Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

இலவசப் பயிற்சிகள்

நீர் மேலாண்மை!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 25-26 தேதிகளில் மதிப்புக் கூட்டிய பழப் பொருட்கள் தயாரிப்பு; 30-ம் தேதி செம்மைக் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம்; மே 8-9 தேதிகளில் மாடித் தோட்டம் மற்றும் அழகுத் தோட்டம் அமைத்தல்; 9-10 தேதிகளில் விஞ்ஞான முறையில் வெண்பன்றி வளர்ப்பு; 10-11 தேதிகளில் கோடைக்கு ஏற்ற நீர் மேலாண்மை; 16-23 வரை பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை கால பயிற்சி; 24-25 தேதிகளில் திருந்திய நெல் சாகுபடி; 30-31 தேதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காஞ்சிபுரம்-603203.

தொலைபேசி: 044-27452371.

ஆடு வளர்ப்பு!

தர்மபுரி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 26-ம் தேதி ஆடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குண்டலப்பட்டி-636703. தொலைபேசி: 04342-288420

இயற்கை வேளாண்மை!

மே 19-ம்தேதி இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இடம்: கிருஷ்ணா தியேட்டர், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம். மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், இயற்கை வேளாண்  விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 97902-64071.

நபார்டு விருது!

தண்டோரா

கிராமப் புறப் பகுதிகளில் உள்ள ஊரக கண்டுப்பிடிப்பாளர்களுக்கு நபார்டு வங்கி விருது வழங்க உள்ளது. பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகள்,எரிசக்தி, தொழில்நுட்பம்... போன்ற துறைகளுக்கு விருது வழங்கப்படும். அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். நபார்டு இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு  இறக்கம் செய்து கொள்ளலாம். மே- 15 ம் தேதிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Chief General Manager, DPD-NFS, NABARD Head Office Mumbai 6th Floor, ‘B’ Wing, C-24, ‘G’ Block Bandra-Kurla Complex, Bandra (East) Mumbai-400 051. Web: www.nabard.org

தமிழ்நாடு மண்டல அலுவலகம், தொலைபேசி: 044-28276088.

கட்டணப் பயிற்சிகள்

அந்தமானில் இயற்கை!

அந்தமான் நிக்கோபார் தீவில் மே 13-ம் தேதி இயற்கை ஈடுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் பாரம்பரிய கால்நடை வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. கட்டணம்

தண்டோரா

200 மட்டும் (மதிய உணவு, கையேடு, குறிப்பேடு வழங்கப்படும்) தமிழ்நாட்டு முன்னோடி விவசாயிகள், கால்நடை நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

ஏற்பாடு: பாரம்பரிய விவசாயக் கூட்டுறவுச் சங்கம், அந்தமான் நிக்கோபார் தீவு மற்றும் பசுமை சிகரம்.

தொடர்புக்கு, செல்போன்: 094342-81598, 094428-16863.

நெல் திருவிழா!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி  வட்டம், ஆதிரெங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் மே 27 -ம் தேதி நெல் திருவிழா நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி.  கோ. நம்மாழ்வார் மற்றும் முன்னோடி விவசாயிகள் கருத்துறை வழங்க உள்ளனர். கட்டணம்

தண்டோரா

50 மட்டும்,  உணவு, தேநீர் வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு மட்டும் பாரம்பரிய நெல் விதை வழங்கப்படும்.

ஏற்பாடு: கிரியேட் அமைப்பு, தொடர்புக்கு, தொலைபேசி: 04369-220954. செல்போன்: 94433-20954.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism