Published:Updated:

உயராத உருளை... உயரும் மக்காச்சோளம்!

பசுமைக் குழு படங்கள்: என்.ஜி. மணிகண்டன், தி. விஜய்

உயராத உருளை... உயரும் மக்காச்சோளம்!

பசுமைக் குழு படங்கள்: என்.ஜி. மணிகண்டன், தி. விஜய்

Published:Updated:

அலசல்

##~##

ற்போது நிலவும் விலை நிலவரங்களைப் பொறுத்து விளைபொருட்களுக்கு எத்தகைய விலைகள் கிடைக்கும்? இப்போதைய தட்பவெட்ப நிலையில், பயிர்களைத் தாக்கக் கூடிய பூச்சி மற்றும் நோய்கள் எவையெவை... நோய் தடுப்பு முறைகள் என்னென்ன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்தான் தற்போது விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், கீழ்க்கண்ட தகவல்களைத் தன்னுடைய பரிந்துரையாக முன்வைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருளைக்கிழங்கை இருப்பு வைக்க வேண்டாம்!

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் நீர் போகத்தில் (பிப்ரவரி மாதம்) விதைப்பு செய்த உருளைக்கிழங்கு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விற்பனை செய்யப்பட்ட விலை ஆய்வு முடிவுகளின்படி, அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிழங்கு, 14 ரூபாய் முதல்

20 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது. இதற்கு மேல் விலையேற வாய்ப்புகள் இல்லை. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த உருளைக்கிழங்கை இருப்பு வைக்காமல் உடனே, விற்பனை செய்து விடுவது நல்லது.

மக்காச்சோளத்தின் விலை சீராக இருக்கும் !

உயராத உருளை... உயரும் மக்காச்சோளம்!

தைப்பட்டத்தில் விதைத்த மக்காச்சோளம், தற்போது அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. கோழிப் பண்ணை நிறுவனங்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு மட்டுமே தீவனம் இருப்பு வைத்துள்ளதால்... வியாபாரிகள், 'மக்காச்சோளத்துக்கு விலை உயரும்’ என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்றுமதி மற்றும் கோழிப் பண்ணைகளுக்கான தேவை அதிகளவில் உள்ளதால், விலை குறைய வாய்ப்பில்லை. தற்சமயம் ஒரு குவிண்டால் 1,130 ரூபாய் முதல் 1,180 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த 15 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை சந்தையில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்ட விலை ஆய்வு முடிவுகளின்படி... வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு குவிண்டால், 1,150 ரூபாய் முதல் 1,250 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்பு இருக்கிறது.

பூச்சி, நோய் உஷார்... உஷார்!

நாற்றங்கால்... ஜாக்கிரதை!

உயராத உருளை... உயரும் மக்காச்சோளம்!

குறுவைப் பருவ நெல் நாற்றங்காலில்... இலைப்பேன், இலைக்கூட்டுப்புழு மற்றும் இலைப்புள்ளி நோயும், குலைநோயும் தாக்க வாய்ப்புள்ளது. விதைநேர்த்தி செய்த விதையை விதைத்தல், விளக்குப் பொறி அமைத்தல், அடியுரமாக வேப்பம் பிண்ணாக்கு இடுதல், வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தல், வேப்பெண்ணெய் தெளித்தல்... போன்ற நடவடிக்கைகள் மூலம் நாற்றங்காலில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

மாவுப் பூச்சிக்கு முட்டை ஒட்டுண்ணி!

கோடை மழை சீராக எல்லா இடங்களிலும் பெய்யாத காரணத்தால்... வெப்பநிலை அதிகமுள்ள பகுதிகளில் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்க வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகள் தங்களின் பயிரைக் கண்காணித்து, மாவுப்பூச்சித் தாக்குதல் இருந்தால்... அருகில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி அல்லது ஆராய்ச்சி நிலையங்களை அணுகி, 'அசிரோபாகஸ் பப்பாயே (கிநீமீக்ஷீஷீஜீலீணீரீus ஜீணீஜீணீஹ்மீணீ) எனும் ஒட்டுண்ணியை இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

தண்டுத் துளைப்பானுக்கு நூற்புழு கவர்ச்சிப்பொறி !

உயராத உருளை... உயரும் மக்காச்சோளம்!

பெரும்பாலான மாவட்டங்களில் வாழையில் தண்டுத் துளைப்பானின் தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக... நேந்திரன், கற்பூரவல்லி, விருப்பாட்சி, மொந்தன் ஆகிய ரகங்களில் ஐந்து மாதத்துக்கு மேற்பட்ட வயதுள்ள மரங்களை இந்த வண்டு தாக்குகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மரங்கள்... பசுமையை இழந்து, மஞ்சள் நிறமாக மாறி விடும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, வாடல் நோய் தாக்கியதைப் போன்று தோற்றமளிக்கும்.

இத்தாக்குதலைக் குறைக்க, நிலத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஹெக்டேருக்கு ஐந்து இடங்களில்... 'பவேரியா பேசியானா’ (Beauveria bassiana) பூஞ்சணத்தை, வட்ட வடிவப் பொறியில், தலா 10 மில்லி வீதம் தடவி வைப்பதன் மூலம் தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். அல்லது 'ஹெடிரோ ரேப்டைட்டிஸ் இண்டிகா’ (Heterorhabditis indica) என்ற நூற்புழுவை நேரடியாகவோ அல்லது வெட்டப்பட்ட தண்டுப் பொறியிலோ... பொறி ஒன்றுக்கு 10 மில்லி வீதம் தடவி வைப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். இந்தத் தகவலை திருச்சியில் உள்ள 'தேசிய வாழை ஆராய்ச்சி மையம்’ வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு,
வாழை ஆராய்ச்சி நிலையம்,
செல்போன்: 94423-59253.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism