Published:Updated:

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

குறைகளை, நிறைகளாக்கும் இஸ்ரேல் ! தூரன்நம்பி

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

குறைகளை, நிறைகளாக்கும் இஸ்ரேல் ! தூரன்நம்பி

Published:Updated:

பயணம்

 ##~##

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான  டெல் அவிவ்... 18-வது சர்வதேச விவசாயக் கண்காட்சி மே 15 முதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

17 வரை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியைக் காண, இளங்கலைப் பண்ணை விவசாயத் தொழில்நுட்ப மாணவர்கள், முன்னோடி விவசாயிகள் என தமிழகத்திலிருந்து 40 பேர் இஸ்ரேல் சென்றோம்.

ஜோர்டான் தலைநகர் அம்மான் தொடங்கி, எகிப்து தலைநகர் கெய்ரோ வரை 6 நாட்கள் கிட்டதட்ட 2,000 கி.மீ. தூரத்துக்கு மேல் பேருந்திலேயே பயணம் செய்ததால், அந்த பாலைவனப் பிரதேசத்தை அங்குலம் விடாமல் கண்களால் படம் பிடித்து, இதயத் திரையில் பதிவு செய்ய முடிந்தது.

ஹிட்லரால் கொத்து, கொத்தாக கொலை செய்யப்பட்ட யூதர்களைத் தவிர, எஞ்சியவர்கள்... உலகின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடினார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் எல்லாம் உலகின் பல மூலைகளிலிருந்தும் திரண்டு எழுந்து, 1948|ம் ஆண்டு உருவாக்கிய சுதந்திர நாடுதான் இஸ்ரேல். வடக்கு-தெற்காக 210 கி.மீ., கிழக்கு-மேற்காக 100 கி.மீ. ஆக மொத்தம் 21,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சின்ன நாடு. முற்றிலும் பாலைவனத்தையும், சுற்றிலும் பகை நாடுகளையும் வைத்துக் கொண்டுள்ள அந்நாட்டின் வளர்ச்சி, வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, விவசாயத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது என்றால்... அதன் சூட்சமம்?

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

எங்கெங்கும்... பாலைவனமும், சுண்ணாம்புப் பாறைகளும்; தப்பித் தவறி மண் இருக்கும் இடத்திலும் ஓரடி ஆழத்துக்கு மட்டுமே மண்; எப்பொழுதும் 50 டிகிரிக்கு மேல் வாட்டி எடுக்கும் வெயில்; ஆண்டுக்கு வெறும் 200 மி.மீ மழைப் பொழிவு மட்டுமே... குறையாக நினைக்கப்படும் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டே, நிறைய நிறைய சாதிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள்.

கடின உழைப்பும், இடைவிடாத ஆராய்ச்சியும்தான் இதற்கு காரணம். உலக வல்லரசான அமெரிக்காவில்... 10 ஆயிரம் நபர்களுக்கு 28 நபர்கள் என்ற அளவில்தான் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இஸ்ரேலில் 10 ஆயிரம் பேருக்கு 120 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாவற்றையும்விட ஊழல் இல்லாத... விவசாய நலன் காக்கக்கூடிய அரசு அங்கு நடக்கிறது என்பதுதான் முக்கியம்!

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

நாட்டின் வடகிழக்கு மூலையில் இருக்கும் ஏரி மட்டும்தான் ஒட்டுமொத்த தேசத்துக்குமான நீராதாரம். நீரின் மதிப்பு தெரிந்ததால்... கடல் போன்ற அந்த ஏரியை நீர்த்தேக்கமாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். 'கலிலீ கடல்’ (ஷிமீணீ ஷீயீ நிணீறீவீறீமீமீ) என்று பெயரிட்டு பராமரித்து வருகின்றனர். கலிலீயிலிருந்து, இஸ்ரேல் முழுக்க கிராமம் கிராமமாக, தோட்டம் தோட்டமாக குழாய் மூலம் இணைப்பு கொடுத்து இருக்கிறது அரசு. அதேபோல, ஜெருசலம் நகரிலிருந்து கிடைக்கும் கழிவு நீரை, பூமிக்குள் விடாமல் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து, குழாய் மூலம் எடுத்துச் சென்று எல்லா தோட்டங்களுக்கும் கொடுக்கிறார்கள். ஆக, ஒவ்வொரு தோட்டத்துக்கும், இரண்டு இணைப்புகள், ஒன்று கலிலீ ஏரியிலிருந்து நன்னீர் இணைப்பு. மற்றொன்று, சுத்திகரிக்கப்பட்ட நீர் இணைப்பு.

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

'நெகவ்’ என்கிற பாலைவனம், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ளது. மிக வறண்ட பகுதி. தலைநகர் டெல் அவிவ்-விலிருந்து இருந்து இரண்டு மணி நேரப் பயணம். பாதையின் இரண்டு பக்கங்களிலும் ஆங்காங்கே பசுமைச் சோலைகள். அறுவடை செய்யப்பட்ட கோதுமைத் தாள்களை கேக்குகள் போல கட்டுகளாகக் கட்டி வைத்திருந்ததை ரசித்தபடியே பயணித்தோம்.

இந்தப் பாலைவனப் பகுதியில் இருக்கிறது 'டெல் லக்கேஷ்’ கிராமம். உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்த வேளையில்தான் அங்கே போய்ச் சேர்ந்தோம். முகமலர்ச்சியுடன் வரவேற்று, 50 ஏக்கர் திராட்சைப் பண்ணையைச் சுற்றிக் காட்டினார் விவசாயி ஈட்டன் ரியர். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ஈட்டன், 75 வயதைக் கடந்த இளைஞர்!

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

டெல் லக்கேஷ்... புனிதத் தலமான ஜெருசலம் நகரைப் பாதுகாக்கும் முக்கியப் பகுதி. இங்கே கோட்டை கட்டி, படை நிறுத்தி ஜெருசலத்தைப் பாதுகாக்கிறார்கள். அந்தப் படையில் வேலை செய்ததால்... ஓய்வுக்கு பிறகு அங்கேயே 50 ஏக்கர் நிலத்தை, குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார் ஈட்டன். இஸ்ரேல் நாட்டின் முதன்மையான மூன்று விவசாயிகளில் இவரும் ஒருவர்.

ஆளில்லா விவசாயம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்... நீரில்லாமல், நிலமில்லாமல் ஒரு பெரிய திராட்சைப் பண்ணையைப் பார்த்து மலைத்து நின்ற நம் விவசாயிகளிடம்... தன்னுடைய விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் விற்பனை ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார் ஈட்டன்!

அவை, அடுத்த இதழில்...

விவசாயிகளின் பயண அனுபவம்...

இஸ்ரேல் பயணத்தில் பங்கேற்ற 'திண்டுக்கல், 'செரு’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி: ''ஓர் அரசு, எந்தெந்த வகையில் எல்லாம் விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்க முடியும் என்பதற்கு இஸ்ரேல் அரசுதான் சிறந்த உதாரணம். அங்கு எந்தத் தனிநபருக்கும் சொந்தமாக நிலங்கள் கிடையாது. விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு அரசே 49 வருட ஒப்பந்தத்தில், குறைந்தக் கட்டணத்தில் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுக்கிறது. தனி நபர்கள் தவிர, 500 விவசாயிகள் முதல் 2 ஆயிரம் விவசாயிகள் வரை கூட்டாக இணைந்து செய்யும் கூட்டுப் பண்ணைகளுக்கும் நிலங்களைக் கொடுக்கிறார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், நிலங்களைக் கொடுத்த முதல் 10 ஆண்டுகள் வரையில்... குத்தகை, தண்ணீர் வரி, வருமான வரி என எதையும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை.

ஒவ்வொரு விவசாயியின் தோட்டத்துக்கும் குழாய் மூலமாக அரசே தண்ணீரைக் கொடுக்கிறது. அதில் ஒரு மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் பயன்படுத்தும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்கிறார்கள். நம் நாட்டு மதிப்புக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரின் விலை 25 ரூபாய்.

ஒரு பால் பண்ணைக்குச் சென்றோம்.

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

400 பால்மாடுகள், 200 கன்றுகள் கொண்ட அந்தப் பண்ணை முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய பண்ணையை 8 ஊழியர்கள் மட்டுமே பராமரிக்கிறார்கள்.

சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் அரசும், அதை முறையாக... ஒற்றுமையுடன் பயன்படுத்திக் கொள்ளும், உழைப்புக்கு அஞ்சாத விவசாயிகளும்தான் அந்நாட்டின் வெற்றிக்கான சூத்திரம். அவர்களைவிட, அதிக தண்ணீர், நிலவளம் நம்மிடம் உள்ளது. அரசு முறையாகத் திட்டமிட்டால், இங்கே மிகப்பெரியப் புரட்சியை நம்மாலும் விவசாயத்தில் ஏற்படுத்த முடியும் என்கிற ஏக்கம் எங்கள்

ஆளில்லாமல்... நீரில்லாமல்... நிலமில்லாமல்...

குழுவில் இருந்த அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.''

திருவள்ளூர் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் மா விவசாயம் செய்துவரும் பாரதி: ''முழுக்க முழுக்க நீர் மேலாண்மையாலதான் இஸ்ரேல் விவசாயிகள் ஜெயிக்கிறாங்க. அங்க ஒரு சொட்டுத் தண்ணிகூட எங்கயும் விரயமானதா நாங்க பார்க்கல. ஒவ்வொரு பண்ணையிலயும் அம்பது ஏக்கருக்கு ஒரு இடம்கிற கணக்குல மூணு மூணு டேங்க் வெச்சுடுறாங்க.

ஒவ்வொரு டேங்குலயும், தழை, மணி, சாம்பல் சத்துக்களைத் தனித்தனியா வெச்சுடுறாங்க. அதுல ஒரு சென்சார் இருக்குது. அது மூலமா, எந்தப் பகுதியில எந்தப் பயிருக்கு என்ன சத்து தேவையோ... அந்தப் பகுதிக்கு மட்டும் குறிப்பிட்ட சத்து, தண்ணியோட போயிடுது. ஏதாவது ஒரு பகுதியில் ஈரப்பதம் குறைஞ்சா கூட நிலத்தோட உரிமையாளர் செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துடும். உடனே அவர் கம்யூட்டர் மூலம் அந்தப் பகுதிக்கான வால்வை திறந்து தண்ணீர் பாய்ச்சலாம்.

முழுக்கமுழுக்க தொழில்நுட்பங்களோட ஆட்சிதான் அங்க நடக்குது. அதனால வேலையாள் பிரச்னை எதுவும் இல்லாம நிம்மதியா சம்பாதிக்கிறாங்க. மண்ணே சரியில்லாத ஒரு பண்ணையில... பாலிதீன் பையில மண்ணை வெச்சு 50 ஏக்கர்ல திராட்சைச் சாகுபடி பண்றாங்கனா பார்த்துக்கோங்க.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism