Published:Updated:

அன்று, தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி !

நா. சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அன்று, தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி !

நா. சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

ஆர்வம்

##~##

''ரொம்ப வருஷமா பஸ் பாடி கட்டுற பிசினஸ்ல இருக்கேன். ஆனாலும், எனக்கு விவசாயத்து மேல ரொம்ப ஆசை. விவசாயம் பண்றதுக்கு யாருகிட்ட ஆலோசனை கேக்கலாம்னு தேடிக்கிட்டே இருந்தேன். அந்த நேரத்துலதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அது மூலமா தெரிஞ்சுகிட்ட விஷயத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சதுல, இப்போ நானே ஒரு 'இயற்கை விவசாயி’யா மாறி நிக்கிறேன்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-இப்படி தன்னைப் பற்றி நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று சிலாகித்துக் கொண்டே இருக்கிறார்... கரூர் நகரைச் சேர்ந்த தங்கராஜ்! இவர், ஆறு ஏக்கர் நிலத்தில், தென்னை மற்றும் காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்!

''பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுகிட்ட விஷயங்களை வெச்சுதான் முதல்ல விவசாயத்துல இறங்க முடிவெடுத்தேன். அந்த சமயத்துல, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல, 'இயற்கை வேளாண்மை’ பத்தின படிப்பை நம்மாழ்வார் நடத்தறார்னு கேள்விப்பட்டேன். உடனே, நானும் என் மருமகள் புவனேஸ்வரியும் அதுல சேந்து மூணு மாசம் படிச்சோம்.

அன்று, தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி !

கரூருக்குப் பக்கத்துல இருக்கற குந்தாணிப்பாளையம் கிராமத்துல ஆறு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல விவசாயத்தை ஆரம்பிக்கற சமயத்துல, 'அனுபவம் இல்லாம இறங்காதீங்க’னு தெரிஞ்சவங்கள்ல்லாம் பயமுறுத்தினாங்க. ஆனாலும்,  பசுமை விகடன், நம்மாழ்வார், அனுபவ விவசாயிகளோட ஆலோசனைனு எல்லாமே நமக்கு பக்கபலமா இருக்கறப்ப, 'நாம எதுக்கு பயப்படணும்’னு துணிஞ்சு இறங்கிட்டேன்.

அன்று, தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி !

தொழுவுரம், ஆட்டு எரு, குப்பைகளை போட்டு நிலத்தைத் தயார் செஞ்சு, தென்னை, மிளகாய், வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர், கத்திரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய்னு நடவு செஞ்சோம். எல்லாம் இப்போ 'தளதள’னு வளந்து நிக்குது'' என்றவர், தான் சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி விவரித்தார்.

''4 அடி அகலத்துல மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒன்றரை அடி இடைவெளியில விதைச்சோம். ஒரே மாதிரியான செடிகள் வரிசையா வராம, மாத்தி மாத்தி வர்ற மாதிரி பாத்துக்கிட்டோம். மூடாக்கு போட்டு, சொட்டுநீர்ப் பாசனம்தான் பண்ணிக்கிட்டிருக்கோம். மூடாக்கு போட்டிருக்கறதால, மண்ல ஈரப்பதம் இருந்துட்டே இருக்குது. இப்படி கலந்து கலந்து செடிகள் வளர்ந்து நிக்கறப்போ... நோய், பூச்சித் தாக்குதல் எல்லாமே குறையுது.

காவல் காக்கும் ஆமணக்கு!

அங்கங்க ஓட்டை போட்ட தென்னை மரக்கட்டைகள நிறுத்தி வெச்சுருக்கோம். அதுல ஆந்தைங்க குடியிருக்குதுங்க. அதனால, எலிகள் பத்தின கவலையே இல்லை. இதுபோக, வயலைச் சுத்தி வேலி மாதிரி ஆமணக்குச் செடி இருக்கு. இதுவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். சின்ன வருமானமும் கிடைக்கும். தென்னைக்கு இடையில வெங்காயத்தையும், உளுந்தையும் ஊடுபயிரா விதைச்சு விட்டோம்.

அன்று, தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி !

இப்போ நல்லா வளர்ந்து வந்துருக்கு. இதில்லாம, எலுமிச்சை, பப்பாளி, மாதுளை, சந்தன மரம், அகத்திக்கீரைனும் அங்கங்க நடவு செஞ்சுருக்கோம். முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே விவசாயம் பண்றதுக்காக ரெண்டு மாடுகள வாங்கியிருக்கோம். மாட்டுச் சிறுநீரை வெச்சு, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலக்கரைசல் தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுக்கிறோம்.

திண்டுக்கல், தவசிமடையைச் சேர்ந்த இன்ஜினீயர் மருதமுத்து பத்தி 'பசுமை விகடன்'ல ஒரு செய்தி வந்துருந்துச்சு. அவர், '60 சென்ட்ல வருஷத்துக்கு 2.5 லட்சம் வருமானம் பாக்குறார்’னு படிச்சதும் ஆச்சரியப்பட்டுட்டேன். அப்பறம் அவர்கிட்ட பேசினதும், அவர் நேர்ல வந்து பாத்து ஆலோசனைகள் சொன்னார். அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி 70 சென்ட்ல சம்பங்கி நட்டுருக்கேன். அதுவும் நல்ல செழிப்பா வளர்ந்துட்டு வருது'' என்ற தங்கராஜ் நிறைவாக,

அன்று, தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி !

''இங்க விளையுற இயற்கைக் காய்கறிகளை நம்மாழ்வார் அய்யாவோட 'வானகம்’ பண்ணையில வாங்கிக்கறாங்க. அதுபோக, கரூர்லயும் விற்பனை செய்றேன். இயற்கை முறையில விளைஞ்சதால இந்த காய்கறிகளுக்கு நல்ல மவுசு இருக்கு. பணம், பிசினஸுனு சுத்திக்கிட்டிருந்த எனக்கு... இப்போதான் மனசுக்கு ஆத்ம திருப்தி கிடைச்சுட்டுருக்கு. அதுக்கு நான் பசுமை விகடனுக்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று விடை கொடுத்தார்!

தொடர்புக்கு,
தங்கராஜ்,
செல்போன்: 99524-22179.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism