Published:Updated:

ஈ.மு....

ஓராண்டு லாபம்...15 ஆயிரம் மட்டுமே !உண்மையை உடைக்கிறார் துணைவேந்தர்ஆறுச்சாமி,படம்: ஆ. முத்துக்குமாரஅடுத்தக் கட்டம்

ஈ.மு....

ஓராண்டு லாபம்...15 ஆயிரம் மட்டுமே !உண்மையை உடைக்கிறார் துணைவேந்தர்ஆறுச்சாமி,படம்: ஆ. முத்துக்குமாரஅடுத்தக் கட்டம்

Published:Updated:
 ##~##

ஈமு... விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்!’ என்ற தலைப்பில், 10.6.12 தேதியிட்ட இதழில்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துணைவேந்தர் ஆர். பிரபாகரனின் பேட்டி வெளியாகியிருந்தது.

அதையடுத்து நம்மைத் தொடர்பு கொண்ட பிரபாகரன், ஈமு பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

''கடந்த இதழ், 'கால்நடைச் சிறப்பிதழ்’ என்றே வெளியாகியிருந்தது. ஆனால், 'கால்நடைப் பல்கலைக்கழகச் சிறப்பிதழ்’ என்று சொல்லும் அளவுக்கு... ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களின் முகவரிகள், தொலைநிலைக் கல்வி குறித்த விவரங்கள்... என நிறைய தகவல்களைத் தந்து அசத்திவிட்டீர்கள்.

ஈமு குறித்த விரிவான என் பேட்டி வெளியான பிறகு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. ஈமு பற்றி விரிவாகவே மக்கள் கேள்விகளை முன் வைக்கிறார்கள். இந்த அளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருவது ஆரோக்கியமான விஷயம்.

ஈ.மு....

ஈமு... ஏதோ, தேவலோகத்தில் இருந்து வந்த பறவை போலவும், லட்சக் கணக்கில் லாபத்தைக் கொட்டும் பறவை எனவும் விளம்பரப் படுத்தப்படுகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. இரண்டு பால் மாடுகளை நீங்கள் வளர்த்தால், என்ன லாபம் கிடைக்குமோ... அதே அளவு லாபத்தைத்தான், ஒரு ஜோடி ஈமு வளர்ப்பு மூலமும் பெற முடியும்.

அதாவது, எங்கள் ஆய்வின்படி, ஒரு ஜோடி ஈமு மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய்தான் லாபம் கிடைக்கும் (மாதம் 6 ஆயிரம்... மாதம் 11 ஆயிரம்.. மாதம் 12 ஆயிரம் ரூபாய் லாபம் என்று கலர்கலராக கதைவிடப்பட்டு, விவசாயிகளிடம் பணத்தைக் கறப்பதுதான் அதிகமாக நடக்கிறது). இதையெல்லாம் விவசாயிகளும், ஈமு வளர்ப்பில் ஆர்வம் காட்ட நினைக்கும்

ஈ.மு....

மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்'' என்ற துணைவேந்தர்,

''மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். விவசாயிகள் விழித்துக் கொண்டால், போலிகள் ஓடி விடுவார்கள். கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களைத் தொடர்பு கொள்ளாமல்... ஈமு விஷயத்தில் யாரும் எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்'' என்று அக்கறை பொங்கச் சொன்னவர்,

''ஈமு கோழிகள், ஜோடியாக வாழும் பழக்கத்தைக் கொண்டவை. ஒரு ஆணுக்கு ஒரு பெட்டை என்ற கணக்கில்தான் வளர்க்க வேண்டும். தற்போது அந்த முறையில்தான் வளர்த்து வருகிறார்கள். கடந்த இதழில்,

'10 பெட்டைகளுக்கு, 1 ஆண் ஈமு வளர்க்கிறார்கள்’ என்று வெளியாகி விட்டது. 'தற்சமயம் நாங்கள் மேற்கொண்டிருக்கும் செயற்கை முறை கருவூட்டல் ஆராய்ச்சிகள் வெற்றிபெற்றால், மட்டுமே 10 பெட்டைகளுக்கு 1 ஆண் ஈமு இருந்தால் போதும்' என்று அது வெளியாகியிருக்க வேண்டும்'' என்று ஒரு விளக்கத்தையும் சேர்த்தே தந்து முடித்தார் துணைவேந்தர் பிரபாகரன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism