Published:Updated:

'கரும்பு... ஒரு கையேடு!'

எஸ். ராஜாசெல்லம்

'கரும்பு... ஒரு கையேடு!'

எஸ். ராஜாசெல்லம்

Published:Updated:

அறிமுகம்

##~##

கோயம்புத்தூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான 'கரும்பு இனப் பெருக்கு நிலையம்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பிக்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சமீபத்தில் விழா கொண்டாடப்பட்டதோடு... 'கரும்பு.. ஒரு கையேடு’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டிருக்கிறது!

பல ஆண்டுகள் கரும்பு ஆராய்ச்சி மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளோடு தொடர்புடையவர்கள் இணைந்து  எழுதியிருக்கும் இந்தப் புத்தகம்... கரும்புக் கட்டுகளைப் போலவே கனமாக இருக்கிறது. இதில் கரும்பு ரகங்கள், விதைக் கரணைகள் உற்பத்தி நேர்த்தி, உழவியல் நுட்பம், ஊட்டச்சத்து, உரம் மற்றும் களை மேலாண்மை, அதிக மகசூல் எடுக்கத் துணை செய்யும் மறுதாம்புத் தொழில்நுட்பங்கள், நுண்ணீர்ப் பாசனம், இயந்திரங்களின் பயன்பாடு, ஏக்கருக்கு நூறு டன் எடுக்க உதவும் சாகுபடி நுட்பங்கள், கரும்புக்காகவே செயல்படும் பிரத்யேக இணையதளம், பூச்சிகள் மற்றும் நோய் நிர்வாகம், விவசாயிகளுக்குக் கிடைக்கும் வங்கிக் கடனுதவிகள், விவசாயிகளுக்கானத் திட்டங்கள்... உட்பட 21 தலைப்புகளில் ஏராளமான தகவல்கள், படங்களுடன் இடம் பிடித்துள்ளன.

'கரும்பு... ஒரு கையேடு!'

இந்நூல் பற்றிப் பேசிய கரும்பு இனப்பெருக்கு நிலையத்தின் இயக்குநர் முனைவர். விஜயன் நாயர், ''விவசாயிகளுக்கு மிகவும் பயன் தரும் வகையில் மிக கவனத்துடனும், பொறுப்புடனும் இப்புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறைத் திட்டமான 'உழவர் பங்கேற்பு செயல் ஆராய்ச்சித் திட்டம்’ மூலம் நேரடி கள ஆய்வில் விவசாயிகளே கண்டுணர்ந்த உண்மைகள்தான் இப்புத்தகத்தில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.

கரும்பு விவசாயிகள் ஏற்கெனவே கொண்டுள்ள அறிவோடு, இதில் இடம்பிடித்திருக்கும் அனுபவ அறிவுச் செய்திகளையும் பின்பற்றி சாகுபடியில் இறங்கினால், அது அவர்களை இன்னும் மேன்மைப்படுத்தும்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

'கரும்பு... ஒரு கையேடு!'

இந்நூலின் விலை 200 ரூபாய். கோவையிலுள்ள கரும்பு இனப்பெருக்கு நிலையத்தைத் தொடர்பு கொண்டு இந்த நூலினைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-2472621.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism