Published:Updated:

ஜொலித்தது 'சோலார்’...

அக்ரி இன்டெக்ஸ் காட்சிகள்ஆர். குமரேசன், ஜி. பழனிச்சாமி, காசி. வேம்பையன்படங்கள்: வி.ராஜேஷ், தி. விஜய்

ஜொலித்தது 'சோலார்’...

அக்ரி இன்டெக்ஸ் காட்சிகள்ஆர். குமரேசன், ஜி. பழனிச்சாமி, காசி. வேம்பையன்படங்கள்: வி.ராஜேஷ், தி. விஜய்

Published:Updated:

கண்காட்சி

##~##

நூறு ரூபாய் விலையிலான கதிர் அரிவாள் துவங்கி, பல லட்ச ரூபாய் விலையிலான அறுவடை இயந்திரங்கள் வரை... கருவிகள் மற்றும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்திரங்களுடன் கோயம்புத்தூர், 'கொடீசியா' அரங்கில் இந்த ஆண்டும் களைகட்டியது 'சர்வதேச வேளாண் கண்காட்சி'! மே 30-ம் தேதி துவங்கி, ஜூன் 3-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சுமார் 300 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசபூபதி (இவர், ஜூன் 3-ம் தேதியுடன் ஒய்வு பெற்றுவிட்டார்) துவங்கி வைத்தார்.

கண்காட்சியில் விவசாயிகளை வெகுவாக ஈர்த்தது.... மின் பற்றாக்குறை பிரச்னைக்கு விடை தரக்கூடிய சூரியசக்தி பம்ப் செட்! கிட்டத்தட்ட 250 அடி ஆழத்தில் இருந்துகூட இதன் மூலம் தண்ணீர் இறைக்க முடியும். பயன்படுத்த இருக்கும் நிலத்தின் அளவு; தண்ணீர் எடுக்கப்பட வேண்டிய தூரம்; கிணற்றின் அமைப்பு மற்றும் பாசன முறை ஆகிவற்றுக்கு ஏற்ப, இந்த சூரியசக்தி மோட்டாரின் விலை மாறுபடும். இதற்கு அரசு மானியமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார்கள் மட்டுமல்லாமல்... வீடுகளில் பயன்படுத்தப்படும் விளக்குகள் உள்ளிட்ட சோலார் பொருட்களும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. பண்ணைகளில், மீன்குட்டைகளின் மீது கோழிகளை வளர்க்கும் முறை குறித்து செய்முறை விளக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்த அரங்கு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

ஜொலித்தது 'சோலார்’...

நீடித்த கரும்பு சாகுபடியில் பயன்படும், ஒரு பரு கரணையை வெட்டி எடுக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த இயந்திரம் மூலமாக, இரண்டு ஆட்கள் ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பரு கரணைகளை வெட்டி எடுக்க முடியும். இதேவேலையை, மனித சக்தியால் மட்டுமே செய்யக்கூடிய இயந்திரமும் அங்கே வைக்கப்பட்டிருந்தது. அதன் விலை... 4 ஆயிரத்து 500 ரூபாய். இதன் மூலம் ஒரு நாளில் சுமார் 2 ஆயிரம் பரு கருணைகளை வெட்டி எடுக்க முடியும்.

இவை மட்டுமல்லாமல்... தென்னை மட்டைகளைத் தூளாக்கும் இயந்திரம், நவீன பால் கறவை இயந்திரங்கள், புல் வெட்டும் இயந்திரங்கள், சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள், டிராக்டர்கள், நடவு இயந்திரங்கள் என அனைத்து அரங்குகளிலும் கூட்டம் ஜேஜே!

ஜொலித்தது 'சோலார்’...

'ஈமு வளர்த்தால்.... குபேரனாகலாம்' என்ற விளம்பரத்தோடு, விவசாயிகளை வலைக்கும் கம்பெனிகள் இந்த ஆண்டு கொடீசியா பக்கம் தலைகாட்டவில்லை. அதேசமயம், 'ஒப்பந்த முறை நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்றபெயரில் புதிகாக கிளம்பியுள்ள சிலர், அரங்குகளை அமைத்திருந்தனர். அங்கும் விவசாயிகள் கூட்டம் அலைமோதவே செய்தது!

அலட்சியமான அரசு துறைகள்!

தோட்டக்கலைத் துறையை தவிர... கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, பொறியியல் துறை, மற்றும் நபார்டு வங்கி என அரசுத்துறை சார்பில் வேறு துறைகள் எதுவும் அரங்குகளை அமைக்காதது... வருத்தமானே விஷயமே! இதனால்... அரசு மானியங்கள், வங்கிக்கடன்கள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடியாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

ஆளே இல்லாத கடையில், டீ ஆற்றிய பல்கலைக்கழக அரங்குகள்!

ஜொலித்தது 'சோலார்’...

வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த குளுகுளு அரங்கில் கருத்தரங்கு நடந்தாலும்... விவசாயிகள் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கருத்தரங்குகள் பற்றி விவசாயிகளுக்குத் தெரியாததும், ஈர்ப்பே இல்லாத கருத்தரங்கின் தலைப்புகளும்தான் காரணம். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்குகளில் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் குறைவாகவே இருந்ததால் அவையும் விவசாயிகளை வெகுவாகக் கவரவில்லை.

ஜொலித்தது 'சோலார்’...

வழிகாட்டிய வல்லுநர்கள்!

'பசுமை விகடன்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில் சந்தா சேகரிப்பு, விகடன் பிரசுர புத்தகங்கள் விற்பனையுடன் அரங்குக்கு வரும் விவசாயிகளுக்கு, தினமும் ஒரு வல்லுநர் மூலமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. புதிய ரகங்கள் உருவாக்குவது சம்பந்தமாக கோயம்புத்துரைச் சேர்ந்த சுப்பிரமணியம்; வருமானம் கொடுக்கும் மரம் வளர்ப்பு பற்றி முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் இரா.ராஜசேகரன்; தென்னை மற்றும் ஊடு பயிர்கள் பற்றி கன்னியாகுமரி மைக்கேல் ஹென்றி; ஒருங்கிணைந்தப் பண்ணையம் பற்றி சேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்; நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி திண்டுக்கல் ராஜ் டேனியல் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர்.

ஜொலித்தது 'சோலார்’...

பசுமை விகடன் அரங்கை நாடி வந்த விவசாயிகளுக்கு மே 31 முதல், ஜூன் 3 வரை நான்கு நாட்களுக்கு புத்தக பரிசு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டந்தோறும் நடத்த வேண்டும்!

ஜொலித்தது 'சோலார்’...

டாக்டர் எஸ்.கே. இளங்கோவன், குவைத்: ''எனக்கு சொந்த ஊரு கோயம்புத்தூர். குவைத் நாட்டுல அரசுப் பொறியாளரா வேலை பாக்குறேன். அக்ரி இன்டக்ஸ் கண்காட்சியைப் பார்க்குறதுக்கான வாய்ப்பு இந்த வருஷம்தான் கிடைச்சது. சோலார் மின்னாற்றல், சாண எரிவாயு, போன்ற மரபுசாரா எரிசக்தி தொடர்பான ஸ்டால்கள் அதிகம் இல்லைங்கறது சின்னக்குறை. மத்தபடி உபயோகமாகத்தான் இருந்தது. மாவட்டவாரியா இதுமாதிரியான கண்காட்சிகளை நடத்தினா... எல்லாரும் பயனடைவாங்க.''

சௌந்தரம் ஜெகநாதன், திருப்பூர்: ''காய்-கனி விதைகள், பூச்செடிகள்னு இருந்த ஸ்டால்கள், என்னை ரொம்பவும் கவர்ந்துடுச்சு. மூலிகை விழிப்பு உணர்வு சம்பந்தப்பட்ட அரங்குகள் இல்லை. அதேமாதிரி, மரம் மற்றும் பழச்செடிகளின் நாற்று விற்பனை ஸ்டால்கள் அதிகம் இல்லை. மத்தபடி எல்லாம் நல்லா இருந்தது.

வாசகர்களுக்கு புத்தகப் பரிசு!

 முதல் பரிசு... ஒரு நபருக்கு; இரண்டாம் பரிசு... மூன்று நபர்களுக்கு, மூன்றாம் பரிசு... ஐந்து நபர்களுக்கு என்று ஒரு நாளைக்கு ஒன்பது பேர் வீதம், நான்கு நாட்களுக்கு 36 பேர் புத்தகப் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். பரிசு பெற்றவர்களின் விவரம்...

முதல் பரிசு: நாகராஜன்-திருப்பூர், எஸ். துரைசாமி-நாமக்கல், எஸ்.அபிராமி-தாராபுரம், சந்திரசேகர்-புதுச்சேரி.

இரண்டாம் பரிசு: எம். ஆனந்தக்குமார்-கோயம்புத்தூர், என். கதிரவன்-கோயம்புத்தூர்,

ஜொலித்தது 'சோலார்’...

எஸ். செல்வராஜ்-மயிலாடுதுறை., ஏ. குப்புசாமி-காஞ்சிபுரம்., சென்னியப்பன்-திருப்பூர்.,

எஸ். கோவிந்தராஜுலு-விழுப்புரம்., எஸ். கௌதம்-பொள்ளாச்சி., எஸ். சிவநேசன்-சொரையப்பட்டு., இரா. லட்சுமணன்-கோயம்புத்தூர்., டி.கே. கனகராஜ்-கோயம்புத்தூர்., ஆர். பெரியசாமி-திருப்பூர்., கே. வரதராஜன்-சேலம்.

மூன்றாம் பரிசு: சிபி. ஸ்ரீகண்ணன்-சென்னை., பாப்பணன்-சேவூர், விகாசினி-கோயம்புத்தூர்.

செ. சசிகுமார்-செல்லிவலசு, டி. ஜனகரத்தினம்-கோபிசெட்டிபாளையம்., பீ. துரைராஜ்-காளப்பட்டி., ஏ.எஸ். வேலுசாமி-கே. வடமதுரை, வி.ரகுநாதன்-மூவானூர்.

பி. பழனிச்சாமி-கோயம்புத்தூர், ஜெமிஆலம்-சென்னை, சு. முத்துசாமி-அருப்புக்கோட்டை, அரங்கநாராயணன்-விழவலம், மயில்சாமி-கருமாபுரத்தார்காடு, டி.சரஸ்வதி-கோயம்புத்தூர், ஏ.சரவணன்-கோயம்புத்தூர், எஸ். சுரேஷ்குமார்-சேனாபதிபாளையம், கே. அறிவழகன்-அக்கையம்பட்டி, கே. கதிரேசன்,-சாத்தூர், கே. ராம்சூர்யா-கள்ளக்குறிச்சி, கே. மோகன்ராஜ்-செம்மிப்பாளையம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism