Published:Updated:

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு !

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

Published:Updated:
##~##

வீட்டுக்கு வீடு கைத் தெளிப்பானோ... விசைத் தெளிப்பானோ இருக்கற காலமிது. வழக்கமா வயல்ல, பூச்சிக்கொல்லி/பூச்சிவிரட்டி தெளிச்சவுடனே, தெளிப்பானை மூலையில் போட்டு வெச்சுடுவோம். தெளிப்பான்ல மிச்சமீதி தங்கியிருக்கற திரவப்பொருளால... துரு ஏறி சீக்கிரமே டேங்க் பழுதாகிடும். அதனால வேலை முடிஞ்சதும், தெளிப்பானை, சுத்தமா துடைச்சு வெச்சுடுங்கோ!

மரத்தைப் பயிர் பண்றது, இப்ப ரொம்ப வேகமாகப் பரவிக்கிட்டு இருக்கு. ஆனா, அதுக்காக குழி எடுக்கறதுக்கு ஆள் கிடைக்கறதுதான்... குதிரைக் கொம்பா இருக்கு. குழி தோண்டறதுக்குனே 'ஆக்கர்’னு ஒரு கருவி இருக்கு. இதை டிராக்டர்ல பொருத்தி, குழி தோண்டலாம். சின்ன ரக 'ஆக்கர்’ கருவியும் இருக்கு. பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இந்தக் கருவியை, கையால் பிடிச்சுக்கிட்டே குழி தோண்டலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தறதுக்கு ஒட்டுண்ணி கட்டுங்க'னு வேளாண் பல்கலைக்கழகத்துல சொல்றாங்க. நம்ம விவசாயிங்களும், ஒட்டுண்ணி அட்டையை, வாங்கி வாங்கி வயல்ல கட்டிவிடறாங்க. அதேசமயத்துல, பலபேரு ரசாயன மருந்தையும் அடிச்சிவிடுறதுதான் கொடுமை. இப்படி செய்றதால... ஒட்டுண்ணி அத்தனையும் மாண்டு போயிடுது. தயவு செஞ்சு ஒட்டுண்ணி கட்டற வயல்ல, ரசாயன மருந்தைத் தெளிக்காதீங்க. ஒட்டுண்ணிங்க ஒவ்வொண்ணும் உயிருள்ள ஜீவராசிங்க அப்படிங்கறத மறந்துடாதீங்க!

மண்புழு மன்னாரு !

'சோயா, மொச்சை சாகுபடி நல்ல லாபகரமான பயறு வகை பயிர்தான். அதுல ஜப்பானிய வண்டுத் தாக்குதல் அதிகமா இருக்கும். அதனாலதான் நாங்க அதை சாகுபடி செய்றதில்லை’னு விவசாயிங்க சொல்றது காதுல விழுது. இந்த ஜப்பானிய வண்டைத் துரத்தி அடிக்க, வேம்புக் கரைசல் கைகொடுக்குமுங்க. பத்து லிட்டர் தண்ணியில, நூறு மில்லி வேம்பு எண்ணெயைக் கலந்துடுங்க. கூடவே, ஐம்பது மில்லி காதி சோப்புக் கரைசலையும் ஒட்டும் திரவமா கலந்து தெளிச்சி விடுங்க!

தென்னை இளநீர் உடம்புக்கு சத்தானதுனு எல்லாருக்கும் தெரியும். இதே இளநீரை அவசரத்துக்கு 'குளுக்கோஸ்’ மாதிரி உடம்புல ஏத்த முடியும்ங்கிறது தெரியுமா! மரத்துல இருக்கற இளநீரை கீழே பறிச்சு போடாம, கயித்துல கட்டி ஜாக்கிரதையா இறக்கணும். அப்படி இறக்கின இளநீரை, 'குளுக்கோஸ்’ கிடைக்காத சமயத்துல, உடம்புல அப்படியே ஏத்தலாம். மனுஷங்களுக்கு மட்டுமில்லீங்க... கால்நடைகளுக்கும் இதை பயன்படுத்தலாம்!

'சித்திரை மாசத்து உழவு... பத்தரை மாத்துத் தங்கம்’னு சொல்வாங்க. சித்திரை மாசம் கோடை உழவு செஞ்சா, மண்ணுல இருக்கிற கூண்டுப் புழு, களைச்செடிங்க... எல்லாம் வெயில்ல பட்டுப்போயிடும். இதனால, அடுத்து பயிர் செய்யும்போது, அதுகளோட தாக்கம் குறைஞ்சுடும். சித்திரை மாசம் முடிஞ்சாலும், பரவாயில்லை... வைகாசி வரையிலும் கூட, கோடை உழவு செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism