஒரு கிலோ பாசிப்பயறு 34 ரூபாய் முதல் 36 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புள்ளது. மே மாத இறுதி வரை விலை ஏற வாய்ப்புகள் இல்லை. அதனால், அறுவடை செய்யும் உளுந்து மற்றும் பாசிப்பயறை இருப்பு வைக்காமல் உடனே விற்பனை செய்து விடுவது நல்லது.

முன்னறிவிப்பு!

மிளகாய் இருப்பு வைக்க வேண்டாம்!

கடந்த ஆண்டில், ஒரு கிலோ மிளகாய் வற்றல் 80 ரூபாய் முதல் 90 ரூபாய்  வரை விற்பனையானது. ஆனால், இந்த ஆண்டில் கொள்முதல் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் பற்றிய ஆய்வு மூலம்... வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மிளகாய் வற்றல் ஒரு கிலோ 53 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்பனையாகலாம். தவிர, ஜூன் மாதம் மிளகாய் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இருந்தாலும்... உலரவைத்து, சேமித்து வைப்பதற்கான செலவுகளை ஒப்பிடுகையில், லாபம் அதிகரிக்க வாய்ப்பில்லை. அதனால், வற்றல் மிளகாயை இருப்பு வைக்காமல் விற்பனை செய்வதே புத்திசாலித்தனம்.

பூச்சி மற்றும் நோய் உஷார்... உஷார்!

தமிழ்நாடு  முழுவதும், ஏப்ரல் மாதத்தில் வறண்ட வானிலையே காணப்படும். இந்த சமயத்தில், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன், சாறு உறிஞ்சும் பூச்சி போன்றவற்றின் தாக்குதல் இருக்கும். அவற்றை மஞ்சள் பொறி அமைத்தும், வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

இலைச் சுருட்டுப்புழு ஜாக்கிரதை!

திருநெல்வேலி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. தேனி மாவட்டத்தில், நெற்பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்க, வாய்ப்புகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இரவு

முன்னறிவிப்பு!

நேரங்களில் விளக்குப்பொறி அமைத்தும், வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்தும், இந்தப் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்திக்கு மஞ்சள்பொறி!

தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பருத்திப் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல் காணப்படுகிறது. மஞ்சள் நிறப்பொறி அமைத்தும் வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

கடலைக்கு விளக்குப்பொறி !

கோடை மழை பெய்யாத காரணத்தால் ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள கடலைப் பயிரில் இலைச் சுருட்டுப்புழுத் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப்பொறி அமைத்தும் வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism