Published:Updated:

உதவி : சேர்கிறது, நிதி!

பசுமைக் குழு

உதவி : சேர்கிறது, நிதி!

பசுமைக் குழு

Published:Updated:

யற்கையைக் காக்க, தன்னுயிர் நீத்த திருநெல்வேலி மாவட்டம், மிட்டாதார்குளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் எனும் 'பசுமைப் போராளி’ பற்றி, 'வெறி பிடித்த மணல் கொள்ளையர்... பறிபோன இளைஞனின் உயிர்’ என்ற தலைப்பில், 10.04.12 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியிட்டிருந்தோம்.

உதவி : சேர்கிறது, நிதி!

படுகொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் வருமானத்தை நம்பி... பாலிடெக்னிக், 12-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு என படிக்கும் மூன்று தம்பிகள் மற்றும் 4-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் குட்டித் தங்கை ஆகியோரின் கல்வி, கேள்விக் குறியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருமே பங்கு போட்டுக் கொள்வதுதான்... இயற்கையை அழிக்கத் துடிக்கும் பஞ்சமா பாதகர்களுக்கு விடக்கூடிய எச்சரிக்கையாக இருக்கும் என்ற வேண்டுகோளுடன் அந்தக் கட்டுரையை முடித்திருந்தோம்.

இதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் சிலர், சதீஷ்குமாரின் தந்தை எஸ்டாக் வின்சென்ட் பெயரில் காசோலைகளை நமக்கு அனுப்பி வருகின்றனர். இவை, மொத்தமாக எஸ்டாக் வின்சென்ட் வசம் ஒப்படைக்கப்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism