Published:Updated:

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசிஓவியம் : ஹரன்

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசிஓவியம் : ஹரன்

Published:Updated:
##~##

தகவல் இல்லாம இந்த உலகத்துல வாழ முடியாது. அதனாலதான், 'தகவல் பெறும் உரிமைச் சட்ட'த்தை அரசாங்கமே கொண்டு வந்திருக்கு. அதுவும் நம்மள மாதிரி விவசாயிங்க, இந்தச் சட்டத்தைப் பத்தி கட்டாயம் தெரிஞ்சு வெச்சுக்கணும். மின்சார இணைப்பு கிடைக்கறதுல காலதாமதம்; வேளாண்மைத் துறை திட்டம்; கால்நடை வளர்ப்புக்குக் கடனுதவி?னு சகலத்துக்கும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். எந்த அலுவலகத்துல, என்ன தகவல் தேவையோ, அந்த அலுவலகத்துல இருக்கிற உயர்அதிகாரிக்கு, தமிழ் மொழியிலயே விண்ணப்பத்தை எழுதி கொடுக்கலாம். மறந்துடாம, விண்ணப்பப் படிவத்துல 10 ரூபாய் கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிடுங்க.

நீங்க தெரிஞ்சுக்க விரும்பற தகவல்கள... தெளிவா, கேள்வி வடிவத்துல எழுதி, பதிவுத் தபால் மூலமா அனுப்புறது நல்லது. உங்கள் விண்ணப்பம் கிடைச்ச 30 நாளுக்குள்ள பதில் வந்து சேர்ந்துடும். அப்படி இல்லனா... உயர் அதிகாரிக்கு மேல்முறையீடு செய்யுங்க. அவரும் தகவல் சொல்லாம காலம் கடத்தினா, கடைசி ஆயுதமா... ('தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், 273/378, அண்ணா சாலை (வானவில் அருகில்), தேனாம்பேட்டை, சென்னை-600018 (தொலைபேசி: 044-24357580, 24312841 tஷீ 24312848)'ங்கற முகவரிக்கு கடுதாசியைத் தட்டிவிடுங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல... விதம்விதமான தொழில்நுட்பம், விதைகள், கருவிகள்னு நிறைய இருக்குது. தீவன விதை எங்க கிடைக்கும்? அறுவடைக் கருவி என்ன விலை? பூச்சித் தாக்குதலுக்கு என்ன செய்யலாம்? இப்படி வகை, வகையான தகவல்கள் தேவைப்படுறவங்க... வேளாண் தொழில்நுட்பத் தகவல் மையத்தோட தொலைபேசி எண்ணைச் (0422-6611315) சுழற்றுங்க. ஒரே போன்ல அத்தனைத் தகவல்களையும் தெரிஞ்சிக்கலாம்.

மண்புழு மன்னாரு !

கால்நடை வளர்ப்பு சம்பந்தமான பயிற்சி , தொழில்நுட்பம் சம்பந்தமான தகவல்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துல கொட்டிக் கிடக்குதுங்க. தேவைப்படும்போது, கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. விரிவாக்கக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை- 600051, (தொலைபேசி: 044-25551579).

'கிராமத்துல உள்ள மக்களுக்கும் வங்கிகளோட சேவைகள் தாராளமா கிடைக்கணும். அதுக்காகத்தான் வங்கிகளை நாட்டுடமை ஆக்குறேன்’னு, பிரதமரா இருந்த இந்திரா காந்தி முழங்கி முப்பது, நாற்பது வருஷத்துக்கும் மேல ஆகுது. ஆனா, இன்னும்கூட கடன் வாங்கறதுக்காக வங்கிக்குப் போனா... வங்கிகளோட பல கிளைகள்ல சரியான மரியாதை தர்றதில்லங்கறதுதான் உண்மையா இருக்கு. இந்த மாதிரி அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும். இப்படி கடன் கொடுக்க இழுத்தடிச்சாலோ, அவமரியாதையா நடத்தினாலோ... உங்க குறையை ஒரு தாள்ல எழுதி, 'வங்கி குறைதீர்ப்பாளர் (Banking Ombudsman)ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, சென்னை-600001  (தொலைபேசி: 044-25399170, 044-25395964) அப்படிங்கற முகவரிக்கு அனுப்பி வைங்க. உங்க கடுதாசிக்கு உரிய மரியாதை கொடுத்து, உடனடியா நடவடிக்கை எடுப்பாங்க.

நம்ம விவசாயிங்களுக்குக் கடுமையா உழைக்கத் தெரியும். ஆனா, ஆபத்து நேரத்துல ஏற்படற இழப்பை சரிகட்ட வழி தெரியாது. வெளிநாட்டுல, ஆடு, மாடு, கோழி வளர்க்குற விவசாயிங்க... இன்ஷூரன்ஸ் எடுக்காம தொழில் தொடங்க மாட்டாங்க. அதேப்போல நாமளும் இனி இன்ஷூரன்ஸ் எடுத்து பழகிக்குவோம். ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் கம்பெனியில விவசாயிகளுக்காவே நிறைய திட்டம் இருக்குது. உங்களுக்குத் தகுந்த திட்டத்துல இன்னிக்கே சேருங்க. இழப்பு ஏற்படறதை ஈடு செய்யுங்க. மேலும் தகவலுக்கு 'வாடிக்கையாளர் சேவை மற்றும் குறை தீர்க்கும் பிரிவு, மண்டல அலுவலகம், ஓரியண்டல் இன்ஷூரன்ஸ், 4-எஸ்பிளனேட், சென்னை-600108.

(தொலைபேசி: 044 - 23458204, 23458211, 23458214, அலைபேசி: 98840-53859) அப்படிங்கற முகவரிக்கு எழுதுங்க.

வேளாண்மை துறை மூலமா நிறைய திட்டத்தைச் செயல்படுத்தறாங்க. விதை, உரம், கருவி, சொட்டுநீர்ப் பாசனம்னு பல விதமான மானியமும் கொடுக்கறாங்க. அந்தத் திட்டத்தைப் பத்தி, உங்க பகுதியில இருக்கிற உதவி வேளாண்மை அலுவலரைக் கேட்டுப் பாருங்க. மழுப்பலா பதில் வந்தா, சோர்ந்து போகாதீங்க. இதோ, இந்த முகவரிக்கு உங்க தேவையை எழுதி அனுப்புங்க. மின்னல் வேகத்துல பதில் வந்து சேரும். அப்படி பதில் கிடைக்காத பட்சத்துல தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமா விண்ணப்பிக்கிறது நல்லதுங்க. தொடர்பு முகவரி: ஆணையர், வேளாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை-600 005 (தொலைபேசி: 044-28583323).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism