Published:Updated:

நீரோட்டம் பாருங்கள்... நிலத்தடி நீரை பெருக்குங்கள்!

கரு.முத்து

நீரோட்டம் பாருங்கள்... நிலத்தடி நீரை பெருக்குங்கள்!

கரு.முத்து

Published:Updated:

ஆலோசனை

##~##

''டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும்... நீராதாரங்களைப் பெருக்கவும் 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு'' என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது மிகஅருமையானத் திட்டம்'' என்று வரவேற்பு காட்டும் அதேசமயம், ''வழக்கம்போல, இத்திட்டத்தையும் பெயருக்கு நிறைவேற்றாமல், உருப்படியாக நிறைவேற்றினால்தான், இதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்'' என்ற கவலையையும் கலந்தே சொல்கிறார்கள் விவசாயிகளும், நீர்வள நிபுணர்களும்!

இதைப்பற்றி பேசும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த நிலத்தடி நீர் கண்டுபிடிக்கும் நிபுணர் டாக்டர் அருணன்,    

''இப்போதே நிலத்தடி நீர் மிகவும் அபாயகரமான நிலையில்தான் இருக்கிறது. இப்போதுகூட இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தாவிட்டால்... எதிர்காலம் நிச்சயம் கவலைக்குரியதாகவே இருக்கும். 'தண்ணீர் பிரச்னைக்காகத்தான் மூன்றாவது உலக யுத்தமே வரும்' என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், நமது சந்ததிக்கு நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நீரோட்டம் பாருங்கள்... நிலத்தடி நீரை பெருக்குங்கள்!

போர்வெல் போடும்போது கீழே நீரோட்டம் இருக்கிறதா என்று பார்ப்பது போலவே, மழைநீரை சேமிக்கவும் நீரோட்டம் பார்க்க வேண்டும். இப்படி நீரோட்டத்தைக் கண்டறிந்தபிறகு, ஆறு, குளம், ஏரி என்று நீர்நிலைகளில் இருந்து வீணாக வெளியேறும் உபரி நீரை, நீரோட்டம் உள்ள இடங்களில் குழாய் மூலமாக கொண்டு சேர்க்கலாம். ஓரிடத்தில் சேமிக்கப்படும் நீரானது... பல கிலோ மீட்டருக்கு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும்.

ஒரு குளம் அல்லது ஏரியை... இன்னொரு குளம் அல்லது ஏரியோடு குழாய்கள் மூலம் இணைக்க வேண்டும். நிறைய நீர் வரும் குளத்திலிருந்து அது நிரம்பியதும், குழாய்கள் மூலம் அருகேயுள்ள இன்னொரு குளத்துக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து குளத்தின் நிலத்தடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இப்படி உபரிநீரை வீணாக்காமல் அடுத்தடுத்த இடத்துக்குக் கொண்டு சென்று நிலத்தடியில் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், அதை அப்படியே பூமிக்குள் திருப்பி விட முடியும். நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தி விட முடியும். கடற்கரையோரப் பகுதியிலிருக்கும் நிலங்களில் அடியில் கடல்நீர் ஊடுருவதையும் தடுத்துவிட முடியும்'' என்கிறார் அருணன் உறுதியான குரலில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism